எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2009

தொடர் இடுகை

நண்பர் ராகவன் நைஜீரியா கணக்குப் பிரிவு
மேலாளராக இருக்கிறார்.. அவர் ஒரு தொடர்
இடுகைக்கு அழைத்து இருக்கிறார் ...
நட்பு கொண்ட நல்லவருக்காக இந்த இடுகை ...

1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு:-
இல்லத்தரசி ..
இரு பையன்கள்..
இந்தியாவுக்குள் கணவர் பணி நிமித்தம்
10 .,12 ஊர்களில் இருந்திருக்கிறோம்..

2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு
வரும் (மறக்க முடியாத) சம்பவம் எது ?
1977 தீபாவளி என் அப்பா திருப்பதியில்
மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு
மீண்டு வந்தது ...
மற்றும் தமிழ் வாணன் மறைவு..
(நான் ஐந்தாவது படிக்கும் போதே கல்கண்டு
ரசிகை .. )

3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள் ?
ஷார்ஜாவில் என் சின்னத்தம்பி வீட்டில் ..
என் தம்பி மெய்யப்பன் தங்கக் கம்பி..
அவன் மனைவியும் அப்படியே....

4. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும்
தீபாவளி பற்றி ஒரு சில வரிகள் ?
வீட்டுக்குள் மட்டுமே தீபாவளி ...
பட்டாசு சத்தம் கேட்காத முதல் தீபாவளி ..
பர் துபாயில் இருக்கும் கிருஷ்ணர் .,
சிவன் கோயில் சென்றோம் ஷிர்டி
சாயிபாபாவும் குருத்துவாராவும் இருக்கிறது
ஒரே இடத்தில்...ஆப்ரா என்ற படகில்
சென்றது இனிய அனுபவம் ...

முக்கியமாக எமிரேட் ஹுயுமர் க்ளப் பற்றி
சொல்லணும் தீபாவளி முதல் நாள்..
மாதாந்திர கூட்டம்.. குணா ஸார் , சுரேஷ், சுஜாதா
என்று ஹுயுமர் க்ளப் ஆர்கனைஸர்ஸ்
நன்றாக நடத்தினார்கள் ..சிரித்து சிரித்துப்
புண்ணான வயிறு இன்னும் சரியாகவில்லை .

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக என் அம்மா
துபாய் பற்றி ஒரு கவிதை வாசிக்க
ரசித்தவர்கள் "காரைக்குடி ஆச்சியம்மா
கவிதையெல்லாம் சுப்பரம்மா " என்று பாராட்ட
என் தாயின் முகத்திலே 1000 வாட்ஸ் வெளிச்சம் ..
எங்களை யெல்லாம் நெகிழவைத்த
குணாஸாருக்கு நன்றி ..
(என் அம்மா மரபுக் கவிதைகள், திருமண
வாழ்த்துக்கள், இறைவன் துதிப்பாடல்கள்
எழுதுவதில் வல்லவர்..சும்மாவின் அம்மா
என ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க திட்டமிட்டு
உள்ளார்.....மக்களே தயாரா இருங்க...
சும்மா அதிருதில்ல !!!)

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள்/ அல்லது தைத்தீர்கள் ?
ஆரெம்கேவீ மற்றும் சுந்தரி ஸில்க்கில் ..

6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்
அல்லது வாங்கினீர்கள்?
வாங்கினது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ..
செய்தது பாதாம் ஹல்வா.. கல்கண்டு வடை..
நான் சமையலில் நளபாகியாக்கும்...

7 உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு
வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்?
(உ.ம்.மின்னஞ்சல் ., வாழ்த்து அட்டை., தொலை பேசி.,)
மின்னஞ்சல்தான் அதிகம் ..தொலைபேசியிலும்..
வாழ்த்து அட்டையா ...அப்படின்னா..?
வாழ்த்து அட்டைகளிலே வாழ்ந்தது
ஒரு காலம்..... ஆனா இப்ப பார்த்தே
பல காலம் ஆச்சு...

8. தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா
அல்லதுதொலைக்காட்சி நிகழ்ச்சியில்
உங்களைத் தொலைத்து விடுவீர்களா?
இதையெல்லாம் செய்தால் சமைப்பது யார்.?
.அடுப்படியே திருப்பதி ..!!

.9. இந்த இனிய நாளில் யாருக்கேனும்
ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில் ,
அதைப்பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு
நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர் ,
முகவரி, தொலைபேசி எண்கள், அல்லது
வலைத்தளம், ?
ஊர் விட்டு ஊர் சென்று கொண்டே இருப்பதால்
அருகில் உள்ள அனாதை ஆஸ்ரமம்
எதற்காவது சென்று துணி, இனிப்பு கொடுப்பது
வழக்கம் ..தீபாவளி என்றில்லை.. பிறந்தநாள்,
திருமண நாளிலும் கூட ..

10. நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர் .,
அவர்களின் வலைத்தளங்கள்?
ஜோதிஜி. தேவியர் இல்லம்.
ஜோதிஜியின் சிந்தனையைத் தூண்டும் எழுத்துக்கள் மிகவும் அருமை..
புலவன் புலிகேசி
கடவுளையே கண்டவர்..

23 கருத்துகள்:

  1. தீபாவளி இங்க இருந்தாலும் சந்தோஷமா தான் போய் இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஐயா ராகவன் நைஜீரியாவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களை எனக்கு அறிமுகப்டுத்தியமைக்கு.
    ஒரு முறை உள்ளே வந்தீர்கள். பிறந்த ஒரே ஊர் போல் உங்களையும் என்னையும் இணைத்து உள்ளது நல்ல சிந்தனைகள்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள தொடர் இடுகையில் புலி வாலை பிடித்துள்ளதால் நான் தொடர்ந்து முன்னேறிய ஆக வேண்டிய சூழ்நிலையில்.

    அதனால் என்ன?

    இதே பின் ஊட்டத்தில் இன்று உங்களுக்கு அல்லது தனியாக கடிதம் வாயிலாக அனுப்புகிறேன்.

    பாகிஸ்தானில் போய் நின்று கொண்டு ஜின்னா ரொம்ப நல்லவரு என்று சொன்ன புனிதர்களும், பிரிவினைக்கு படேல் நேரு தான் காரணம் என்று சொன்ன நல்லவர்களும் வாழும் இந்த இந்தியாவில்
    அவர்களின் தரி(சரி)த்திரத்தை நாம் படிக்கும் போது நம்மைப்பற்றியும் படித்துத் தொலையட்டுமே?

    நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  3. பட்டாசு வெடிக்கும் சின்னப்பிள்ள மனநிலை ,,

    உங்களுக்கு வாய்த்த அற்புதமான வெள்ளை மனம் வினோத் ...

    சீக்கிரம் மகமோ ஜகமோ வரட்டும்

    பதிலளிநீக்கு
  4. ஜோதிஜி
    உங்கள் எழுத்துக்கள் ஆழமானவையும் கனமானவையும் இருக்கின்றன...

    எனவே நீங்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ளவே இந்தத் தொடர் இடுகை

    பதிலளிநீக்கு
  5. தோழியே இந்தத் தொடர்பதிவை நான் முன்னரே எழுதி விட்டேன். இருந்தாலும் உங்களுக்காக இதோ அந்தப் பதிவு...

    http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. //அனாதை ஆஸ்ரமம்
    எதற்காவது சென்று துணி, இனிப்பு கொடுப்பது
    வழக்கம் ..தீபாவளி என்றில்லை.. பிறந்தநாள்,
    திருமண நாளிலும் கூட ..//

    உங்களைப் பற்றிய விபரங்களுக்கு நன்றி...திருநாள் என்றில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடருங்கள். அவர்களுக்கு நம்மை விட்டால் யாருமில்லை....

