எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 மார்ச், 2012

ரீங்காரம் அடங்காமல்..

வைத்த ஆரவாரம்
அடங்காத பாத்திரமாய்
தன்னைத்தானே
ஏசியபடி வீதிகளில்

எண்ணச் சுருக்கங்களுக்குள்
நீவமுடியாத மடிப்புகளோடு
தலையை அசைத்தபடி
கண்கள் எங்கோ அலைய


வீட்டுக்குள் பகிர முடியாதது
மனசுக்குள் கட்டிப் போட்டது
மூளைக்குள் முடங்கியது
அடங்கமாட்டாமல் வசவாய்

யாரோடு சண்டை
யாரைப் பிடிக்கவில்லை
யாரை எதிர்க்க முடியவில்லை
யாரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை

எந்த கட்டுக்களுமற்று
யார் பார்ப்பார்களோவென்ற
விசாரத்தை ஒழித்து நாய்கள் ஓடும்
மூத்திரச் சந்துகள் வழியாக

வாய்வலிக்க திட்டவும்
காறித் துப்பவும்
சுதந்திரத்தைத் தருகின்றன
ஆளடங்கிய இரவுத் தெருக்கள்.

ரீங்காரம் அடங்காமல்
தெருவிளக்கில் கொசுக்களும்
அசைபோட்டபடி சில மாடுகளும்
உண்ணிகள் கடித்தபடி..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011மே இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

4 கருத்துகள்:

  1. //வாய்வலிக்க திட்டவும்
    காறித் துப்பவும்
    சுதந்திரத்தைத் தருகின்றன
    ஆளடங்கிய இரவுத் தெருக்கள்.//

    பேசக்கூட சுதந்திரமற்ற நிலையை என்னன்னு சொல்றது..

    கவிதை அருமை தேனக்கா..

    பதிலளிநீக்கு
  2. //எண்ணச் சுருக்கங்களுக்குள்
    நீவமுடியாத மடிப்புகளோடு//
    அருமை!

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாந்தி

    நன்றி பாலன்

    நன்றி விஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...