எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 அக்டோபர், 2009

கோழிக்கொண்டைப் பூ

மீனாக்ஷி திருக்கல்யாணம்
முடிந்து அழகர் தேனாற்றில்
இறங்கிக் கொண்டிருந்தார்...

சிவப்பு வெல்வெட்
செண்டுகளைச் சுற்றிக்
கட்டியதான கோழிக்கொண்டை
மாலை அணிந்து....

புரவியில் அழகரின்
அழகைக் காண
மக்கள் வெள்ளத்தில்
நீயும் நானும்...

கூட்டத்தில் தொலைந்து
விடாமல் இருக்கிறேனா என
நீ அடிக்கடி மின்னலைப்
போல் பார்க்க...

நான் வேரற்ற மரமாகவும்
கருகிவிடாமலும் மிதந்து உன்
பின்னேயே வந்தேன்...

நீயும் மறு மின்னல்
அடித்தது போலானாய் ...

ஒருவரை ஒருவர்
தொலைத்து விடாமல்...

அழகர் ஆற்றில் இறங்க
நாம் கை பிடித்துக்
கரை சேர்ந்தோம் ...

11 கருத்துகள்:

  1. மீனாக்ஷி திருக்கல்யாணம்.
    அங்கு மாலையாய் கோழிக்கொண்டைப் பூ.
    அதற்குள்ளும் மெல்ல வருடிப்போகும் காதல்.
    ம்...அழகுதான் தேனு.

    பதிலளிநீக்கு
  2. மலர் வாசனைக் காதல்
    கிளிக்காரிக்கு கல்யாணம்
    வாசனைத திரவிய சொற்கள்

    பதிலளிநீக்கு
  3. ஹேமா
    கதைப் பதில் கூட பச்சைக் கஞ்சன் எப்படி இருக்கிறார்
    நன்றி ஹேமா நம் எல்லோரின் உணர்வையும் எழுதியதற்கு

    பதிலளிநீக்கு
  4. எண்ணிய பின் சம்பளம்
    எண்ணவே முடியாது
    excellent vijay
    thanks for ur comments

    பதிலளிநீக்கு
  5. நன்றி நேசமித்திரன்
    உங்கள் கவிதைகள் இன்னும் எண்ண அலைகளில்

    பதிலளிநீக்கு
  6. நன்றி சஷிகா
    மாவடு இஞ்சி ஊருகாய் அருமை

    பதிலளிநீக்கு
  7. நீங்க கவிதை மட்டுமே எழுதறதுனால ஒரு மாற்றம் இருக்கட்டுமேன்னு ஒரு தொடர் பதிவுக்கு invite பண்ணி இருக்கேன். டைம் இருந்தா எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  8. மணிகண்டன் உங்கள் அழைப்புக்கு நன்றி
    இதுவரை புது முயற்சி எதுவும் செய்யவில்லை
    தற்போது உங்கள் அழைப்பை ஏற்று முயற்சிக்கின்றேன்
    இதுக்கு டைம் லிமிட் ஏதும் உண்டா?
    ஏனெனில் நான் ஒரு மாதம் வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக இடுகைகளை வெளியிட முடிவதில்லை
    எனக்கு மற்றைய விபரங்களையும் தெரிவிக்கவும்
    என்னைப் புது முயற்சிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு நன்றிகள் மணிகண்டன்

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...