என்னுடைய அன்பை
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....
நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....
சட்டிச் செடிக்கு
சூரிய வெளிச்சம் போல
சிறிது மட்டும்
தூவுகிறேன் அன்பை
நீ உயிர்க்க மட்டும்....
பொழுது போக்குச் சாதனங்கள்
போரடிக்கும் போது
என் பொழுது போக்குச்
சாதனம் நீ....
வீட்டில்
எது பழுதானாலும்
பழுதாகாத
உயிர் எந்திரம் நீ....
என் கண் எனும்
ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக
மாற்றுகிறேன்....
என் கண்ணுக்கு விருந்தாய்...
எப்படி உணர்கிறாய்
உன்னை நீ...
அறிய விழைந்ததில்லை...
யார் கண்ணிலும்படாத
எனக்கு மட்டுமான
ஜன்னலில் நீ....
கலாசாரங்கள் கோட்பாடுகள்
சடங்குகள் என்று
என் வலையிலுன்னைப் பின்னி
எந்நேரமும்
எனக்கான இரையாய்....
நான் தனிமையில்
இருக்கும்போது தான்
உணர்கிறேன் உன் தனிமையை
தீரமுடியாத தொலைவில்......
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....
நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....
சட்டிச் செடிக்கு
சூரிய வெளிச்சம் போல
சிறிது மட்டும்
தூவுகிறேன் அன்பை
நீ உயிர்க்க மட்டும்....
பொழுது போக்குச் சாதனங்கள்
போரடிக்கும் போது
என் பொழுது போக்குச்
சாதனம் நீ....
வீட்டில்
எது பழுதானாலும்
பழுதாகாத
உயிர் எந்திரம் நீ....
என் கண் எனும்
ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக
மாற்றுகிறேன்....
என் கண்ணுக்கு விருந்தாய்...
எப்படி உணர்கிறாய்
உன்னை நீ...
அறிய விழைந்ததில்லை...
யார் கண்ணிலும்படாத
எனக்கு மட்டுமான
ஜன்னலில் நீ....
கலாசாரங்கள் கோட்பாடுகள்
சடங்குகள் என்று
என் வலையிலுன்னைப் பின்னி
எந்நேரமும்
எனக்கான இரையாய்....
நான் தனிமையில்
இருக்கும்போது தான்
உணர்கிறேன் உன் தனிமையை
தீரமுடியாத தொலைவில்......
// என்னுடைய அன்பை
பதிலளிநீக்குகவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய் //
சூப்பர்... அன்பை எப்படிங்க கட்டிப் போடமுடியும்?
// பொழுது போக்குச் சாதனங்கள்
போரடிக்கும் போது
என் பொழுது போக்குச்
சாதனம் நீ....//
நெத்தியடி...
// நான் தனிமையில்
இருக்கும்போது தான்
உணர்கிறேன் உன் தனிமையை
தீரமுடியாத தொலைவில்......//
இந்த வலியை நான் உணர்ந்தவன்...
இந்த தடவை உங்க கவிதை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குங்க
Pazhuthaahaatha uyir enthiram nee-kilapureenga Thenammai.
பதிலளிநீக்குநன்றி ராகவன் நைஜீரியா
பதிலளிநீக்குமிக நீண்ட நாட்களுக்குப் பின் மிக நீண்ட பின்னுட்டம்
மீண்டும் நன்றி
நன்றி முனியப்பன் ஸார்
பதிலளிநீக்குஉங்க தொலைக் காட்சி நிகழ்ச்சி எப்ப இன்டர் நெட்டில் காணக் கிடைக்கும் ஸார்
"எந்நேரமும்
பதிலளிநீக்குஎனக்கான இரையாய்...."
ரொம்ப அழகா அருமையா இருக்கு
விஜய்
எனக்கு பிடித்தது நாகலிங்கப்பூ
பதிலளிநீக்குஅதையும் உங்கள் பூக்களில் சேர்த்து கொள்ளுங்கள்
விஜய்
For tongue tingling recipes visit
பதிலளிநீக்குhttp://solaiachiskitchen.blogspot.com/
vijay
http://honeylaksh.blogspot.com/2009/10/blog-post_30.html
பதிலளிநீக்குஉங்களை ஒரு தொடர் இடுகைக்கு உங்கள் அனுமதியில்லாமல் அழைத்துள்ளேன். தயவு செய்து தொடருங்கள்.
மிக அருமையான வரிகள் தோழரே...
பதிலளிநீக்குநன்றி விஜய்
பதிலளிநீக்குநாகலிங்கப் பூவும் எழுத வேண்டும் என்று இருக்கிறேன்
ஞாபகமூட்டியதற்கு நன்றி
நன்றி ராகவன் ஸார் ...
பதிலளிநீக்குநானும் உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கிறேன்
கலக்குங்க..
நன்றி ஈ, ரா.. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்கு//பொழுது போக்குச் சாதனங்கள்
பதிலளிநீக்குபோரடிக்கும் போது
என் பொழுது போக்குச்
சாதனம் நீ....//
எப்பிடிப்பா தேனு இப்பிடி !
Thanks Hema
பதிலளிநீக்குWe see that one is successful, especially in personal relationships, when he is able to see things from the view of other person. You have made me realize that this can be applied for flowers also. Excellent articulation of feelings, thoughts, imagination and reality.
பதிலளிநீக்குAnbu Thambi
thanks MEY
பதிலளிநீக்கு