எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 நவம்பர், 2009

கல் வாழைப்பூ

வாசலோடும் ஜன்னலோடும்
மட்டுமே நான் ..
வாகைசூடி அணிய அல்ல....

செங்கொற்றக்கோல் போல்
செம்மையாய் உயரமாய்
இருந்தாலும்...

அகநானூறில் நீ யாரோடோ கூட
உன் புறநானூறுக்கான
பெருமை நான் ...

பரணியோடும்
புலவர்களோடும்
வீரத்தழும்புகளோடும் நீ...

மஹாராணிகளோடு
மஞ்சத்தில் நீயிருக்க உன்
சேடிப்பெண்ணாய் நான்....

இதயப் பாதக்குறடு உனக்காய்...
ஆனால் என் வாசம்
உன் வாசலில்....

கல்லிலும் முள்ளிலும்
உனைக்காத்து செந்நிற
ஆரஞ்சாய்ப் பூத்து......

லிப்டைப்போல்
நீ விரும்பும் தளத்துக்கெல்லாம்
உனைச் சுமந்து ...

உதறுவதுபோல்
அவசரமாய் விரைந்து
வெளியேறும் நீ....

எனை உயிராய்க்
கருதாவிட்டாலும்
பரவாயில்லை...

திரை ஓவியமாகவாவது
தொங்க விடு
உன் வீட்டுள்ளே....

நீ வாழும் நாள் முழுதும்
உனைக் கண்டு
களித்திருக்க....

13 கருத்துகள்:

  1. இதயப் பாதக்குறடு

    மிக அழகான வார்த்தை

    கல் வாழை கழிவு நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி விஜய்

    தற்போதுதான் கேள்விப்படுகிறேன் கழிவு நீரை சுத்தப்படுத்தும் என்று ...

    முன்பே தெரிந்து இருந்தால் அதையும் சேர்த்து இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. Vaahai soodi aniya illai & un purananootru perumai naan,nice Thenammai.Kalvaazhai azhagu thani.

    பதிலளிநீக்கு
  4. //இதயப் பாதக்குறடு//

    பெரிகார்டியல் திரவம் கைவிட்டது என் இதயத்தை இந்த வார்த்தைகளில்

    பதிலளிநீக்கு
  5. நன்றி நேசன்
    உங்கள் முன் நாங்கல்லாம்
    சும்மா...
    ஒன்னுமேயில்லை...

    பதிலளிநீக்கு
  6. அருமை மிக அருமையான கவிதை!!

    பதிலளிநீக்கு
  7. அழுத்தமான வார்த்தகள்.. நடை அருமை..

    பதிலளிநீக்கு
  8. அடக் கடவுளே ஒரு பூவையும் விட்டு வைக்கிறதாயில்லையா தேனு !எதை எடுத்தாலும் அழகாக கோர்த்துக்கொள்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி சூர்யா

    உங்கள் உலக சினிமாவும் நந்தவனமும் அருமை

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஹேமா
    உண்மையை சொல்லனும்னா உங்க மாதிரி சீரியஸா எழுத வரமாட்டேங்குது

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...