செவ்வாய், 6 மார்ச், 2012

குளிர்விக்கும் கோல்..

குளிர்விக்கும் கோலோடு
சில மந்திரவாதிகள்..
சும்மா இருக்கும்
தொப்பிக்கு்ள்ளிருந்து
கைக்குட்டை.,முயல்குட்டி.,
பூச்செண்டு ., புறா என
வண்ணமயமாய் வெளியெடுத்து..

பெட்டிக்குள்ளிருக்கும் போது
ஒன்றுமற்ற தொப்பியாய் இருப்பது
மந்திரவாதி கைபட்டு
புதையல் பெட்டகமாய்..


மைதாமாவு அடைத்த கண்களோடு
சிலேட்டில் எழுதப் பெறும்
எண்களைச் சொல்வது
அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

ஒற்றை ஆளை
விமர்சனக் கத்தியால்
வெட்டிப் பிரித்து
ஒட்டிக் காட்டும் திறமை
மந்திரவாதிகளுக்கே உரியது.

ஆப்ரா கா டாப்ரா என
எத்தனை முறை சொல்லி
நாம் கைவிட்டாலும்
காலியாகவே கிடக்கிறது
சூதேதும் அறியாத தொப்பி..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஏப்ரல் இரண்டாம் வாரம் உயிரோசையில் வெளிவந்துள்ளது.


8 கருத்துகள் :

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை, வாழ்த்துக்கள்.

கணேஷ் சொன்னது…

விமர்சனக் கத்தியால் வெட்டிப் பிரித்து ஒட்டிக் காட்டும் திறமை! -ஆழமான, அர்த்தம் பொதிந்த வரிகள்! சூதேதும் அறியாத தொப்பி எனக்கான உருவகமாகவும் தோன்றியது மனதில். சூப்பர்ப்க்கா!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சூதேதும் அறியாத தொப்பி..

arumaiyaana pakirvu.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அருமை ..!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சூப்பர் கவிதை!

கீதமஞ்சரி சொன்னது…

தொப்பியின் சூட்சுமம் பிடிபடாதவரை மந்திரமும் அறியாது, தந்திரமும் அறியாது, இடையில் அல்லாடிக்கொண்டிருக்கிறது, பலவீனமான இதயம். கவிதை சொல்லும் கருத்து ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்

நன்றி கணேஷ்

நன்றி ராஜி

நன்றி வரலாற்றுச் சுவடுகள்

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி கீதமஞ்சரி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...