1102. மாப்பிள்ளை அறிதல் - சொந்தத்தில் இல்லாமல் அந்நியத்தில் செய்யும்போது மாப்பிள்ளை விபரம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் அல்லது உறவினர்களின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுதல். மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது அவர் நண்பர்களுடன் உரையாடியோ மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வார்கள். எங்கள் உறவினர் ஒருவருக்குப் பெண் கொடுக்குமுன் பெண்ணின் உறவினர்கள் எங்கள் உறவினரில் எதிர் வீட்டில் ( வாசலில் இருந்து வீடு முழுதும் தெரியும் ) ஜன்னலோரம் அமர்ந்து காத்திருந்து மாப்பிள்ளை வரும்போது பார்த்தார்களாம். !
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 31 அக்டோபர், 2018
காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக் காட்டுதலும்.
1102. மாப்பிள்ளை அறிதல் - சொந்தத்தில் இல்லாமல் அந்நியத்தில் செய்யும்போது மாப்பிள்ளை விபரம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் அல்லது உறவினர்களின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுதல். மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது அவர் நண்பர்களுடன் உரையாடியோ மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வார்கள். எங்கள் உறவினர் ஒருவருக்குப் பெண் கொடுக்குமுன் பெண்ணின் உறவினர்கள் எங்கள் உறவினரில் எதிர் வீட்டில் ( வாசலில் இருந்து வீடு முழுதும் தெரியும் ) ஜன்னலோரம் அமர்ந்து காத்திருந்து மாப்பிள்ளை வரும்போது பார்த்தார்களாம். !
செவ்வாய், 30 அக்டோபர், 2018
ஓநாய் குலச்சின்னம் - ஒரு பார்வை
திங்கள், 29 அக்டோபர், 2018
கூட்டாஞ்சோறு – அணிந்துரை.
வெள்ளி, 26 அக்டோபர், 2018
ராமனுக்குத் தம்பியான குகன். தினமலர். சிறுவர்மலர் - 41.
மீ டூ - சில குழப்பங்களும் சில புரிதல்களும்.
இந்த மீ டூ பற்றி - சில பிரபலங்கள் சொன்னால் அது டிவி டிபேட்டுக்கு உரிய விஷயம். அதில் இருக்கும் உண்மையை அவரவர்க்குத் தக்கபடி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. இதில் ரேஸ், ஏஜ், க்ளாஸ் எதுவும் கிடையாது.
சாதாரணர்களுக்கு இல்லையா மீ டூ ப்ராப்ளம். ஏதேனும் ஒரு பருவத்தில் இதைக் கடந்தே இன்றிருக்கும் அனைவரும் வந்திருப்பார்கள். இதில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தோர் பற்றி செய்தி அதிகம் வருகிறது. அதுவும் ஆண் குழந்தைகளை அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே சீண்டி இருக்கிறார்கள் என்பது அதிர வைத்த விஷயம்.
முகநூலில் பகிரப்படும் பல மீ டூக்கள் வேண்டாத முன்னாள் நண்பரைத் தாக்க ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுகிறது. “டீச்சர் இவன் என் சடையை பிடிச்சு இழுத்துட்டான் “ என்பதாகவே பல மீ டூக்கள் இருக்கின்றன.
உண்மையான மீடூவை சிலரே பகிர்ந்திருக்கிறார்கள். அது மிகப்பெரும் அதிர்ச்சியும் கண்ணீரும் அளித்த சம்பவம். இந்த மாதிரி மீ டூக்களில் அவர்கள் பண பேரத்துக்கு உட்பட்டு இழந்த பல லட்சங்கள் மட்டுமல்ல அடைந்த மனச்சோர்வும் மனச்சிதைவும் பதைக்க வைத்தது. மீண்டு எழுந்தவர்களைப் பார்க்கும்போது பிரமிப்பும் இன்னும் அவர்களுக்கு மனவலிமை பெருகவேண்டும் எனவும் வேண்டத் தோன்றியது.
வியாழன், 25 அக்டோபர், 2018
கணிகண்ணனுடன் சென்ற மணிவண்ணன். தினமலர். சிறுவர்மலர் - 40.
