புதன், 28 மார்ச், 2012

வயதின் கம்பீரம்.

வயதின் கம்பீரம்:-
*****************************

கண்ணாடியைப் பார்ப்பது
இப்போதெல்லாம் பிரியத்துக்கு
உரியதாயில்லை.

எடை மெஷி்ன்
சங்கப்பலகையாய் மிரட்டுகிறது
கனம் அதிகரித்துவிட்டதாக.


அழகு நிலையத்தில்
முடிச்சீரமைப்பு முகசீரமைப்பு
செய்து கருத்தவர் பார்த்தபின்

புருவமுடி மட்டும்
பிடுங்கச்சென்று வலியெடுக்க
பின்னொருநாள் போகவேயில்லை

நரை முடிக்கு கொஞ்சம் கண்மையும்
முகத்துக்கு வெளுப்பு க்ரீமும்
பூசியபின் கொஞ்சம் இளமையாக

எப்போதும் சூடும் சிரி்ப்பை
எடுத்து சூடியபின் இன்னுமிளமையாக
எதற்கு இதெல்லாம் என

வயதின் கம்பீரம் கேள்விதொடுக்க
இன்னும் இளமையாகத்தானிருக்கிறாய்
என்ற சமாதானத்தோடு பொ்ழுதுகள்..

போக்கிவிட எண்ணும்போதெல்லாம்
கடலுக்கும் அலைக்கும் வயதுண்டா
மலைக்கும் காற்றுக்கும் என மலர்கிறது மனது ..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் மூன்றாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


15 கருத்துகள் :

மனசாட்சி™ சொன்னது…

வயதின் கம்பீரம் சரியான சொன்னீர்கள்.

ஸாதிகா சொன்னது…

வயதின் கம்பீரம் அருமையாக கவிதை பாடி இருக்கீங்க தேனம்மை.

செய்தாலி சொன்னது…

//எப்போதும் சூடும் சிரி்ப்பை
எடுத்து சூடியபின் இன்னுமிளமையாக
எதற்கு இதெல்லாம் என//

அருமையான வரிகள்
உண்மையானதும் கூட தோழி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சமாதானத்தோடு பொ்ழுதுகள்..

போக்கிவிட எண்ணும்போதெல்லாம்
கடலுக்கும் அலைக்கும் வயதுண்டா
மலைக்கும் காற்றுக்கும் என மலர்கிறது மனது .

கம்பீரமான அழகான பகிர்வுகள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் கம்பீரமான பதிவு.
பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

//வயதின் கம்பீரம் கேள்விதொடுக்க
இன்னும் இளமையாகத்தானிருக்கிறாய்
என்ற சமாதானத்தோடு பொ்ழுதுகள்..

போக்கிவிட எண்ணும்போதெல்லாம்
கடலுக்கும் அலைக்கும் வயதுண்டா
மலைக்கும் காற்றுக்கும் என மலர்கிறது மனது ..//

வயசாவதென்பது மனசைப்பொறுத்ததுதான்.. அருமை தேனக்கா.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

உண்மை கூறும் அருமையான வரிகள்...

raji சொன்னது…

எழுத்தில் கூட வயதின் கம்பீரம் தெரிகிறது.

வயது நம் மன நிலை பொறுத்தேதானே?
சில சமயங்களில் உடல் நிலை சிலவற்றுக்கு இடம் கொடுக்காது என்பதைத் தவிர உடலுக்கு வயதாவது பற்றி ஒன்றும் இல்லை.உடலின் அழகு எந்த வயதிலும் அப்படியே இருக்க வாய்ப்பே இல்லை.ஆனால் மனதை எந்த வயதிலும் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.மனம் முதிர்ந்தாலும் நல்லதுக்குத்தானே?

மோ.சி. பாலன் சொன்னது…

//கடலுக்கும் அலைக்கும் வயதுண்டா
மலைக்கும் காற்றுக்கும் என மலர்கிறது மனது ..//
உண்மை உண்மை.

இலையுதிர்ந்த மரங்களும் கம்பீரம் தான். சிலருக்கு கருத்த மீசையைவிட வெள்ளை மீசைதான் கம்பீரம் தருகிறது!

கீதமஞ்சரி சொன்னது…

அட, இக்கவிதை படித்தப்பின் நானும் நடக்கிறேனே கம்பீரமாய்! பாராட்டுகள் தோழி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மனசாட்சி

நன்றி ஸாதிகா

நன்றி செய்தாலி

நன்றி ராஜி

நன்றி கோபால் சார்

நன்றி சாந்தி

நன்றி பாசமலர்

நன்றி ராஜி

நன்றி பாலன்

நன்றி கீதமஞ்சரி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Uma சொன்னது…

எப்போதும் சூடும் சிரி்ப்பை
எடுத்து சூடியபின் இன்னுமிளமையாக...மிக அருமையான வரிகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உமா.

Murugeswari Rajavel சொன்னது…

வயதின் கம்பீரம்,மிளிர்கிறது.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...