எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2009

போகன் வில்லாப் பூக்கள்

மாண்டிஸோரியின் குடில்களில்
வளைந்து பரவி இருந்தது
போகன்வில்லா....

தினம் ஒரு பூப்பறித்து
உதட்டில் வைத்துத் தேய்ப்போம்
ரைம்ஸில் வரும் ரோஸி லிப்ஸ்
ஆகுமாவென்று....

பருவங்கள் மாறி
திருமணத்துக்கு முன்
பட்டம் வேண்டி
நான் பெண்கள் கல்லூரியிலும்
நீ பொறியியலிலும்.....

பொறியியலில் மட்டுமல்ல
தடகளத்தையே
தடதடக்கவைத்த
தங்கக் கோப்பைக்காரன் நீ.....

நெஞ்சம் முரசடிக்க
சிலம்பாட்டக்காரன் போல்
கைமாறிப் பந்தடித்து...

கூடைக்குள் போட்டு
ஏற்றிக்கொண்டே இருக்கிறாய்
ஸ்கோரையும் பல்ஸையும்....

நீ விளையாடி முடிந்தபின்னும்
கை நிறைய ஏப்ரல் பூக்களுடனும்
இதயத்துடிப்புடனும்
உனக்காக நான்....

போகன் வில்லாபோல்
உன் விரிந்த தோள் மீது
வளைந்து படர்ந்தது மனது....

உன் காந்தப் புலனில்
தற்காலிக காந்தமான
தேனிரும்பாய் நானும்....

இன்று உன் வரவேற்பறையில்
பல கோப்பைகள்
இருந்தாலும்....

உன் கண்ணில் உணர்ந்தேன்
சிறுவயதில்
நான் தந்த காகிதப்பூவும்
பொற்கோப்பையாய் .....

14 கருத்துகள்:

  1. கடைசி வரிகள் அட்டகாசம்..சிறுகதை கூட முயற்சி செய்யலாமே..!!

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரிகள் அட்டகாசம்..சிறுகதை கூட முயற்சி செய்யலாமே..!!

    பதிலளிநீக்கு
  3. கவிதை விளையாட்டு நல்லா இருக்குது

    எங்கே போயிட்டீங்க, பூக்கள் இல்லாமல் வலையுலகம் வாடி விட்டது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. எப்படித் தேனு....பூக்களுக்குள் உங்கள் காதலைப் புகுத்திக் கொண்டாடுறீங்க.காதல் தேன் சொட்டாய் சொட்டுது தோழி.

    எங்கே காணோம் ரொம்பநாளா என் பக்கம்.

    பதிலளிநீக்கு
  5. பூக்கள் பற்றிய கவிதைகள் மிக அருமை!!

    பதிலளிநீக்கு
  6. வினோத் உங்க மனைவி வந்தப்புறம் காபி வித் வினு என்று வச்சுக்கலாம்...

    அதுக்குள்ள தலை தீபவளி முடிஞ்சுருச்சா அமீரகத்துல...

    நாமளும் தானே அங்கே இருந்தோம் அப்பிடி எதுவும் வெடிச் சத்தம் கேட்கலியேன்னு நினேச்சேன் ...

    நல்லா கலாய்ச்சீங்க போங்க..

    சூப்பர் பஞ்ச் கடசிலதான்
    நாம இந்தியன்களாச்சே
    விட்டுக்கொடுக்க முடியுமா...

    நன்றி வினோத்
    சிறு கதையும் முயற்சி பண்றேன்
    thanks for ur suggestins vinodh

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி நேசன்

    பழைய டைரி
    சக்கர நாற்காலி
    வீடு பேறு
    நரகத்தின் மொழி
    சிணுங்கல்
    கவிதை அலசல் என்று கலக்குறீங்க நேசன்

    பதிலளிநீக்கு
  8. நன்றி சகோதரா

    என்னை நினைவூட்டியதற்கும் வரவேற்றதற்கும்..

    ஒரு மாதம் ஷார்ஷா அபுதாபி துபாய் சென்று வந்தேன் என் சகோதரன் இல்லத்துக்கு ..

    எனவே தற்போது எல்லவற்றுக்கும் சேர்த்து பின்னூட்டமிட்டு உள்ளேன்

    thanks VIJAY

    பதிலளிநீக்கு
  9. நேற்றைய இரவில்
    சேமித்த கணங்களில்
    புதிதாய்ப் பூத்த பூ ..
    எல்லாமே நல்லா இருக்கு..

    ஹேமா ஒரு மாதமாக ஷார்ஷா அபுதாபி துபாய் சென்று வந்தேன் என் சகோதரன் வீட்டுக்கு..

    எனவே எழுத்தில் தொய்வு தற்போது தொடர்கின்றேன் ஹேமா

    thanks HEMA

    பதிலளிநீக்கு
  10. MENAKSATHIYA

    thanks for r comments

    ungka carrot muffin supper
    travel and living il varum NIGELLA FEAST mathiri irukku unga international receipes

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...