ஞாயிறு, 11 மார்ச், 2012

ஞாபகம் வருதே.. எனது பார்வையில்

ஞாபகம் வருதே -- ஒரு பார்வை.

என்னுடைய காசு என்று ஒற்றைப் பைசா சம்பாதிக்காத போதிலும்.,
பர்ஸிலிருந்து அலட்சியமாக எடுத்து செலவு செய்து இருக்கிறேன்..
தானம் செய்திருக்கிறேன்..எனக்கென்று ஒரு முகம் இல்லையே
இந்த வீட்டில் என்று முணங்கிக் கொண்டே.. இன்னொரு
தன்னம்பிக்கையாளரைப் பார்க்கும் வரை..


அவர் ஞாபகம் வருதே (காயத்ரி பதிப்பகம் வெளியீடு..விலை
ரூபாய் - 45 ) புத்தகம் எழுதிய திருமதி கிரிஜா ராகவன்..பேர்
கேள்விப்பட்டது போல் இருக்கிறதா. பத்ரிக்கை படிக்கும் பழக்கம்
உள்ள எவரும் இந்தப் பேரை அறியாமல் இருக்க முடியாது..

லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் ஆசிரியரான இவர் தன்
வாழ்வின் ஞாபக அடுக்குகளில் படிந்துள்ளவற்றை பெண்களுக்குத்
தன்னம்பிக்கையூட்டும் விதமாக அளித்திருப்பது அருமை..

தந்தை வழித் தாத்தா பாட்டிக்கு இந்நூலை அர்ப்பணித்திருக்கிறார்
அது மட்டுமல்ல இதற்கு முன்னுரை இவரது அம்மாவே அளித்திருக்கிறார்

சிறுவயதில் கூட்டுக் குடும்பத்தில் அனைவரின் அன்பிலும் வளரும்
குழந்தை வேலைச்சுமையுடன் இருக்கும் தாயன்பைப் புரிந்து
கொள்வதில்லை..அந்த ஏக்கத்திலி்ருந்தே தொடங்குகிறது..எல்லா
ஆசைகளும்..தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் குழந்தையாக..தந்தையும்
பாசத்தை வெளிக்காட்டாததால் ரிங் மாஸ்டராக நினைத்து..வருந்தி
கூட்டுக் குடும்பத்தின் நல்லது கெட்டது எல்லாம் அறிந்து பக்குவப்பட்டு
வளரும் குழந்தையாக இருப்பது குறித்த உரத்த சிந்தனை இருக்கிறது
முதல் சில..அத்யாயங்களில்..

இவரின் தாத்தா திரு. கிருத்திவாஸன் இந்தியன் எஸ்பிரஸில்
ஆசிரியராக பணி புரிந்து இருக்கிறார்,, தினமணியின்
திரு ஏ என் எஸ் அவர்கள் குடும்ப நண்பர்..இவர்கள் இருவரும்
இவரின் இன்றைய எழுத்துப் பணிக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்..

நறுவிசாக உடையணிவது என்பது இவருக்குப் பிடித்த ஒன்று..
எப்போதும் பளிச்..அதற்காக உழைக்கவும் சளைத்தவர் .அல்ல..
தாத்தா வீட்டில் நட்ட தென்னைகளைக் கேட்டால் இவர் பெயர்
சொல்லும்.

சொந்த வீடு சம்பந்தமான நினைவுகள்.., திருமண வாழ்க்கை.,
ஆன்மீக ஈடுபாடு.திருமணம். வங்கிப் பணி.,குழந்தை
பிறப்பு., பின் மாரடைப்பால் ஐந்து வருடங்களி்லேயே கணவரை
இழந்தது.. என அதன்பின்னும் திருப்பங்கள் அதிகம் இவர் வாழ்வில்..

மீண்டும் முளைத்தெழும் தாவரம் போல.., ஃபீனிக்ஸ் பறவை போல
உயிர்த்தெழுந்தவர் இவர்.. ஆல் இண்டியா ரேடியோ., டி வி சிரீயல்.,
டாக் ஷோ., விளம்பரப் படங்கள்., ஆடியோ சிடி தயாரிப்பு., OLD AGE
ASSOCIATION க்காக..(G)old Age என்று பெயரிட்டு Grannery of RIch Experience
என்ற வாசகத்தோடு ஆங்கிலம் தமிழ் இரண்டிலும்,பத்ரிக்கை வெளியிட்டு
இருக்கிறார்..அதற்கு ஊக்கமூட்டி பெரிதும் உதவியவர்..திரு எம் ஆர்.
சுப்ரமணியன்..

