நான்காம் ஆண்டில் வாசிப்பை நேசிக்கவைத்த நமது மண் வாசம்
நமது மண்வாசம் இதழின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டிடத்தில். மிக அருமையான அந்தக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 300 சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், நமது மண்வாசம் இதழில் பங்களிப்புச் செய்துவரும் பேராசிரியர்களும், மருத்துவர்களும், இதழாளர்களும் எழுத்தாளர்களுமாக அரங்கை நிரக்கச் செய்திருந்தார்கள்.
காலை பத்து மணிக்கு பால்பாண்டி அவர்களும் பாலுச்சாமி அவர்களும் இறைவணக்கம் பாடினார்கள். சிறப்பு விருந்தினர்கள் முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்கள் குத்துவிளக்கினை ஏற்ற தொடர்ந்து ஐந்து திருமுகங்களையும் மருத்துவர் வடிவேல் முருகன், மற்றும் சுய உதவிக்குழுக்களின் தலைவி சாந்தி மதுரேசன் ஆகியோர் ஏற்றினார்கள்.
பட்டறிவு பதிப்பகத்தின் வெளீயீட்டாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். பதிப்பகம் குறித்து பட்டறிவு பதிப்பகம் முதன்மை நிர்வாகி, பெ.இராசன் பேசினார். நமது மண்வாசம் பெண்களுக்கான விஷயங்களை சிறப்பானதாகக் கொடுக்க ஒவ்வொரு மாதமும் எடுத்து வரும் மூன்றுகட்ட பகுத்தாய்வு குறித்து,
அதன் ஆசிரியர் ப. திருமலை பேசினார். இதழில் பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அதன் ஆசிரியர் ப. திருமலை பேசினார். இதழில் பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினார். வாசிப்பதை நேசிப்பது பற்றிக் கூறினார். வாசிப்பு மனிதரைப் பண்படுத்துவது பற்றியும் வாசிப்பின் அவசியம் பற்றியும் கூறினார். நகைச்சுவை மிக்க இவரது பேச்சு அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.
எந்தக் கட்டுரையையும் திறமையாக அழகாக எடிட் செய்து வெளியிடுவதல் வல்லவர் திருமலை என்று பாராட்டினார் முனைவர் ஞானசம்பந்தன் அவர்கள். அவரின் பெரு முயற்சியாலும் உழைப்பாலுமே இவ்விதழ் மிகச் செம்மையாக வந்துகொண்டிருப்பதாக அனைவருமே ஒரு சேரப் பாராட்டினார்கள் தங்கள் உரையில்.
டாக்டஸ் எஸ். வடிவேல் முருகன் பெண்களுக்கான உடல்நலம் பற்றிய கருத்துரை வழங்கினார். பெண்களுக்கு வரும் சர்க்கரைநோய் பாதிப்பு, இரத்தசோகை குறைபாடு பற்றி அவர் தெளிவாக விளக்கிய விதம் அருமை. உணவும் உடற்பயிற்சியும் மிக மிக முக்கியம் என உரைத்த அவர் உணவில் இரத்தசோகை குறைய நம் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் இயற்கை உணவுகளையும் காய்கனிகளையும் பயன்படுத்துவது குறித்தும் விரிவாகப் பேசினார். மாதுளை, பப்பாளி, கொய்யா போன்றவற்றை இனிப்பு நீர் உள்ளவர்களும் சாப்பிடலாம் என்பதோடு வெல்லம், தேன், பேரீச்சை, முருங்கைக்கீரை போன்றவை இரத்த சோகையைத் தடுக்கும் எனவும் தெளிவுறுத்தினார்.
பொறியாளர் ரத்தினவேல் - பழ கோமதிநாயகம் ஆகியோர் எழுதியIn Search of Ancient Wisdom - IrrigationTanks என்ற நூலை என். வெங்கடேசன் வெளியிட்டார்.எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய பெண்மொழி நூலை சாந்தி மதுரேசன் வெளியிட்டார்.
