எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நாகலிங்கப்பூ

பங்களா தோட்டத்தில்
பூத்து இருந்தது
மரத்தில் அங்கங்கே
நாகங்கள் போல்...

சிறுவயது வியப்பு ..
செறிந்த மகரந்தங்களின்
காவலாய் ஒரு குடை
மழைத்தடுப்பாய்...

மலைப்பாம்பு சுற்றியதான
மணிப்பிளாண்ட் போல்...
மழையில் பூத்த
மரக்காளான்களும் குடையுடன்...

சிவன் சூடுவதா
மன்மதனின் அடையாளமா
பார்த்தால் பரமபதப் பாம்பு...

மேலே ஏற ஏற
உன்னைக் கீழிறக்கிக்
கொண்டு இருக்கிறது
அதன் கடிவாய்..

காமத்தின் கேள்விக்குறி
காதலின் ஆச்சர்யக்குறி
உலகின் உயிர் உற்பத்தி
குண்டலியின் மோட்சநிலை...

கல் தூண் சிற்பங்களிலும்
சகஸ்ராரச் சக்கரங்களிலும்
சிவனின் சிரசிலும்...

மாலின் படுக்கையாயும்
ஞானத்தின் மூலமாகவும்
பேரின்ப முக்தியாகவும்..

பதஞ்சலியின் யோகமுத்திரையாய்
மூச்சை அவதானித்து
சிரசின் மேல்
அமிர்த தாரை...

உன்னை ஒளிக்க ஒளிக்க
தேய்க்கப்பட்டதான் விளக்கிலிருந்து
வெளிக்கிளம்பி பூதம்
உன்னயறியாமல்...

தீயை அணைத்துப் படுத்து
இருக்கிறாய் மறைப்பதாய்...
மரங்களுக்கு மேலே அதன் புகை
அனைவருக்கும்...

12 கருத்துகள்:

  1. அற்புதம்

    தியான பயிற்சி கவிதை போல

    என்பூவை கவிதை ஆக்கியமைக்கு நன்றி

    தொடர்பதிவு போட்டுவிட்டேன் சகோதரி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. விஜய் மிக்க நன்றி விஜய்

    அருமையாக உண்மையாக எழுதி உள்ளீர்கள்

    ஆனல் எஸன்ஷியல் திங்ஸையும் எப்போதும் உடன் இருப்பதையும் விட்டுவிடலாம்

    மற்றபடி அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன் வரிகளை.. வாழ்த்துக்கள்..

    http://niroodai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. நன்றி மலிக்கா

    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  5. உங்களின் வழக்கமான படிமங்கள் தேடி வருபவர்கள்
    கொஞ்சம் ஏமாற்றமாக உணரலாம். ஆனால் மிக ஆழமாக பயணிக்கிறது கவிதை

    உஙகள் கவிதைகளின் பரிணாமமும் பரிமாணமும்
    வியப்புக்குரியன

    :)

    பதிலளிநீக்கு
  6. நன்றி நேசன்

    உங்கள் வார்த்தைகள் எனக்கு நிம்மதிஅளித்தன...

    வேறு தளத்துக்குச் செல்ல முயற்சிக்கும் எனக்கு உங்கள் பின்னூட்டம் சிறந்த கிரியா ஊக்கி...

    பதிலளிநீக்கு
  7. I am wondering about how many flowers you might have written. This one has more than imagination and articulation. May the garlend of flowers continue to decorate the gods.

    - Anbu Thambi

    பதிலளிநீக்கு
  8. Mazhaiyil pootha marakaalankalum kudaiyudan-nice Thenammai.Ungal pathivuhal mihavum thahavalkal ullathaaha ullathu,Cheers ,keep it up.

    பதிலளிநீக்கு
  9. ஆழமான சிந்தனையோடு அழகான நாகலிங்கப்பூ தேனு.

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஹேமா
    உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...