எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

என்ன தவம் செய்தேன் !!!

*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி .
*என்னை முதன் முதலில் வாழ்த்தி வழியனுப்பிய
என் அன்பு அம்மா திரு எம். ஏ .சுசீலாம்மா
அவர்களுக்கும் .,
*ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
பேராசிரியருக்கும் (அது 40 ஆகி அவர் கிலியை
இன்னும் கிளப்பி இருக்கலாம்).,
* முகபுத்தகத்தில் தன் மனைவி மூலம் தெரிந்து
என்னைத்தேடிய சகோதர சகோதரிக்கு தகவல்
எழுதிய அன்பு நண்பருக்கும் (இவர் பேரைத்தான்
நான் கிளம்பியது முதல் முடிவு வரை
கோஷமாக கேட்டு வந்தேன்) .,

*முகப் புத்தகத்தங்கை அமுதா தமிழுக்கும்.,
*முகப்புத்தக சகோதரர் சுந்தருக்கும் .,
*சிறிய சகோதரர் பாலாசத்யாவுக்கும்.,
* என் வலைப் பூவின் வழி கிடைத்து என்றும்
என்னை ஊக்குவிக்கும் என் பக்கமே இருக்கும்
என் அன்பு சகோதரர் விஜய்க்கும்.,
* நல்ல படியாகச் சென்று வாருங்கள் மக்கா என
வாழ்த்திய பாசக்கார குரலின்., எழுத்தின்.,
சொந்தக்காரருக்கும் .,
* பயணம் சிறக்க வாழ்த்திய ஜெயகாந்தனின்
அன்பு நண்பர் மற்றும் பெண்கள் எல்லோரையும்
எழுத ஊக்குவிக்கும் மருத்துவருக்கும் .,
*துபாய் சென்றாலும் வாழ்த்திச் சென்ற "அவர் "
டைரக்டருக்கும்.,
* ஓவியமா., எழுத்தா அனைத்திலும் சிறப்பாகச்
செய்யும் ஜீவ ஓவியருக்கும் .,
*அவ்வாறே வாழ்த்திய உலக சினிமா வலைப்
பதிவர் வண்ணத்துப் பூச்சியாருக்கும் .,
*நிறைந்த மனத்தோடு வழியனுப்பிய என்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இயக்குனர்
சேரனுக்கும் .,
*என்ன அக்கா பதிவு எழுதலியா என கேட்டு
விசாரித்து இருக்கும் ஷேக்குக்கும்
*என்ன ஆளையே காணோம் என விசாரித்த
எங்கள் ப்லாகுக்கும்.,
* என் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்தும்
அடிப்படையில் ஐயப்பபக்தரான ஆர்குட் நண்பர்
அருண்குமாருக்கும்.,
* அதேபோல் வாழ்த்திய அன்பு நண்பர் உதவி
இயக்குனர் யுவராஜ் அரவிந்துக்கும்.,
* என் கவிதைக்குப் பரிசளிப்பதாகக் கூறிய
இளைய பதிவர் ப்ரியமுடன் இருப்பவருக்கும்.,
* என்னை சகோதரியாக ஏற்று நெகிழவைத்த
பாத்திமா ஜொஹ்ராவுக்கும்.,
* எல்லோரையும் போல அறிமுகமாகி ஒரு சில
கவிதைகளில் தனக்கான இடத்தை தெளிவுபடுத்தி
வாசித்து நேசிக்க வைத்த எழுத்துக்குச்
சொந்தக்காரருக்கும்.... இன்னொன்று முக்கியமாகச்
சொல்ல வேண்டும்... நான் பயணம் புறப்பட்ட நாள்
முதல் தினம் மூன்று வேளையாவது தொலைபேசி
எனக்கு என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும்.,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிக் கூறி தன்
குடும்பத்தோடு வந்து பழமும் .,பழரசமும் அளித்து.,
என்னை அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாகப்
பாவித்து., அவரின் அம்மா, பாட்டி., மாமா மனைவி.,
மாமா மகள்., தங்கை .,தங்கை மகன் தீபக் என
அனைவரும் வந்து .,கண்டு .,களித்து .,உறவாடி ....
அந்த இளைய பதிவரின் அழகிய அம்மா என்
அன்புத்தோழி வாணீ தேவியாருக்கும் ,
*அனைவரும் பொறாமைப்படும்படி என்னை
அன்புடன் அழைத்துச் சென்ற என் பெரிய
தம்பிக்கும் சின்னத்தம்பிக்கும் (சின்னவன்
முன்னிருந்து முன்னெடுத்துச் செல்ல பெரியவன்
பின்னிருந்து பின் செலுத்த ஒரு வழியாக என்
வேண்டுதலை-அயர்ச்சிகளையும் சோர்வுகளையும்
களைந்து தன்னம்பிக்கையூட்டி -நிறைவேற்றி
வைத்த என் உடன் பிறந்த சகோதரர்களுக்கும்.,
*அனைத்து விஷயங்களிலும் ஊடும் பாவுமாய்
இருந்து என் எல்லா நேரங்களிலும் உடன் இருக்கும்
என் பெற்றோருக்கும் .,
*என் அன்புக் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும்.,

நன்றி..! நன்றி ..!! நன்றி....!!!!
இத்தனை பேரும் கிடைக்க என்ன தவம்
செய்தேன் என என்னை எண்ண வைத்து
விட்டார்கள் ....!!!!