முதலில் விசுவை வைத்து சிறந்தது கூட்டுக் குடும்பமா.. தனிக்
குடித்தனமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஏ ற்பாடு செய்தது என
நினைவுப் பகிர்வுகள் ஏராளம்..

தன்னுடைய ரோல் மாடலாய் விளங்கிய தோழி ரேணு., பேபி சித்தி
இன்னொரு சித்தி சியாமளா., வங்கித்தோழி மோகனா என இவர்களிடம்
இருந்து எடுத்துக் கொண்ட நல்லனவற்றைப் பகிர்வது அருமை..

மூத்தோர் சொல் மதித்தல்., கூடி வாழ்வதின் நன்மை..நல்ல
ஆசிரியர்கள் கி்டைத்தது....என பகிர்வுகள் ஏராளம் கற்றுக் கொள்ள..

தளராத தன்னம்பிக்கையோடு மீண்டும் மீ்ண்டும் புதுப்புது முயற்சிகள்
செய்யும் இவர் மீதும் சேறு வீசியது சமூகம்..”இப்படி ஒரு வேலை
தேவையா.. ராத்திரி ஒரு மணிக்கு வந்து இறங்குகிறாளே..எங்கே
போனாளோ“ என்று.. கேட்கவே நடுக்கமாய் இருக்கிறது அல்லவா..?
அனைத்தையும் பிடி சாம்பலாக்கி தூரப் போட்டு விட்டு
“புறப்படு பெண்ணே புவியசைக்க ” என்ற தாரக மந்திரத்தோடு
லேடீஸ் ஸ்பெஷல் என்ற பெண்கள் மாத இதழ் நடத்தி வருகிறார்..

கணவர் சிறிதாகக் கோபித்துக் கொண்டாலே குமுறும் பெண்கள்
மத்தியில் சவாலான வாழ்க்கையில் தனித்து இருந்து மகனை
வளர்த்ததை..”என் பிள்ளை என்னும் லட்சியத்தைப் புருவ மத்தியில்
வைத்தேன்,,அதுவே வாழ்க்கை ஆனது “ என்கிறார்..

இது அனைத்துப் பெண்களுக்கும் ஒருவாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல
தன்னம்பிக்கைப் பாடமும் கூட ..

டிஸ்கி:- ஜூலை 8 2011 வெள்ளிக்கிழமை பூவரசியில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.

6 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//.”என் பிள்ளை என்னும் லட்சியத்தைப் புருவ மத்தியில்
வைத்தேன்,,அதுவே வாழ்க்கை ஆனது “ என்கிறார்..//

சபாஷ். நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

கணேஷ் சொன்னது…

இவரது பெயர் தெரியும், பத்திரிகை ஆசிரியர் என்பது தெரியும். ஆனால் இத்தனை விரிவான தகவல்களை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். தன்னம்பிக்கைப் பெண்மணியாகத் திகழ்ந்து போராட்டங்களுக்கு நடுவே சாதித்திருப்பது மிக உயர்ந்த விஷயம். நல்ல பகிர்வுக்கு நன்றி!

seenivasan ramakrishnan சொன்னது…

அனைத்துப் பெண்களுக்கும் ஒருவாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல
தன்னம்பிக்கைப் பாடமும் கூட ..

தன்னம்பிக்கை தாரகைக்கு வாழ்த்துகள்..

அமைதிச்சாரல் சொன்னது…

//இது அனைத்துப் பெண்களுக்கும் ஒருவாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல
தன்னம்பிக்கைப் பாடமும் கூட//

நிச்சயமாக.. அவரது தன்னம்பிக்கைக்கும் அயராத உழைப்புக்கும் ஒரு சல்யூட்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி கணேஷ்

நன்றி ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன்

நன்றி சாந்தி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...