எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 டிசம்பர், 2009

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணம்

இது என் நூறாவது இடுகை..
15.11.84 இல் கல்லூரி விடுதியில் எழுதியது..

அப்பா

மனதில் கிடங்குள் புதைத்திருக்கும்
பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது
எனத் தெரியாமல் எல்லா வழிகளிலும்
புலப்படுத்திய அருமை அப்பா...
பிரியத்தை வெற்றுச் சொற்களால்
அலங்கரிக்க விரும்பாமல் செயல்களில்
தன்னை வெளிப்படுத்திக்கொள்வீர்கள்...

நான் உங்களிடம் இருந்தபோது
ஒன்றுமறியாச் சிறுமிதான்...
குட்டி அணிலாய் இருகைகளின் அரவணைப்பில்
பொதித்து வைத்து இருப்பீர்கள்...
ஆனால் நான் இங்கோ செலவுக் கணக்குப்
பார்த்துப் பார்த்தே தேய்ந்து போகிறேன்...
பொருளாதாரம் கணக்கிடாத எங்களின்
கனவுகளைக் கண்டு ஞானியாய்ச் சிரிப்பீர்களே
நினைவிருக்கிறதா உங்களுக்கு...
நான் ஜூரத்தால் கொதித்து நசிந்து
பஞ்சையாய்ப் படுத்து இருந்தேனே...
நான் எடுத்த வாந்தியை வாஞ்சையாய்
அள்ளிக் கொட்டினீர்களே ...
நினைவிருக்கிறதா உங்களுக்கு
எங்களுக்கென்று பட்டும் பாலியெஸ்டரும்
வாங்கிக் குவித்து உங்களை வேஷ்டிக்குள்
மடித்துக் கொள்வீர்களே அப்பா...
உங்களின் நிறம் மட்டும்
வெள்ளையில்லை.. மனசும்தான்..
உங்களின் முகம் மட்டும்
அழகில்லை.. மனசும்தான்..
இருட்டுள் மூழ்கி இருக்கும் இந்த
கட்டடப் பிசாசுகள் எங்களைப் பொதித்து
வைத்து இருக்கும்போது வீட்டில்
உங்களுக்கருகே படுக்க நாங்கள்
சண்டையிட்டது நினைவுக்கு வருகிறது...
உங்களுடையஜனனம் என் நினைவுக் கருவில்
பிறந்துகொண்டே இருக்கிறது...
அப்பா நீங்கள் பாசத்தைப் பரவ
விட்டுக்கொண்டே இருக்கும் வித்யாச ஜன்னல்.
உங்களுக்குப் பிரியமானவை இரண்டு
தொலைந்து விட்டதே என நினைத்தால்
வருத்தமாய் இருக்கிறது அப்பா ..
ஒன்று அப்பத்தா ...இன்னொன்று அன்னை..
வீட்டில் நுழையும்போதே கண்ணுக்குட்டி
என்ற அழைப்போடு நுழைவீர்களே..
உங்கள் நினைவுகளைப் புரட்டிப்
பார்க்க மனம் சலிப்பதில்லை..
அடிக்கடிப் புரட்டி புத்தகத்தின்
ஓரங்கள்தான் நைந்துவிட்டன
எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன...
பரிசுகள் வாங்கிக் குவிக்கும்போது
பரவசமாய்ப் பார்த்து திணறி எப்படி
வெளிப்படுத்துவது எனத்தெரியாமல்
தவிக்கும் அப்பாவே..
மக்கு அப்பா நீங்கள் ..
எனக்கு நீங்கள் கொடுக்கும்
பார்வைச்சிம்மாசனம் ஒன்றே போதுமே..
சொற்செட்டுப் போர்வைகள் எதற்கு...
இத்தனைபேருக்கும் செலவழித்துக் கொண்டு
இதழில் புன்னகையை மட்டும் வைத்துக்
கொண்டிருக்க உங்களால் எப்படி முடிகிறது ..
ஊகூம்... என்னாலெல்லாம் முடியாது...
இந்தச்சுமைகளைத் தாங்கிக் கொள்ள...
இன்னும் ஐந்து மாதங்கள்
அப்புறம் நான் உங்கள்
கர நிழலில் அடைக்கலமாவேன்...
ஞாயிற்றுக்கிழமை என்னைப்
பார்க்கவரும்போதெல்லாம் மெல்லப்
புன்னகைப்பீர்களே அப்பா...
உங்களை நினைத்தால் எனக்குக்
கண்ணில் நீர் கசியவில்லை...
இரத்தம்தான் கசிகின்றது...
எங்களின் நெற்றிகளெல்லாம்
பவுடர்களால் நிரப்பப் படும்போது
உங்களின் நெற்றி மட்டும் பக்தியால்...
நான் தோற்றுவிட்டேன் அப்பா...
நீங்களே ஒரு கவிதை...
உங்களுக்கும் ஒரு கவிதையா...

