எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

வேப்பம் பூ

சூடிக்கொள்பவன் இல்லாமல்
மழையில் கரைந்து
நிலவு....

காண்போரே இல்லாமல்
பூப்பள்ளத்தாக்கு....
தனிமைக்குப் பயந்து
கூட்டமாய்ப் பூத்து....

ஆதிரையின் பிச்சைப்பாத்திரமாய்
அனுசூயாவின் பருத்த தனமாய்
ஆயி மாண்டேப் போல
அள்ள அள்ள அன்பு....

ராமனை வேண்டா
அகலிகைக்கல்லாய்
வெண்சடை விரித்த
வேம்பு...

மனநோயாளியின்
எச்சில் தட்டிலும்
உயிர் உற்பத்திவிக்கும்
உலகம்...

வேம்பூக்களுக்குள்ளே
யாருக்காகவோ
வருத்தமாய்
குயில்...

அன்பிற்காகவும்
ஆலிங்கனத்துக்காகவும்
ராகுப் பெயர்ச்சியில்
பறவைகள்...

தன்மனை சிறக்கும்
பெருமக்கள்
பிறன் மனையில்
ரகசிய ஸ்நேகிதம்...

வெல்லமிட்டு வைத்தாலும்
பகிர்ந்து கொள்ளாத பேரன்போடு
செவ்வாய்ப் ப்ரஜைகள்...

காயாகி கனியாகி
விதையாகி மரமாக
வேண்டாமல்....

போதுமிந்த ஜென்மமெனெ
மரத்திலிருந்து
பூவாகவே உதிர்ந்து .....

10 கருத்துகள்:

  1. ராகு பெயர்ச்சி, செவ்வாய் பிரஜை

    தன்மனை சிறக்கும்
    பெருமக்கள்
    பிறன் மனையில்
    ரகசிய ஸ்நேகிதம்...

    தூள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. வேப்பம்பூ... அருமையான பூ. வேப்பம் பூ ரசம் உடலுக்கு ரொம்ப நல்லது.

    // வேம்பூக்களுக்குள்ளே
    யாருக்காகவோ
    வருத்தமாய்
    குயில்... //

    அருமை... ரொம்ப பிடிச்சு இருக்கு இந்த வரிகள். குயில் குரல் இனிமை. அதுவே வருத்தமாக இருக்கின்றது என்றால்... புரிகின்றது.

    // போதுமிந்த ஜென்மமெனெ
    மரத்திலிருந்து
    பூவாகவே உதிர்ந்து .....//

    இது அதனனின் அருமை. இந்த ஜென்மம் நம்மோடு நின்று போகட்டும், காயாகி, கனியாகி, மரமாக வேண்டாம் என்று உதிர்ந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு
  3. பூக்களின் காம்புகளால் எழுதுகிறீர்களா இல்லை இதழ்களாலா ?

    அல்லிவட்டம் மகரந்த மேடு
    நித்திய வாசனை
    உதடுகளை பூத்த வண்ணமிருக்கிறது
    சூரியப் பிரதிகள்

    பதிலளிநீக்கு
  4. Thanks VIJAY unga comparison im arputham


    கருப்பை வடிவக் காதுமடல்


    vow ..!!nice comparison VIJAY..!!

    பதிலளிநீக்கு
  5. REBUILT 1937 - 72 வருட பழமையான பாலம்...

    A rare information for us RAAGAVAN SIR

    Evvalavu murai OOTY KUNNUR sendru irupoom

    Aana intha palam vishayam gavanithathillai

    Thanks for ut vist to my bog and ur comments sir

    பதிலளிநீக்கு
  6. குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறோம்
    மரம் நட்டு

    EXCELLENT NESAN

    NESAN unga kavithaikalukku munnadi naangallam onnumillai

    Thanks for ur comments and poem of puu NESAN

    பதிலளிநீக்கு
  7. //மனநோயாளியின்
    எச்சில் தட்டிலும்
    உயிர் உற்பத்திவிக்கும்
    உலகம்...//

    ம்ம்ம்...வேப்பம்பூ வாசனை என் வீட்டை ஞாபகப்படுத்தி,தேனுவாய் என்னருகில் இப்போ.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...