எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 அக்டோபர், 2009

எள்ளுப் பூ

காற்றின் திசையில்
தெறித்து விழுந்த
கறுப்பு விதையில்...

வெடித்துக் கிளைத்து
வளர்ந்த பசுமை இலைகள் ..
புல் பூண்டு கூட
களையத்தயங்கும்
என் முன் ...

பசுமையாய்ச் சிரித்த செடியில்
வெள்ளைப் பூக்கள்
கொத்துக் கொத்தாய் ...

முறம் நிறைய சலசலத்த
எள்ளை வருடும்
போதெல்லாம்...

எள்ளுப் பூ நாசியம்மா
உனக்கு என அப்பாவும்
ஜப்பான் சுந்தரி என
மூக்கைக் கிள்ளிய
தாத்தாவும் நினைவில்...

திருமணம் முடிந்தும்
அய்யங்கார் பெண்களின் மூக்கும்
ரைனோப்ளாஸ்டியும்
அவ்வப்போது கவர்ந்து இழுக்க...

உன் மூக்கின் அழகோடு
முன்னூறாண்டு என பாடலும்
ஏக்கம் விளைக்க...

கதைப்பதில் மட்டுமே
பச்சைக் கஞ்சன்
நாசியென்பது சுவாசிக்கத்தானே
அழகாய்த்தானிருக்கு
என்றபோது...

குறையொன்றுமில்லை
மறை மூர்த்தி கண்ணா
என்று வெட்கத்தில்
நான்

17 கருத்துகள்:

  1. //குறையோன்றுமில்லை
    மறை மூர்த்தி கண்ணா
    என்று வெட்கத்தில்
    நான் // அருமை.நல்லா கவிதை எழுதுறீங்க.பொறாமையா இருக்கு உங்களின் கவிதையை படித்து நமக்கும் இப்படி எழுத வரலையேன்னு[சும்மாப்பா,ஒரு ஆற்றாமை தான்]

    பதிலளிநீக்கு
  2. // Mrs.Menagasathia சொன்னது…
    அருமை.நல்லா கவிதை எழுதுறீங்க.பொறாமையா இருக்கு உங்களின் கவிதையை படித்து நமக்கும் இப்படி எழுத வரலையேன்னு[சும்மாப்பா,ஒரு ஆற்றாமை தான்] //

    ஐ.. நான் தனி ஆள் இல்லை. பொறாமைப் படுவதற்கும், ஆற்றாமைப் படுவதற்கும் எனக்கு கூட ஆள் இருக்கு.

    இப்படிக்கு

    கவிதை எழுதத் தெரியாதவர்கள் சங்கம்
    நைஜிரியா கிளை.

    பதிலளிநீக்கு
  3. பூ பூவாப் பூத்திருக்கு.பூமியிலே ஆயிரம் பூ.பூவிலே சிறந்த பூ.அன்பு.

    ஓ....உங்க வீட்டிலயும் கதைக்காம இருக்கிற கஞ்சனா !வாய்ன்னு இருந்தா பேசத்தானே என்ன தேனு.சொல்லி வையுங்க.நானும் சொல்லிட்டேன்.
    அதுக்கும் தலை மட்டும் ஆடும்
    என்ன செய்யலாம் !

    இராகவன் நானும் சேந்துக்கிறேன் உங்க கூட்டணில.நான் இது வரைக்கும் ஒரே ஒரு கவிதைதான் "பூக்களைப் பறிக்காதீர்கள்"ன்னு எழுதியிருக்கேன்.இங்க எவ்ளோ பூக்கள் !

    பதிலளிநீக்கு
  4. நன்றி மேனகா
    வாழைப் பூ வெள்ளரிக்காய் பச்சடி சூப்பர் மேனகா
    பொங்கலும் கூட

    பதிலளிநீக்கு
  5. மணல் குறிப்புகளும் இருள் வலையும் ரெண்டாவது ஆட்டமும்
    போகிற போக்கில் படிக்க முடிவதில்லை நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டியது இருக்கிறது நேசமித்திரன்

    அற்புதமான எழுத்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் முனியப்பன் ஸார்
    கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்களுக்கு நன்றி ராகவன்

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஹேமா

    உங்கள் பச்சைக் கஞ்சன் என்ற வார்த்தைகளுக்கும் நன்றி ஹேமா

    நான் ரசித்த உங்கள் வார்த்தைகளை என்னுடைய கவிதையில் பயன் படுத்த அனுமதித்தற்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  9. போன பூவுக்கும் இந்த பூவுக்கும் பதில் இல்லை, ஏங்க பிசியா? புதிய பதிவு பார்த்திர்களா ?

    பதிலளிநீக்கு
  10. நன்றி விஜய்
    சிறிது அவசரத்துடன் பதில் போட்டதால் விட்டுப் போய் விட்டது

    தற்போது இரண்டிலும் பின்னூட்டம் போட்டாச்சு

    உங்களவளின் கோணல் வகிடும் மிக அழகு விஜய்

    பதிலளிநீக்கு
  11. sorry for the disturbance. You are my Great motivator. So that i asked. Thanks.

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...