அம்மா
15 3. 85 எழுதியது

துணிதுணியாய்த் தோசை நெய்யும் அம்மாவே..
நீ எண்ணையாகக் கொப்புளித்திருப்பதுதான்
பிறருக்குத் தெரிகிறது ..எனக்குத் தெரியும்
நீ மாவாகப் பூத்துஇருப்பது..
ஏன் நீ சுட்டுப் போட்ட தோசைகளின்
துவாரங்கள் வழியாக உன்னைத்
துளைத்துப் பார்க்கிறார்கள் ...
போகட்டும் அது நீ எனக்குத் தினமும்
அரக்கில் அணிவிக்கும் சல்லாத்துணி..
கழுத்துவரை தானாமே ருசி ..
எனக்கு தோசை நடக்கும் ராஜபாட்டை
வயிற்றுச்சிம்மாசனம் அனைத்தும் இனிக்கிறதே
உன் மனச்சூல் கழட்டித் தேனையெல்லம்
எனக்கெனவே வழித்தாயோ..
அம்மா நீயொரு புவியறிவியல்வாதிதான்..
மேடுகளையும் பள்ளங்களையும் நதிகளையும்
சஹாராக்களையும் கடல்களையும்
எவ்வளவு சுளுவில் கரண்டி மாவில்
வரைந்து காட்டுகிறாய்...
அம்மா நீ எனக்காகவாவது வெந்து
போயிருக்க வேண்டாமே ...
மாவாகவே பூத்திரேன்....

43 கருத்துகள்:

  1. நூறுக்கு முதல் வாழ்த்து நானா?

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. அப்பாடி கலங்க வைத்துவிடீர்கள் போங்கள்

    நூறு பதிவு என்பது சாதாரண விஷயமில்லை

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. அப்பா - வலியென்றால் அம்மா - கண்ணீர் குளமாக்கிவிட்டீர்கள்

    இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பே இவ்வளவு அழகாக வலியோடு எழுதியிருக்கிறீர்கள்

    அப்போதிலிருந்து தொடர்ந்திருந்தால் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்க முடியும்.

    அதனால் என்ன இப்பொழுதுதான் நூறு பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்களே

    ஆயிரம் பல்லாயிரமாக நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. நன்றி என் அன்புக்கினிய சகோதரர் விஜய்க்கு

    அப்பா அம்மா பற்றி எழுதும்போது நீங்கள்தானே முதலில் வரவேண்டும்

    எனவே உங்க வருகைக்கு மிக சந்தோஷம்

    மனம் மிக நிறைந்துவிட்டது

    எனக்கு மூன்று சகோதரர்கள் ..
    நீங்கள் நாலாவது ..
    வலைத்தளம் பெற்ற குழந்தைகள் நாம்...

    பதிலளிநீக்கு
  5. அருமை இதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தெரியவில்லை எனக்கு. மனது நிரம்பியிருக்கிறது.