    பதிலளிநீக்கு
  7. வாங்கினது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ..
    செய்தது பாதாம் ஹல்வா.. கல்கண்டு வடை..
    நான் சமையலில் நளபாகியாக்கும்...
    ///////
    சாப்பிடுவதில் நான் கல்யாண சமயல் சாதம் பூததை மிஞ்சிடுவேனாக்கும்...எனக்கும் கொஞ்சம் தள்ளூரது :)

    பதிலளிநீக்கு
  8. நல்லா எழுதி இருக்கீஙக

    சுவாரஸ்யமா....

    பதிலளிநீக்கு
  9. //என் அம்மா மரபுக் கவிதைகள், திருமண
    வாழ்த்துக்கள், இறைவன் துதிப்பாடல்கள்
    எழுதுவதில் வல்லவ//

    கவிதை ஜீன்லயே இருக்கா !!!!

    பதிலளிநீக்கு
  10. அம்மாவ சீக்கிரம் வலைத்தளம் திறக்க சொல்லுங்க
    நான் வைடிங்

    பதிலளிநீக்கு
  11. நன்றி புலவரே

    நீங்க முன்பே வெளி இட்டது தெரியாமல் அழைத்து விட்டேன்

    அதற்கு பதிலாக நீங்கள் இருவரை முன்மொழிந்து விடுங்கள்

    பதிலளிநீக்கு
  12. உண்மை புலவர் புலிகேசி..

    நன்றி உங்கள் பாராட்டுக்கு ..

    பதிலளிநீக்கு
  13. வாங்க தோழி கிருத்திகா

    நல்லா சாப்பிடலாம் வாங்க எங்க வீட்டுக்கு..

    டான்ஸ் ஆடலாமா என்ற உங்கள் சினிமா விமர்சனம் சூப்பர்ப்..

    பதிலளிநீக்கு
  14. நன்றி நேசன் உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  15. ஆமா நேசன்

    அம்மா பெரியம்மா எல்லாருமே நல்லா எழுதுவாங்க..

    நாம இந்த வலையில மாட்டுனதே போதும்னு நினைத்தேன் ..
    ஆனா அம்மாவும் ஆசைப்படுறாங்க.. .

    இப்பவே வீட்டுல மடிக்கணினிக்கு அடிதடி ..

    அவங்களுக்கு புதுசா ஒண்ணு வாங்கி ஆரம்பிக்கனும்னு இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  16. நன்றி பாலா ..

    உங்க வாழ்த்துக்கும் வரவிற்கும்..

    சீக்கிரமே தொடங்கிடலாம்..

    பதிலளிநீக்கு
  17. Periya aachikku en vanakkangal.Ippathaan theriyuthu unga kavithaioda aaniver.

    பதிலளிநீக்கு
  18. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக என் அம்மா
    துபாய் பற்றி ஒரு கவிதை வாசிக்க
    ரசித்தவர்கள் "காரைக்குடி ஆச்சியம்மா
    கவிதையெல்லாம் சுப்பரம்மா " என்று பாராட்ட
    என் தாயின் முகத்திலே 1000 வாட்ஸ் வெளிச்சம் ..
    எங்களை யெல்லாம் நெகிழவைத்த
    குணாஸாருக்கு நன்றி ..///

    காரைக்குடியா!!இவ்வளவு நாள் தெரியையே!! நான் காரைக்குடியில்தான் இருக்கேன்!!

    பதிலளிநீக்கு
  19. வாங்க தேவன் மாயம்..

    உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி .. ..

    உங்கள் புதிய இடுகை உடல் மெலிய விரும்புபவர்களுக்கு மிக அருமையான பதிவு..
    தேவன் மாயம்

    பதிலளிநீக்கு
  20. அட இந்த வருஷம் ஷார்ஜாவுலயா!!

    ஷார்ஜாவுல எனக்கு ஒரு ஆட்டோகிராப்ட் உண்டு :)

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...