எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தெட்சிப்பூ [இட்லிப் பூ]

அட்லாண்டிஸின் பனைமரத்தில்
காட்டர்பில்லர் போல்
ஊர்ந்த மோனோவில்....

அசைவற்ற கடல் சார்ந்த
வீடுகளின் ஊடாக
நாம் பயணித்தோம்....

வாட்டர் தீம் பார்க்குகளில்
சிவந்த தெட்சிப் பூக்களாய்
வெளிநாட்டு மங்கையர்....

நீ விரும்பி உண்ணும்
ஹம்மர் மீனைப் போல
நான் உன்னைச் சுற்றி....

மாலைச் சூரியனும்
பாய் மரப்படகுகளும்
முத்தமிட்டதுபோல
இலகுவாக அணைத்திருந்தாய்....

கற்கள் மோதும்
கடலலைகளைப் பார்த்து
நானும் ஒரு சுனாமி ஆகியிருந்தேன்...

நீ
தெட்சிப் பூக்களை
ரசிக்கத் துவங்கி இருந்தாய்....

என் கைப்பிடிப்பின்
கோபத்தைஉணர்ந்த நீ
எனக்கான ஹம்மரானாய்....
நான் உன்னை உண்ணத் துவங்கினேன்....

14 கருத்துகள்:

  1. வாவ்...

    தெட்சிப்பூக்கள் - இதுவரை கேள்விப் பட்டதில்லை.

    ஆனால் கவிதையின் வரிகள் என்னை சுயம் இழக்கச் செய்தது நிஜம்.

    பதிலளிநீக்கு
  2. இப்படிப் பூக்களெல்லாம் இருக்கா தேனு.
    அறியாத பூக்கள்.கவிதை காதலில் கரைந்து நெகிழ்கிறது தோழி.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ராகவன்

    பாம் ஜுமேராவின் கவிதை இது

    பதிலளிநீக்கு
  4. நாங்கலேல்லாம் நூறுன்னு எண்ணிப் பார்த்துக்கலாம்

    ஆனா நீங்கதான் ரியல் ஹீரோ
    சதம் அடிச்சிட்டீங்க

    பதிலளிநீக்கு
  5. தீபாவளி வாழ்த்துக்கு நன்றி முனியப்பன் ஸார்

    உங்கள் தொலைத் தொடரில் பேய் பற்றிய மருத்துவ ரீதியான விளக்கம் நன்று எனக் கேள்விப் பட்டேன்

    வாழ்த்துக்கள் ஸார்

    பதிலளிநீக்கு
  6. ப்ரமாதம் ஹேமா

    கேசவாரிப் பறவை கேள்விப் பட்டது இல்லை
    அது என்ன ஹேமா

    தங்கள் பாரட்டுக்கு நன்றி ஹேமா
    ப்ரம்ம ரிஷி பட்டம் கிடைத்தது போல் இருக்கு

    பதிலளிநீக்கு
  7. நன்றி நேசன்
    இருந்தாலும் நீங்கள் உங்கள் வெளிநாட்டுத் தோழியரை
    இவ்வளவு சிறப்பித்து இருக்க வேண்டாம்

    பதிலளிநீக்கு
  8. நன்றி வினோத்
    இனி அடுத்த இந்திய விசிட் எப்ப?

    கலையரசன் சொன்னது:-

    //ஏன்டா நீ இந்தியாவை விட்டு இன்னும் வரலையா//

    நைஸ்....

    VINOD HAPPY BELATED DEEPAVALI WISHES

    பதிலளிநீக்கு
  9. நீங்களும் ஹேமாவும் என்னை ஓட ஓட விரட்றீங்களே

    இது நல்லா இருக்கா ?

    நான் இனிமே புரியாத கவிதைகள் எழுதவே மாட்டேன்

    தூள் கிளப்புறீங்க

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. குரோமோசோம்கள் குழம்பிய
    குளிர் கருக்கள்


    ஹார்மோன் குறைநீட்சியால்
    மலராத மொட்டுக்கள்


    asathuriinga vijay
    arumaiyaay irukku

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...