    100க்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரின்னு சொன்னவருக்கும் இன்னைக்குதான் பிறந்தநாள். அதைவிட உங்க முதல் கவிதையும் நூறாவது கவிதையாய் உங்கள் தளத்தில் வந்திருப்பதுதான் ரொம்ப ரொம்ப சந்தோசம்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி புதுகைத்தென்றல் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்
    காரைக்குடிக்குப் பக்கத்தில்தான் புதுக்கோட்டை நான் பயணத்தில் மிகவும் ரசிக்கும் ஊர் அது

    மிகவும் கட்டுக் கோப்பாக இருக்கும் அரண்மனை மற்றும் அது சார்ந்த சுற்றுச்சுவர்களும்
    கோவில் கூட சின்னதா பஸ்டாண்டு பக்கம் வரும் மற்ற இடங்கள் நான் போனதில்லை
    ஆனால் ஊர் மிகவும் கரைந்து அதன் புராதன பெருமைகள் மறைந்து வருவது வருத்தம் தருவதாகத்தான் இருக்கு தென்றல்

    பதிலளிநீக்கு
  8. நன்றி நவாஸ்
    அட.. நம்ம தலைவருக்கு இன்னிக்கு பிறந்த நாளா ..?வாழ்த்துக்கள் அவருக்கு...

    பொதுவாக அவர் மனசு தங்கம்க .
    வாழ்க நூறாண்டு

    ஆமாங்க என்னை ஈன்ற முதல் கவிதைகளுக்கும் ஒரு கவிதை

    பதிலளிநீக்கு
  9. plz see this link for "aganaazigai puthga veliyiidu"
    im also dar in the 4th photo...

    http://jackiesekar.blogspot.com/

    பதிலளிநீக்கு
  10. அருமை!அருமை!

    நேர்த்தியான நினைவுகூறல்.

    பதிலளிநீக்கு
  11. 100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் அக்கா!!

    கவிதையை படித்ததும் என்னையும் அறியாமல் கண் கலங்கிவிட்டது.மிகவும் நெகிழ்ச்சியான உணர்வுப்புர்வமான கவிதை ...

    பதிலளிநீக்கு
  12. அம்மா நீ எனக்காகவாவது வெந்து
    போயிருக்க வேண்டாமே ...
    மாவாகவே பூத்திரேன்.... இதே தியாகத்தை ஒரு தாயாக இப்போது நீங்கள் செய்து கொண்டிருப்பீர்கள்.
    இத்தனைபேருக்கும் செலவழித்துக் கொண்டு
    இதழில் புன்னகையை மட்டும் வைத்துக்
    கொண்டிருக்க உங்களால் எப்படி முடிகிறது ..இதே உழைப்பை ஒரு சுமைதாங்கி யாய் இப்போது உங்கள் குடும்பத்திற்கு செய்து கொண்டு இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. //இருட்டுள் மூழ்கி இருக்கும் இந்த
    கட்டடப் பிசாசுகள் எங்களைப் பொதித்து
    வைத்து இருக்கும்போது வீட்டில்
    உங்களுக்கருகே படுக்க நாங்கள்
    சண்டையிட்டது நினைவுக்கு வருகிறது...//

    100கு வாழ்த்துக்கள்...நல்லதொரு நினைவலை..கலங்க வைத்து விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  14. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    நெகிழ்ச்சியான கவிதைகள்.

    தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  15. 100க்கு வாழ்த்துகள்.. செஞ்சுரி போடும்போது இதைவிட அழகான அருமையான படைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கவே முடியாது..

    பதிலளிநீக்கு
  16. நூறு இடுகைகளும் சில நூறு வாசகர்களும் இந்த குறுகிய காலத்தில்..
    ஆச்சர்யப்படுத்தினாலும்,25 வருஷங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையை வாசிக்கும் போது, கிடைத்துள்ள இந்த வாசகர் வட்டம்,இந்த வெளிச்சம் மிகச் சிறியதாகத் தான் தோன்றுகிறது.25 வருசங்களுக்கு முன்னர் ஸைட் அடித்துக் கொண்டிருக்க வேண்டிய வயதில் அப்பாவையும் அம்மாவையும் நினைத்து ஒரு க்விதை..அப்பாவின் செல்லம் போல் தெரிகிறது.நமக்கு முந்தைய தலமுறை அப்பாக்கள் அப்பாவாகவே வாழ்ந்தார்கள்.இன்றைக்கு நாம் அப்பா வேடம் போட்டுக் கொண்டு அதுவும் பொருந்தாமல். வாழ்த்துக்கள் தேனம்மை..மேலும் பல நூறு இடுகைக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை பெறவும் அன்புடன் வெற்றிவேல்

    பதிலளிநீக்கு
  17. நன்றி அப்துல்லா உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்...