புதன், 24 அக்டோபர், 2018
ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில். தினமலர். சிறுவர்மலர் - 39.
திங்கள், 22 அக்டோபர், 2018
நாற்கரச்சாலையும் நீலச்சக்கரமும்.
தானே பூக்காசைச் சுண்டிக்கொண்டிருக்கிறது
பவளமல்லி மரம்.
1922. நிலப் புழுதிக்குள்
குமைந்து நைகின்றன நாற்றுகள்.
நகரமுடியாதவற்றைப் புதைத்து
உருவாகிக் கொண்டிருக்கின்றன
நாற்கரச்சாலைகள்.
ஓடும் ஒவ்வொரு வண்டியின் கீழும்
ஊமைக்கசிவாய் உழுதவன் ரத்தம்
பசுமையிலிருந்து செங்காவிக்கு
உயர்கிறது நீலச் சக்கரம்.
1923. மலைகளை உடைத்து விடலாம்.
மனங்களை கொள்கை பீடிப்பிலிருந்து தகர்த்துவது கடினம்.
1924. கலைஞர்கள் வர்க்கச் சார்பு உடையவர்களா ?
1925. சமூக விழுமியத்துக்குள் வராத ஒழுங்குமுரண்களால் வசீகரிக்கப்படும் காலமிது.
ஞாயிறு, 21 அக்டோபர், 2018
சனி, 20 அக்டோபர், 2018
காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.
புதன், 17 அக்டோபர், 2018
பத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.
செவ்வாய், 16 அக்டோபர், 2018
ஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.
இதில் அட்டைப்படங்களாக திருப்பரங்குன்றம், பதினெட்டாம்படிக் கருப்பர், காந்தி ம்யூசியம் என வியக்க வைக்கின்றன. நமது வலைப்பதிவ நண்பர் எஸ் பி செந்தில்குமார் அவர்களின் பல்வேறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
இப்பத்திரிக்கையை வெளியிட்டு வருபவர் ரமேஷ்குமார் என்பவர். அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.
அவர் முகநூலில் தொடர்பு கொண்டு கிட்டூர் வீராங்கனை ராணி சென்னம்மாவின் கட்டுரையை என் வலைப்பதிவில் இருந்து எடுத்து நூலில் கையாள அனுமதி கேட்டிருந்தார். மிகுந்த சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டேன். கட்டுரையுடன் பேர் போட்டு இதோ பத்ரிக்கையும் அனுப்பி விட்டார். நன்றி ரமேஷ். ஹலோ மதுரை இன்னும் பல சிறப்புகள் காண வாழ்த்துகள்.
நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர். அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.
திங்கள், 15 அக்டோபர், 2018
காரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.
அதில் மரப்பாச்சி புத்தகாலயம் அரங்கில் எனது நூல்களும் தோழி ராமலெக்ஷ்மி நூல்களும் இடம் பெற்றன. சில விற்பனை ஆனதாகவும் கேள்வி. :)
புதினம் - கதிரேசன், சாகித்ய அகாடமி விருது புகழ் எழுத்தாளர் காரைக்குடியைச் சார்ந்த மருத்துவர் சுனில் ஏற்பாடு செய்திருந்த மரப்பாச்சி அரங்கின் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
புதன், 10 அக்டோபர், 2018
கண்களும் கண்மணிகளும் - ஒரு பார்வை.
கண்களும் கண்மணிகளும்
என்றென்றும் உலகத்தை வளர்க்கும் பெண் குலத்துக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்நூலை எழுதியவர் பிரபல பத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்கள். அவர்களின் வழக்கமான பாணியில் துல்லியமான புள்ளி விவரங்களுடன் ஒரு ஆவணம் போன்ற நேர்த்தியில் தயாராகி இருக்கிறது இந்நூல்.
அட்டைப்படமும் தலைப்புமே இந்நூல் பற்றிய சுவாரசியமான வரைபடைத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஆம் பெண்களும் குழந்தைகளும் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான ஏற்ற இறக்கங்களையும் இந்நூல் பேசுகிறது.
திங்கள், 8 அக்டோபர், 2018
சனி, 6 அக்டோபர், 2018
ஃபேஸ்புக்கரும் குக்கரும்.
