எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2009

குறிஞ்சிப் பூ

ஊட்டியிலும் கொடையிலும்
ஏற்காட்டிலும் இடுக்கியின்
ஸ்டெர்லிங்கிலும்....

பனிதூவிய பாலேரூமில்
பில்லியர்ட்ஸ் டேபிளில்
நீ மும்முரமாய்....

பட்டர் சிக்கனும்
பைனாப்பிள் ஜூஸும் அருந்தி
உன் கியூபாலின் அசைவை
ரசித்தபடி நான் ....

ஷேர் மார்க்கெட்டிலும்
எக்கனாமிக் டைம்ஸிலும்
பாரின் எக்ஸேஞ்சிலும்
நீ மூழ்க....

எங்கெங்கும்
என் குழந்தைகளுடனும்
கவிதைகளுடன் நான்.....

எல்லா விக்கெட்டுகளும்
வீழ்ந்து கொண்டிருக்க
நின்று விளையாடி
சதமடித்தவன் நீ....

ஆனைமலையின்
வரையாடுகளைப்
பார்க்கச் சென்றபோது .....

உன் சாயலில்
ஒரு குறிஞ்சியையும்
பார்த்தேன் .....

எல்லாத் தாவரங்களும்
என்னைப் பார்த்தவுடனே
பூத்தபின்னும்.....

எப்போதோ
ஒரு முறைதான்
புன்னகைபூப்பாய்.....

நதியின்
நீர்ச் சுழியினைப் போல்
என்னை வாரி விழுங்கும் அது.....

அபூர்வமான
உன் புன்னகையைக் காணவே
நான் ஆயுளோடும் உன்னோடு.....

5 கருத்துகள்:

  1. உன் புன்னகையைக் காணவே
    நான் ஆயுளோடும் உன்னோடு.....

    ரொம்ப நல்லா இருக்குங்க சகோதரி

    இன்னும் எத்தனை பூக்கள் வைத்து இருக்கிறீர்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. தேனு உங்கள் ஒவ்வொரு பூவையும் துணையோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்.அதுதான் அருமை.

    தேனு,உங்கள் வீட்டிலும் அபூர்வப் புன்னகையா !அதைப் பார்க்கத் தவமாய் இருகவேணுமே !

    பதிலளிநீக்கு
  3. Yeppotho oru muraithaan punnahai pooppaai-nice Thenammai.Sterling in Chinnakkaanal-Idukki,My father had his childhood days in Chinnakkaanal.

    பதிலளிநீக்கு
  4. Thanks Vijay

    thanks hema

    and thanks muniappan sir

    somehow hectic .....
    so i'll reply properly next week

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...