    நிஜமாவே பின்னூட்டம் போடலன்னா படிக்கலயோன்னுதான் நான் கவலைப் படுவேன்

    அப்துல்லா இதை இங்க தெளிவுபடுத்துனதுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள்..ரெண்டுமே அருமை..ரசித்து படித்தேன்..

    பதிலளிநீக்கு
  19. தேனம்மை,
    சமீபத்தில் உங்கள் எழுத்துக்களை நிறைய வாசித்துவிட்டேன். ஒரு பிரவாகமாக வரிகள் வந்து விழுகின்றன. பிளாகுகளைத் தாண்டிய கருத்துக்களுடன், வெகுஜன பத்திரிகைகளில் எழுதத் துவங்கினால், நீங்கள் உங்கள் எழுத்துக்குரிய அங்கீகாரத்ததை பெற முடியும்.

    மேலே பல நண்பர்கள் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். நான் புதிதாக பாராட்ட ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு முறை இந்தக் கவிதைகளை வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. கலங்க வைத்துவிடீர்கள்
    தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  21. கலங்கவைக்கும்
    எழுத்துக்கள்... 100-க்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  22. அப்பாவைப் பற்றி ஒரு இடுகைப் போட்டு இருந்தேன். நீங்க இங்கு அப்பா, அம்மாவைப் பற்றி அழகிய கவிதை வடித்துவிட்டீர்கள்.

    என்னவென்று சொல்வதம்மா ...

    மிக அழகான கவிதை. சூப்பர் கவிதை எனபதைத் தவிர வேறுச் சொல்லத் தெரியவில்லை.

    100 வது இடுகைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. முதலில் உங்கள் 100 வது இடுகைக்கு என்
    வாழ்த்துக்கள்!



    குட்டி அணிலாய் இருகைகளின் அரவணைப்பில்
    பொதித்து வைத்து இருப்பீர்கள்...



    பொருளாதாரம் கணக்கிடாத எங்களின்
    கனவுகளைக் கண்டு ஞானியாய்ச் சிரிப்பீர்களே


    அம்மா நீ எனக்காகவாவது வெந்து
    போயிருக்க வேண்டாமே ...
    மாவாகவே பூத்திரேன்




    ம்ம்ம்... அருமை!

    பதிலளிநீக்கு
  24. நன்றி மேனகா
    எனக்கு உங்க பின்னூட்டத்தில் பூங்கொத்துக் கொடுத்து நெகிழ வைத்து விட்டீர்கள்

    உங்களைப் போன்ற சகோதரிகள் கிடைக்க நாந்தான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  25. நன்றி தமிழுதயம் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

    உண்மை தமிழுதயம்
    லட்சத்தில் ஒரு வார்த்தை சொன்னீர்கள்

    நேர்மையாக வாழ்வதே ஒரே தீர்வு

    பதிலளிநீக்கு
  26. வாங்க புலவரே வாங்க

    நீங்களும் வந்துட்டீங்களா

    களை கட்டீருச்சு இல்ல திருவிழா
    வெற்றி பெற வாழ்த்துக்கள் புலவரே
    உங்களுக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சுனு நினைக்கிறேன் சரியா

    பதிலளிநீக்கு
  27. மிக்க நன்றி ராஜா
    உங்களுக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
    சாதி மதம் பாராமல் அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லும் இந்தப் பண்பு எனக்குப் பிடித்து இருக்கிறது

    பதிலளிநீக்கு
  28. மிக்க நன்றி பட்டியன் நூறாவது பதிவா இதைப் போடணும்னு முன்பே நினைத்து இருந்தேன்

    பதிலளிநீக்கு
  29. மிக்க நன்றி வெற்றிவேல் ஸார்

    என்னைத் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  30. நன்றி வினோத் உங்க பாராட்டுக்கு

    உலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும் அருமை
    வினோத்

    பதிலளிநீக்கு
  31. மிக்க நன்றி செல்வா என் எழுத்தை அங்கீகரித்ததற்கு

    ரொம்ப நல்லா இருக்கே தமிழ் உரையாடலை ஒலியாக மாற்றுவது

    செல்வா அன்று நீங்கள் என்னைக் கலாய்த்தபடி "ஒபாமாவுடன் தேனம்மை "உரையாட நேரும் போது இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்னு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  32. நன்றிம்மா நிகே

    செல்லமடி நீயெனக்கு கதை ரொம்ப அருமையா இருக்கேம்மா
    ரொம்ப இயல்பான நடை
    சரளமான எழுத்து
    வாழ்த்துக்கள் டா

    பதிலளிநீக்கு
  33. வாங்க மணிகண்டன் வாங்க
    முதல் முறையா என் வலைத்தளத்துக்கு வர்றீங்க நன்றி
    நூறாவது பதிவு போட்டவுடனே தலைவர் ரசிகர்கள் ரெண்டு பேர் வாழ்த்துறீங்க எனக்கும்

    அவர் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள் நவாஸ் சார்பாவும் அன்புடன் மணிகண்டன் சார்பாவும்

    பதிலளிநீக்கு
  34. நன்றி ராகவன் ஸார்

    என் நூறாவது இடுகையில் உங்க பங்குதான் அதிகம்
    என்னை இந்த அளவு எழுதத் தூண்டியதே நீங்கள்தான்
    உங்கள் பின்னூட்டம் காண வேண்டியே எழுதத் துவங்கினேன்
    ஏறத்தாழ ஒரு 60 பின்னூட்டமாவது போட்டு இருப்பீர்கள் ..நன்றி ராகவன்

    பதிலளிநீக்கு
  35. நன்றி தினேஷ் உங்க பாராட்டுக்கு

    போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என் வெற்றிவேல் ஸார் உங்க இடுகையில் கூறி இருக்கிறார் தினேஷ்

    அதை எனக்கான அறிவுரையாகவும் ஏற்றுக் கொள்கிறேன் வெற்றிவேல் ஸார்

    பதிலளிநீக்கு
  36. தேனு முதலில் அன்பு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைய எழுதி எங்களைக் குழப்பணும்.

    எங்களையும் ஒரு கணம் அப்பா அம்மாவைத் தேடச் செய்துவிட்டீர்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க ஹேமா ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து
    வாழ்த்துக்கு நன்றி ஹேமா
    இவ்வளவு பெரிய இடுகையை படிச்சுக் குழம்பிட்டீங்கன்னு நினைக்கிறேன்
    இனிமே சின்னதா உங்கள மாதிரி போடுறேன்


    மழைத்துளியை காற்புள்ளி அரைப்புள்ளி முற்றுப்புள்ளியா சித்திரிச்சது எனக்குப் பிடித்தது ஹேமா
    கிண்டல் அல்ல.. உண்மைதான்

    பதிலளிநீக்கு
  38. Edhu Kalluriyil ezhudhiyadha..??
    Enn Kall eeralayae thottu vittadhu..!

    eliya nadiyil varthaigalil varnajhalam..,
    endha vana villukku vayadhu kalluri kalam..!

    Vazhthukkal,
    Suresh K.

    பதிலளிநீக்கு
  39. பெற்றோரைப் பற்றி எழுதும்போது நம்மை நாமே இழந்துவிடுகிறோம்.வார்த்தைகளால் அந்த தூய்மையான அன்புக்கும் அற்பணிப்புக்கும் நன்றி சொல்ல முடியாது.கண்கள் என்னை மீறி கலங்குகின்றன.ஒரு குடும்ப நண்பரிடம் உணர்வுகளைப் பகிரும் நிறைவு இருக்கிறது.மனத்தின் கணம் குறைய கொஞ்ச நாட்களாகும்
    நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  40. Thanks SURESH for coming and adding ur comments

    its nice of u
    thanks again
    THENU

    பதிலளிநீக்கு
  41. நன்றி பாலா உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்
    தொடர்ந்து படித்து ஊக்குவித்து வருகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  42. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...