இரட்டைக் குவிக்கண்ணாடியும்
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...
பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...
நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....
மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....
பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..
பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....
என் சகுந்தலையே வைஷாலி
யசோதரா மேனகையே...
மாவடுக் கண்ணழகி ...
மலர்ந்த சிரிப்பழகி....
துஷ்யந்தன் ரிஷ்யசிங்கன்
சித்தார்த்தன் விஸ்வாமித்திரனல்ல
நான் உன்னைக் கைகழுவ.....
ஆண்காமம் மட்டும் கண்டு
அழிந்துபட்ட நீ என்னுள்
ஆண்காதல் பார்.....
என் பூபாளமே மோகனமே
ஆனந்தபைரவியே ராகமும் தாளமும்
போல் நீயும் நானும்....
என் பாத தரிசனத்தை
பாதுகா ரட்சையை தாலியாய் சுமந்து
என் காலடியில் நீ....
மஞ்சள் குங்குமம் மெட்டி
பூக்களணிந்து சனாதன தர்மத்தின்
அநாகத வெளிப்பாடே....
அட்டாங்க யோகங்களும்
பதஞ்சலியும் வியாக்கிர பாதரும்
இறுகப்பற்றின இறைவனைப்போல்...
வானப்பிரஸ்தம் ஏகாமல்
இம்மையில் நானும்
உன்னை இறுகப்பற்றி
க்ருஹ்ஸ்தாஸ்ரமத்தில்.....
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...
பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...
நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....
மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....
பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..
பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....
என் சகுந்தலையே வைஷாலி
யசோதரா மேனகையே...
மாவடுக் கண்ணழகி ...
மலர்ந்த சிரிப்பழகி....
துஷ்யந்தன் ரிஷ்யசிங்கன்
சித்தார்த்தன் விஸ்வாமித்திரனல்ல
நான் உன்னைக் கைகழுவ.....
ஆண்காமம் மட்டும் கண்டு
அழிந்துபட்ட நீ என்னுள்
ஆண்காதல் பார்.....
என் பூபாளமே மோகனமே
ஆனந்தபைரவியே ராகமும் தாளமும்
போல் நீயும் நானும்....
என் பாத தரிசனத்தை
பாதுகா ரட்சையை தாலியாய் சுமந்து
என் காலடியில் நீ....
மஞ்சள் குங்குமம் மெட்டி
பூக்களணிந்து சனாதன தர்மத்தின்
அநாகத வெளிப்பாடே....
அட்டாங்க யோகங்களும்
பதஞ்சலியும் வியாக்கிர பாதரும்
இறுகப்பற்றின இறைவனைப்போல்...
வானப்பிரஸ்தம் ஏகாமல்
இம்மையில் நானும்
உன்னை இறுகப்பற்றி
க்ருஹ்ஸ்தாஸ்ரமத்தில்.....
ஆன்மிக கதாகாலஷேபம் கேட்ட மாதிரி இருக்கு
பதிலளிநீக்குதனியா ஆன்மீகத்திற்கு என்று ஒரு வலைபதிவு ஆரம்பிக்கலாமே
வாழ்த்துக்கள்
விஜய்
ஆகா அருமையான கவிதை
பதிலளிநீக்குநல்லா இருக்குங்க ஒரு முழுமை இருக்கு கவிதைல
பதிலளிநீக்குரொம்ப இயல்பா ஜெனிடிக்ஸ் சொல்லி இருக்கும்விதம் அருமை
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசில வரிகள் என் சிற்றறிவுக்கு அப்பர்ப்பட்டாக இருக்கின்றன..:)
பதிலளிநீக்குதேனு எல்லாத்தையும் படிச்சுக் கலக்கிக் கொட்டுறீங்க.அள்ளிகிட்டே இருக்கோம்.
பதிலளிநீக்குஎனக்கு சில புரியவில்லை என்றாலும் புரிந்த வரை ரசித்தேன்
பதிலளிநீக்கு//என் சகுந்தலையே வைஷாலி
பதிலளிநீக்குயசோதரா மேனகையே...
மாவடுக் கண்ணழகி ...
மலர்ந்த சிரிப்பழகி....// ஹைய் என் பெயரையும் எழுதி கவிதை எழுதிட்டாங்க எழுதிட்டாங்க.
அழகா வர்ணித்து எழுதிருக்கிங்க.
அடுத்த கவிதைப் பூ எப்போ?
நன்றி விஜய் மலட்டு மரபணு கலக்கலா இருக்கு
பதிலளிநீக்குநன்றி தியாவின் பேனா
பதிலளிநீக்குஉங்க வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி
நன்றி நேசன்
பதிலளிநீக்குநளினமான பிசாசுகள் என்னைக் கவர்ந்தன
எங்கிருந்து வந்தாலென்ன ?
கல்லறையில் இருந்தோ கனவில் இருந்தோ
நன்றி சந்ரு
பதிலளிநீக்குஉங்க வட்டிக் கொடுமை பற்றிய இடுகை ஒரு நல்ல விழிப்புணர்வு கொடுத்தது
உங்க வாழ்த்துக்கு நன்றி
நன்றி வினோத் உங்க பாராட்டுக்கு
பதிலளிநீக்குஉங்க கதையும் காட்சிகளும் அருமை
நன்றி ஹேமா உங்க பாராட்டுக்கு
பதிலளிநீக்குஎன்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும்
நல்ல உள்ளம் உங்களுடையது
"மெல்ல தமிழினி சாகும்"
பதிலளிநீக்குஉண்மையிலே பாரதி இதைச் சொல்லவில்லயா
புலவரே நல்ல ஆராய்ச்சி
பின் சொன்னது யார்
உங்க பாராட்டுக்கு நன்றி
நன்றி மேனகா
பதிலளிநீக்குஉங்க சந்தோஷமான பாராட்டுக்கு
பிடிச்சு இருக்கா
அப்ப குலோப் ஜாமூன் கண்ணழகின்னு எழுதி இருப்பேனே
அன்பின் தேனம்மை
பதிலளிநீக்குகாதலன் காதலியைப் பார்த்து பரவசப்படும் காதல் கவிதை
நாற்பது வயது - இரத்த அழுத்தம் - கொழுப்பு - அத்தனையும் இருந்தும் காதல் - கைவிடாத காதல் - காமமில்லாத காதல் - தாலி கட்டி வாழ்க்கை நடத்தும் காதலன் -
நல்ல சிந்தனை - இயல்பான நிகழ்வுகளை வைத்து ஒரு கவிதை - சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன -
நல்வாழ்த்துகள் தேனம்மை
நன்றி சீனா சார்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!