எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 மார்ச், 2012

கோடிப் பேரில்...

கோடிப்பேர் இருப்போம்..
வால்வீசி முட்டினோம்
ஒற்றைக் கதவின் முன்..

என் வாலை வெட்டி
உள்ளிழுத்துக் கொண்டது
திறப்பற்ற கதவு..

ஒற்றைச் சில்லான நான்
பத்துவிதமாகப்
பெருகத் துவங்கினேன்..


நல்லவற்றைப் பார்க்கக்
கண்கள் கிடைத்தது..

அடுத்தவர்க்கு உருக., உதவ
இதயம் பிறந்தது.

சிறகுகள் போல கைகளும்.,
உந்திப் பறக்கக் கால்களும்
முளைத்தன..

என்னை., தானாய்
வளர்த்தது தொப்புள் கொடி....

என்னோடு வளர்ந்த நஞ்சையும்
இழுத்துக் கொண்டு
வெளிவந்தேன்..
சுமந்தவளின் சுமை கழிய..

மூளை சொன்னது
உன்னோடு ஆதிநாளில்
முட்டியவர்களைக்
காணோமே என்று..

என்னை வாழவைத்து
வழியற்றுச் சென்ற அவர்களை
ஆக்ஸிஜனாய் நினைத்து
உள்ளிழுத்து ,”ங்கா., ங்கா..” என
அழத்துவங்கினேன்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஏப்ரல் மூன்றாம் வார இதழ் உயிரோசையில் வெளிவந்தது.


9 கருத்துகள்:

  1. ஒரு உயிரின் தோன்றலை உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்திய வரிகள், அற்புதம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. உயிர் ஜனித்து கருவாகி உருவாகிப் பிறக்கும் ரஸவாதத்தை அழகிய கவிதையாகத் தந்துள்ள தேனக்காவின் வித்தக விரல்கள் பற்றி என் இதயம் நிறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கருவறை
    ரகசியம் பற்றி
    எதோ கிறுக்கி இருக்கேன்

    ஆனால் இப்படி ஒரு கவிதை ம்ம்ம்ம்... சான்சே இல்லங்க சூப்பர்

    ஒரு
    உயிரின் உருவேடுப்பை
    அழகோடும் உணர்வோடும்
    தீட்டப்பட்டு இருக்கு கவிஞரின் கைவண்ணத்தில்

    பதிலளிநீக்கு
  4. என்னை வாழவைத்து
    வழியற்றுச் சென்ற அவர்களை
    ஆக்ஸிஜனாய் நினைத்து
    உள்ளிழுத்து ,”ங்கா., ங்கா..” என
    அழத்துவங்கினேன்.//

    நல்ல உயிர் உள்ள கவிதை உயிரோசையில் !

    எவ்வளவு பொருத்தம்.
    வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  5. அறிவியல் தமிழ் அசர வைக்கிறது...அருமை...

    பதிலளிநீக்கு
  6. நன்றி கீதமஞ்சரி

    நன்றி கணேஷ்

    நன்றி ஸாதிகா

    நன்றி ரிஷ்வன்

    நன்றி செய்தாலி

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி கோமதி அரசு

    நன்றி இளங்கோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...