எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2009

வாழைப் பூ

கீரைக்காரியின் கூவலில்
மிதந்து வந்தது
வாழைப்பூ..

மாடியில் இருந்து
கூடையைக் கீழிறக்கி
பூ வாங்கிய பூவை...

சாம்பல் புறா நீ...
சாண்டில்யனின்
ராஜபேரிகை...

என் நெஞ்சம் அதிர அதிர
மறுபடி மறுபடி பார்த்தேன்..
என் இதயம் இயங்குவதை
உறுதி செய்ய...

கின்னஸில் பதியலாம்
உலகின் அதிவேக பம்ப் என
என் இதயத்தை...

கிண்ணம் வழி
என் வீட்டில்
உன் உசிலி
என் தட்டில்...

துவர்ப்புக்கூட
உன் கை பட்டதால்
உவப்பானது எனக்கு ...

குடியிருப்பில் திருமணம்
வாழைமரம், தோரணம்,
மொட்டைமாடி ஷாமியானா...

பட்டுப்பாவாடை தாவணியில்
மடல் பிரிந்த பருவப்பூவாய்
ஜிமிக்கியில் நீ ...

அதன் ஒவ்வொரு குலுக்கலிலும்
ஒன்பதாம் மேகத்தின் மேல்
நான் தடுமாறி....

வாழைப் பூப்பந்தலுக்குள்
வாழைத்தண்டுக் காலெடுத்து
வசந்தமாய் நீ வர
வேஷ்டியில் நான்...

பன்னீரும் ரோஜாவும்
சந்தனமும் எடுத்து
கல்கண்டுப்பார்வையை
என் மேல் நீ வீச...

நின்றதடி என் இதயம்...
இன்னொரு கல்கண்டால்
இனிமையாக தட்டிவிடு...
மீண்டும் இயங்க ...

17 கருத்துகள்:

  1. //கின்னஸில் பதியலாம்
    உலகின் அதிவேக பம்ப் என
    என் இதயத்தை...//

    என்னே உங்கள் சிந்தனை...எனக்கெல்லாம் இப்படி தோன மாட்டேன் என்கிறது. மிக அருமை

    பதிலளிநீக்கு
  2. கவிதை பயணிக்கும் வெளிதான் என்னை ஈர்க்கிறது
    அதன் பாடு மொழி .பயனுறும் படிமங்கள்.

    வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  3. இதன் மூலம் பல விசயங்களை உள்வாங்க முடிந்தது

    பதிலளிநீக்கு
  4. ஒன்பதாம் மேகத்தின் மேல்
    நான் தடுமாறி....

    நல்லா இருக்குது சகோதரி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. யூத்புல் விகடன்..!
    இன்டரஸ்டிங் ப்ளாக் அவார்டு ..!
    கலக்குறீங்க புலிகேசி....!!!

    பதிலளிநீக்கு
  6. சூரிய அடையில் நிலாக்கல் முட்டை ..

    இதெல்லாம் எமக்கு எழுத வரலயே நேசன்..

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவில் மிகச் சிறப்பான உணர்வுகளின் வெளிப்பாடு... ..

    ஒவ்வொரு தமிழனும் சொல்ல விரும்புவது இதைதான் ஜோதிஜி

    நன்றி ஜோதி ஜி

    பதிலளிநீக்கு
  8. நிர்மலதாவுக்காக ஒரு லதா பக்கங்கள் ஆரம்பித்து இருகிறீர்களா விஜய்

    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. எப்படிங்க வார்த்தைகளை கோர்த்து அழகா எழுதுறிங்க..அதுவும் பூ பெயரில் தொடர்ச்சியாய்..

    பதிலளிநீக்கு
  10. வினோத் நன்றி

    ஆனாலும் உங்கபதிவுகளுக்கு முன்னாடி நாங்க எல்லாம் நத்திங்

    கலக்குறீங்க வினோத்

    பதிலளிநீக்கு
  11. உங்களின் இந்த தன் முனைப்புதான் பெரிய ஆச்சர்யம் எனக்கு தேனு.இது தன் முனைப்பா,வரமா?உங்களுக்கு மட்டும் பூ தீராமலே இருப்பது.தீரவேண்டாம் மக்கா...பூவின் இதழ் நோகாது சம்பவங்களுடன் கோர்க்கும் நேர்த்தியில் நிற்கிறது உங்கள் பளிச்!

    பதிலளிநீக்கு
  12. ஓ...தேனு,இது உங்கள் அவர் எழுதினதா இல்லை அவர் உணர்வில் நீங்கள் எழுதினதா ! வாழ்த்துக்கள் அவருக்கும்.

    நேசனின் முழுமையான வாழ்த்து எப்போதும் உங்களுக்குக் கிடைத்தபடியே இருக்கு.கொஞ்சம் பொறாமையோட சந்தோஷமாயிருக்கு தேனு.

    பதிலளிநீக்கு
  13. நன்றி ராஜாராம் உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...