1902. முகநூல் சண்டை சச்சரவுகளைப் பாக்கும்போது ஹைபர்நேஷனிலேயே இருந்து விடலாமா என்று இருக்கு. எதையும் போஸ்ட் செய்ய பயமா இருக்கு. டெரர் ..
1903. இரு இனிமைகளும் அழகு, ஒன்று போதவிழ்ந்த தமிழினிமை, இன்னொன்று சுயம் விரிந்த அக இனிமை.
1904. பிரிவோம்.. சந்திப்போம்.
1905. பிள்ளையாரை வச்சு ஆட்டம் பாட்டம்னு தினம் வாழ்க்கையைக் கொண்டாடிட்டு இருக்காய்ங்க. #க்ரேஸி_பஸவங்குடியன்ஸ்
1906. தொடுவதென்ன தென்றலோ..
வெள்ளி, 5 அக்டோபர், 2018
அபிதா. – ஒரு பார்வை.
அபிதா
1970 களில் வந்த ஒரு நாவல், எண்பத்தி நான்காம் ஆண்டு படித்தது, இன்னும் மனதைக் குடையும் அற்புதத்தை என் சொல்ல. இந்த வருடமே இரண்டு முறை படித்துவிட்டேன். சொல்லவந்த விஷயமோ கைக்கிளைக்காதல். ஆனால் இளவயதுக் காதல்போல் அதில்தான் எவ்வளவு நெளிவு சுளிவு புரிதல், அதேசமயம் தவிர்க்கவொண்ணா தாகமும் அடக்கமாட்டா ஆசையும் வெடித்து விரியும் மோகமும், கிளர்ச்சிகொண்ட கோபமும் கூட.
புதன், 3 அக்டோபர், 2018
காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.
1061.குடைக்கொசுவலை/தொட்டிக் கொசுவலை - குழந்தைகளைப் படுக்கையில் தூங்கவைக்கும்போது குடைக்கொசுவலை போட்டு வைப்பதுண்டு. தொட்டிலைச் சுற்றிக் கட்டவும் கொசுவலையை உயரமான பாவாடை போல் தைத்து உபயோகிப்பார்கள்.
1062. கைப்பண்டம் கருணைக்கிழங்கு - கஞ்சம்பிடித்தவர் கையில் இருந்து ஒரு பொருளையும் வாங்க முடியாது. அவர்களின் கைப்பண்டத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க யோசிப்பார்கள். ஆனால் அடுத்தவர்களை தானம் செய்யும்படி வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்டவரைக் குறிப்பிடும்போது அவர்களின் கைப்பண்டம் கருணைக்கிழங்கு என்று சொல்வதுண்டு
1063. அப்புராணி - அப்பாவி, ஒன்றும் அறியாதவர் , பழிபாவம் தெரியதவர், வெள்ளந்தி, வெகுளி, குற்றமற்றவர்.
1064. உக்கிராணம் - ஒரு விசேஷம் என்றால் அதற்குத் தேவையான மளிகை, அரிசி, பருப்பு பயறு வகைகள், காய்கறி , கனி, பால், தொன்னைகள், பாக்குமட்டைத்தட்டுகள், வாழை இலை, பழக் கப்புகள், முந்திரி, பாதாம், நெய், பழ டின்கள், போன்ற பொருட்களை ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சேர்த்து வைப்பார்கள். அதற்கு மொத்தமாக உக்கிராணம் என்று பெயர். இதை சமையல் ஆள் அல்லாத ஒருவரிடம் ஒப்படைத்து விடுவார்கள். அவர் அந்த விசேசத்தின் போது சமையலுக்குத் தேவையான பொருட்களை உக்கிராணத்தில் இருந்து அளந்து எடுத்துக் கொடுப்பார். இதைப் பொதுவாக பெண்கள் மேற்பார்த்துக் கொள்வதால் அவருக்கு உக்கிராணக்காரக்கா என்று பெயர்.
1065. ஊவுதி, உவ்வூதி, துண்ணூரு, விவூதி, திருநீறு, திருநீர் - நெற்றியில் மூன்று பட்டையாக இடும் சைவச் சின்னம், சிவச்சின்னம், விபூதி.