47 கருத்துகள்:

  1. முருகன் அருள் பெற்ற கையோடு அவன் தமிழில் குதித்து விளையாடுகிறீர்கள்

    அக்காவின் பதிவு இல்லாமல் ஒரே போர்

    (என்னையும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி எனும் வார்த்தை போதாது)

    வருக வருக

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. பாத யாத்திரைக்கும் பக்கம் இருப்போருக்கும் ப்திவுக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  3. பயணம்/யாத்திரை சிறப்பாக அமைந்தது சந்தோசம். நீங்க இல்லாம கொஞ்சம் வெறிச்சோடிக் கிடந்ததென்னவோ உண்மைதான் சகோதரி.

    பதிலளிநீக்கு
  4. //*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
    வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
    நன்றி .//

    ஆஹா... தெரியாம போயிடுச்சே தேனம்மை... எனிவே... பாதயாத்திரை பயணம் நன்றாக இருந்ததா??

    //ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
    20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
    பேராசிரியருக்கும் //

    பயந்தது பேராசிரியர் மட்டுமல்ல என்பதை இங்கு தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...

    //*துபாய் சென்றாலும் வாழ்த்திச் சென்ற "அவர் "
    டைரக்டருக்கும்.,//

    ஓஹோ... “அவர்”ஆ... ”அவர்” எங்களை துபாயில் சந்தித்ததை ஒரு பதிவாக புகைப்படத்துடன் போட்டுள்ளோம்... அந்த இனிய தருணங்களை வார்த்தையால் வடித்துள்ளோம்... இங்கே வந்து பாருங்கள் தேனம்மை...

    பொன் அந்தி மாலைப் பொழுது – தோழமை டைரக்டர் செல்வகுமார்
    http://edakumadaku.blogspot.com/2010/01/blog-post_28.html

    யப்பா... எம்புட்டு பேர மறக்காம சொல்லி இருக்கீக...

    //(சின்னவன்
    முன்னிருந்து முன்னெடுத்துச் செல்ல பெரியவன்
    பின்னிருந்து பின் செலுத்த ஒரு வழியாக என்
    வேண்டுதலை-அயர்ச்சிகளையும் சோர்வுகளையும்
    களைந்து தன்னம்பிக்கையூட்டி -நிறைவேற்றி
    வைத்த என் உடன் பிறந்த சகோதரர்களுக்கும்.,//

    இருங்க... மூச்ச்சு வாங்குது... ஒரு சோடா குடிச்சுட்டு வர்றேன்....

    //இத்தனை பேரும் கிடைக்க என்ன தவம்
    செய்தேன் என என்னை எண்ண வைத்து
    விட்டார்கள் ....!!!! //

    உண்மைதான்... நல்ல தோழமை கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.... இனி, என்னையும் உங்களின் தோழமை லிஸ்டில் சேர்த்து கொள்ளுங்கள் தேனம்மை...

    நன்றி.................

    பதிலளிநீக்கு
  5. வருக வருக அக்கா!! நன்றி நவிழ் மடலும் அழகாக வரைந்துள்ளீர்கள்!!

    பதிலளிநீக்கு
  6. வருக..ஆன்மீக பாத யாத்திரை...நல்லது

    பதிலளிநீக்கு
  7. ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்.. பாத யாத்திரையா.. பேஷ்.. அதைப் பத்தி எப்ப எழுதப் போறீங்க.. உங்க அனுபவம்.. வாசிக்க ஆசை..

    பதிலளிநீக்கு
  8. அப்படியே சென்ற பொழுது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை ஒரு பதிவாக
    போடலாமே. (பயணம் இனிதே இருந்ததா)

    பதிலளிநீக்கு
  9. ////*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
    வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
    நன்றி .// எனக்கு தெரியாம போச்சு.நல்லபடியாக பயணம் முடிந்ததா தேனக்கா.அதை பத்தியும் கட்டுரை எழுதலாமே...

    ////இத்தனை பேரும் கிடைக்க என்ன தவம்
    செய்தேன் என என்னை எண்ண வைத்து
    விட்டார்கள் ....!!!! //உண்மையிலேயே நீங்க கொடுத்து வைத்தவங்க அக்கா..

    பதிலளிநீக்கு
  10. பயணம் சிறப்பாக முடிந்ததா.

    பயணக்கட்டுரை எப்போ.

    பதிலளிநீக்கு
  11. பயணம் சிறப்பாக இருந்ததுக்கு வாழ்த்துக்கள் அக்கா .

    என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு மிக்க நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  12. நல்லபடியாய் யாத்திரை முடித்து திரும்பியிருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. பயணத்தைப் பற்றி பதிவிடுங்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  13. தேனு வாங்கோ வாங்கோ.சுகமா வந்திட்டீங்கதானே.இனி அனுபவம் எல்லாம் கவிதையா வரும்.பிந்தினாலும் படிச்சுடுவேன்.

