எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 நவம்பர், 2009

கருங்குவளை

ஹிஜரப் அணிந்த
ஹாஸல்நட்டே ...
வான் ஹூட்டனே..

கண்ணாடிக்குடுவைக்குள்
கருமணல் ஒட்டகம் போல் ..
அல்மஜாஸின் கார்னிஷில்
அழகாய் வந்தாய்.. .

நாவல்பழக்கண்ணே..
என் நைஜீரிய பெண்ணே..
கருநிற மோஹினியே..
ப்ரபஞ்சத்தின் கருந்துளையே..
எனைக் கண்களால் விழுங்க..

கட்டுறுதியான இரும்பை
உடுத்த க்ரானைட் போல
பளபள தேகம்..

கருந்திராட்சை ரஸத்தைக்
கண்களில் ஊற்றி
பெல்லி டான்ஸைவிட
போதை ஏற்றினாய்..

சக்கரவியூகத்து
அபிமன்யுவாய் உன்
பார்வைக்குள் நான்...

ஒரு புன்னகையாலே
பற்ற வைக்கிறாய் என்னை..
கொழுந்து விட்டு நான்..

ஓராயிரம் பின்னல்கள்
உன் தலையில்..
உன் மேலான
என் மனப் பின்னலாய்..

உன் தொடுகைக் காசில்
ஜுயூக் பாக்ஸாய்
அதிர்ந்தது நெஞ்சம்...

க்ரிக் பார்க்கின்
கேபிள் காரில் நீ எனை
உரசிக்கடக்க...

ஒளதும் பாய்ஸனும்
சானலும் சேர்ந்து அடிக்க...
மிதக்கும் பாலமாய் நான்...

களவாடப்பட்டதே தெரியாமல்
நான் கொள்ளையடிக்கப்பட்டு
உன்பின்..

17 கருத்துகள்:

  1. படிக்க படிக்க english வார்த்தைகள் கூட அழகா இருக்குங்க

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. அருமைங்க...
    சும்மான்னு பேரை வச்சிகிட்டு..
    எம்மான்னு வாயை பொளக்க வச்சிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  3. தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகள் தான் இந்த கவிதையில் அதிகமாக இருக்கின்ற மாதிரி இருக்கு.

    கருங்குவளை காதல் அருமை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜய்
    உங்க வாழ்த்துக்கு தொடர்ந்து பின்னூட்டம் இடுவதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. வாங்க கலையரசன் ..

    உங்க வாழ்த்துக்கு நன்றி.. .

    ஆனாலும் உங்க மாதிரி கலாய்க்க யாராலயும் முடியாதுங்க..

    உங்க 3 இன் 1 பதிவை படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சு அடிபட்டுருச்சுன்னா பார்த்துக்குங்க

    பதிலளிநீக்கு
  6. வாங்க ராகவன் ஸார் ..

    உங்களை ரொம்ப நாளா என் வலைப் பதிவுல காண முடியவில்லையே..

    நன்றி ஸார் உங்க வாழ்த்துக்கு..

    பதிலளிநீக்கு
  7. //சக்கரவியூகத்து
    அபிமன்யுவாய் உன்
    பார்வைக்குள் நான்.../

    இப்படி அவள் பார்வைக்குள்ளேயே
    நிரந்திர இடம் கிடைக்குமெனில்
    சக்கரவியூகதிலிருந்து வெளி வரும் மந்திரம்
    மறந்ததுகூட பல அபிமன்யுக்களுக்கு வரமாகும்.

    //களவாடப்பட்டதே தெரியாமல்
    நான் கொள்ளையடிக்கப்பட்டு
    உன்பின்.. //

    --)

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஈ . ரா

    உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    உங்க படிக்கதவன் வலைத்தளமும் அருமை

    பதிலளிநீக்கு
  9. தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகள் தான் இந்த கவிதையில் அதிகமாக இருக்கின்ற மாதிரி

    பதிலளிநீக்கு
  10. தேனு சில கவிதைகள் புரியாவிட்டாலும் அழகும் நேர்த்தியும் அன்பும் பூக்களுக்குள் கொட்டிக் கிடக்கிறது.அதை ரசிக்கவே ஓடி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. காரைக்குடி உங்கள் சொந்த ஊரா ?

    உங்களைப் பற்றி விரிவாக எழுதுவதாக கூறியுள்ளீர்கள் ஜோதிஜி

    அறிய விழைகிறேன்

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஹேமா உங்கள் தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  13. "களவாடப்பட்டதே தெரியாமல்
    நான் கொள்ளையடிக்கப்பட்டு
    உன்பின்"


    அழகான வரிகள்!

    வாழ்கையின் நிறைய நேரங்களில்
    இப்படி தான் திருடப்படுகிறோம்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி தினேஷ் பாபு

    உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...