நமது மண்வாசம் காலப்பெட்டகங்களை முறையேபொறியாளர் ரத்தினவேல், பத்மாவதி, திட்டத்தலைவர் சிங்கராயர் ஆகியோர் வெளியிட்டனர். வெளியிடப்பட்ட நூல்களை அகிலா, ஒச்சம்மாள், பேராசிரியர்கள்விஜயகுமார், இரா முரளி, ஸ்ரீராம் அப்பளம் ராஜ்குமார், எழுத்தாளர் தேனம்மை, சிங்கராயர், வழக்கறிஞர்கள் செல்வகோமதி, பாலசுந்தரி, சி.சே. இராசன்,உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
நமது மண்வாசம் பற்றி பாலுச்சாமி அவர்கள் பாடல் ஒன்று பாடினார். மிகச் சிறப்பாக இருந்தது. ”வாங்கம்மா வாங்க வாங்கிட்டுப் போங்க. வாங்கய்யா வாங்க வாங்கிட்டுப்போங்க. நமது மண்வாசம் இதழுதான் சிறப்பாக இருக்குது.” என்று பாடினார்.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டது. இயக்குநர் வாசிமலை அவர்களின் ஆசிரியர் வேலாயுதன் அவர்கள், மற்றும் கவிஞர் – புலவர் ஐயா அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அட்டை வடிவமைப்பிலும் நமது மண்வாசம் பற்றிய நுணுக்கமான விபரங்களைக் கூறுபவரால புலவர் வேலாயுதன் பேராசிரியர் முரளி அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
”நமது மண் வாசம் ஆர்ட் பேப்பரில் வெளியிடப்படுகிறது. இது போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் . நான் வாசிப்பில் முதல் நிலை ரசிகன். முன் அட்டையிலிருந்து சுபம் வரை வாசிப்பேன்” என்றார் முனைவர் கு. ஞானசம்பந்தன். பத்ரிக்கையாளர் அண்ணாமலை பேசும்போது” அவர் முதல் நிலை ரசிகன் என்றால் நான் கடைசி நிலை ரசிகன்னு வைச்சுக்கலாம். ஆனா கட்டாயம் படிப்பேன் என்று கலகலப்பூட்டினார். இன்று வாசிப்பு அருகிவருவதை வருத்தத்தோடு குறிப்பிட்டார்.. மருத்துவர் பாபு தன் வீட்டில் தான் பாதுகாத்து வரும் புத்தகங்கள் இரண்டே இரண்டுதான் என்றும் ஒன்று ஃப்ரண்ட்லைன் பத்ரிக்கை என்றும் இன்னொன்று நமது மண்வாசம்” என்றும் குறிப்பிட்டார்.
செல்லமுத்து அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் பாபு உடல் நலம் மன நலம் பற்றி உரையாற்றினார். அவர்களது ஹாஸ்பிட்டலில் வாசிப்பின் மூலம் மனநலம் குறைந்த நோயாளிகள் மாற்றம் பெற்றதைக் குறிப்பிட்டார். அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜகுமாரி அவர்களுக்கும் அவர்களது சேவையைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. வெளியிடப்பட்ட புத்தகங்கள் சிலருக்குப் பரிசாக அளிக்கப்பட்டன.
காந்தி மியூசியம் செயலாளர் முனைவர் ம.பா. குருசாமி பத்ரிக்கைகளின் ஐந்து வகையான பணிபற்றி விவரித்தார். , ஹிந்து (ஆங்கிலம்) நாளிதழின் செய்திஆசிரியர் சூ. அண்ணாமலை பத்ரிக்கை உலகில் சந்தாதாரர்கள் அறுகிவரும்போது நமது மண்வாசத்தின் பெருகிவரும் வாசகர்கள் பற்றிப் பாராட்டினார்.
தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ம.பா. வாசிமலை, ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்.
யாராவது வாசித்த நமது மண்வாசம் புத்தகங்கள் பற்றி கருத்து – ஃபீட்பேக் -கூறினால் இன்னும் செம்மைப்படுத்தலாம் என்று வாசிமலை அவர்கள் கூறினார்கள். அதற்கு ஏற்றாற்போல் ஒரு தலைவி மேடையேறி நமது மண்வாசம் புத்தகத்தில் அவரைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிட்டார். நிறைகளையும் குறைகளையும் அலசினார். அஞ்சரைப் பெட்டி பற்றிய கட்டுரை மூலம் தான் ஆரோக்கிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டதை அழகாக விவரித்தார்.
பால்பாண்டி நன்றி கூறினார். அப்போது நமது மண்வாசம் ஆசிரியர் குழுவின் அணி சிறியது என்றாலும் பணி பெரியது என்று சிறப்பித்துக் கூறினார்.
ஆரம்பம் முதல் மதியம் ஒன்றரை மணிவரை அரங்கு நிறைந்த கூட்டமாக இது வெற்றிகரமாக நடைபெற்றது. நமது மண்வாசத்தின் மேல் அவர்கள் வைத்திருந்த அளவற்ற நேசத்தை இது காட்டியது. கட்டுக்கோப்பான தலைமையும் வழி நடத்தும் ஆசிரியரும், அதை உடனடியாக நடத்தும் நிறைவேற்றும் பணியாளர் படையுமே இவ்விழா வெற்றியடையக் காரணம். நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது மண்வாசமம் அன்றே சில ஆயிரக் கணக்கில் வாசக சந்தாவைப் பெற்றது. இன்னும் நிறைய சந்தாதாரர்கள் பெற்று நிறைய பேரை சென்றடைந்து இந்த இதழ் மக்கள் சேவையில் சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!