    பதிலளிநீக்கு
  14. பழனி பாதயாத்திரையா? நல்லா நடந்திங்க தான? ரெம்ப சந்தோசம்...முருகன் நம்ம எல்லாருக்கும் அருள் புரியட்டும்..

    பதிலளிநீக்கு
  15. பட்டியல் மிக நீளம்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. //அக்காவின் பதிவு இல்லாமல் ஒரே போர்//

    அக்கா பேக் டூ பெவிலியன்..
    இனி பவுண்டரிகள் எதிர் பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  17. நிறைந்த பயணமாயிருந்ததா அக்கா? நேரமிருந்தா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்க.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள்.. இவ்வளவு சொந்தங்கள் கிடைத்ததற்கு.. நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
  19. பாதயாத்திரை முடிந்ததா ? சந்தோஷம்

    நேயத்தால் ஆனது வாழ்வு

    உணர வாய்த்தவர்கள் பேறு பெற்றவர்கள்

    பகிரப் பகிர பெருகுவது நெருப்பு மட்டுமல்ல அதனை ஒத்த தூய்மை உடைய அன்பும்தானே

    :)

    யாத்திரை தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  20. அது தான் காரணமா? சிறப்பான யாத்திரை உஙளுக்கு!
    அனுபவப்பகிர்தல் எங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  21. அப்படி போட்டுத் தாக்குறதுங்ற கலையை இன்று தான் கண்டு கொண்டேன். ........ பய புள்ள கெட்டியா வேறு இருந்துதொலைச்சுட்டும்ல. என்ன நான் சொல்றது.
    மனபாராம் நீங்கியது.

    இப்படிக்கு
    ஆமுக (ஆச்சி முன்னேற்ற கழகம்)
    நிரந்தர பொதுச்செயலாளர்.

    பதிலளிநீக்கு
  22. நல்லபடியாக பயணம் முடிந்ததா எப்ப எழுதப் போறீங்க.

    பதிலளிநீக்கு
  23. Brilliant remembering so many names. But still you have left one name to Thank. Can you guess anc complete the list?

    பதிலளிநீக்கு
  24. வாங்க வாங்க.நல்லாருக்காரா தலைவர்?கேட்டேன்னு சொன்னீங்களா தேனு?

    ஒரு அருமையான பயணக் கட்டுரையின் முன்னுரை வாசனை போல இருக்கு இது.

    மனசை ரொப்பி தாங்க மக்கா.

    பதிலளிநீக்கு
  25. சில நாட்களாக படிக்கவிட்டுப்போன உங்கள் இடுகைகளை இன்று ஒரே மூச்சில் முடித்துவிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  26. இத்தனை பேரும் கிடைக்க நீங்கள் செய்த ஒரே தவம் எழுத்து!

    பதிலளிநீக்கு
  27. நன்றி விஜய் அழகெல்லாம் முருகனே

    நன்றி அண்ணாமலையான் பயப்படப் படாது

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராமலெஷ்மி உங்க பின்னூட்டம் அருமை

    நன்றி நவாஸ் என்னோட இருத்தலை விஷேசமாக்கிட்டீங்க

    பதிலளிநீக்கு
  29. நன்றி கோபி பயப்பட வேண்டாம் அக்காதான்

    அவரை அங்கே பார்த்ததை நாங்களும் படித்தோம் கோபி நல்லா இருந்துச்சு
    இனிமே நீங்களும் என்னோட நண்பர்கள் பட்டியலில் கட்டாயமா இருப்பீங்க

    பதிலளிநீக்கு
  30. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    நன்றி மேனகாசத்யா

    பதிலளிநீக்கு
  31. நன்றி அக்பர்

    நன்றி ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  32. நன்றி செந்தில்நாதன்

    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  33. நன்றி சிவாஜிசங்கர்

    நன்றி பட்டியன்

    பதிலளிநீக்கு
  34. மிக்க நன்றி நேசன் நேயத்தால் ஆனது வாழ்வு எல்லாமே அதுதானே பின் என்ன சொல்ல

    பதிலளிநீக்கு
  35. நன்றி சாந்திலெஷ்மணன்

    நன்றி சுவையான சுவை

    பதிலளிநீக்கு
  36. மிக்க நன்றி ஆச்சிமுன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச்செயலாளருக்கு

    பதிலளிநீக்கு
  37. நன்றி மெய் இன்னும்சிலபேர் விட்டுப் போயிட்டாங்க அவர்களை அடுத்த பதிவுகளில் குறிப்பிடுவேன்

    பதிலளிநீக்கு
  38. நிச்சயமா மக்கா உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  39. பல நாள் கழித்து வந்தாலும் எல்லாவற்றையும் படித்தற்கு நன்றி அப்துல்லா

    பதிலளிநீக்கு
  40. நன்றி செல்வா உங்களையும் பெற்றுத்தந்த எழுத்துக்கு

    பதிலளிநீக்கு
  41. நன்றி ரிஷபன் வர்ற ஞாயிறு வருது

    பதிலளிநீக்கு
  42. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...