எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 நவம்பர், 2009

மயில் மாணிக்கம்

கண்கள் இரண்டும்
பளபள கன்னங்களும் இணைந்து
பட்டாம் பூச்சியானதொரு முகம்...

சிறகடிக்கும் தேன்சிட்டு
செம்பிள மேனி
செந்நிறத் தும்பி...

காமட்டின் வால் போல்
குழந்தைகள் அவள் பின்...
ராணித்தேனி....

ஓராவின் ஒளிப்பிழம்பு
வெள்ளிக் கிழங்கு
பாலிவினைல் வழுமை...

கண்கள் இரண்டும்
ஐஸ்க்ரீமில் விழுந்த
ரஸ்மலாய் போலும்
குலோப் ஜாமூன் போலும்...

பப்பேயில்
பார்வைகளின் சாணையில்
அவள் இன்னும் மெருகேறி...

டிஎன் ஏக்களும்
ஆரென் ஏக்களும்
புதிப்பித்த க்ளோனாய்...

கண்களும் இதழும்
காண்பவரை விழுங்கும்
பெர்முடாஸ் முக்கோணம்...

அரக்குப் பட்டோலை
தங்கமலை ரகசியம்
மெக்கன்னாஸ் கோல்டு...

சிவந்த ஒற்றைப்பூவாய்
தொட்டியில் இருந்து
தூணில் கொடியாய் ....

வெண்ணை பொம்மை
வாசனைப் பந்து
கிராபிக்ஸ் பார்பி....

பப்பே ஹாலின்
ஐயாயிரம் சதுரத்திலும்
ஆயிரம் கண்களிலும் அவள்
நிரம்பித் ததும்பி...

உறங்கு முன்னான
அனைவரின் கண்ணுள்ளும்
பதிந்த ஒற்றை முகமாய்
மயில் மாணிக்கமாய் அவள்.....

8 கருத்துகள்:

  1. அருமை.அறிவியல் கலந்த வார்த்தை அமுது.

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. 20:20 கிரிக்கெட் மாதிரி அடிச்சு ஆடுறீங்க

    நாங்கெல்லாம் டெஸ்ட் மேட்ச் ஆடுறோம்

    மயில் மாணிக்கம் இதுவரை பார்த்து கேட்டறியா பூ

    இனிமேல் பூக்களின் படத்தை போடுங்கள். நாங்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. தேனு இதெல்லாம் விளங்கனும்ன்னா நிறையப் புத்தகங்கள் படிக்கணும் நான்.மயில் மாணிக்கம்ன்னாலும் பூவா ?விஜய் சொன்னதுபோல அவைகளின் படங்களை முடிந்தால் போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. மயில் மாணிக்கம் இப்ப தான் கேள்விப்படுறேன்..
    இருந்தாலும் அருமை..

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹேமா
    மயில் மாணிக்கம் மிகச் சிறிய பூ
    தொட்டியில் வளர்ப்பது ...
    சின்னதாக சிவப்பாகப் பூத்து இருக்கும் டேபிள் ரோஸ் போல...

    பதிலளிநீக்கு
  6. நன்றி சூர்யா

    செட்டி நாட்டு சினிமாவும் மஸ்ஜித்தும் பற்றிய இடுகை அருமை

    பதிலளிநீக்கு
  7. நன்றி விஜய்
    உங்கள் தொடர்ந்த வருகைக்கும் பாராட்டுக்கும்

    பதிலளிநீக்கு
  8. நன்றி வினோத்
    அந்த மகத்துப்பெண் யாரு
    உங்க ஜகத்தை ஆளுகிறவரா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...