எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.

இரவு :- முன்னுரை.


எனது முன்னுரையுடன் இன்னொரு இன்னூல்.

நூல் வெற்றி பெறவும் திக்கெட்டும் உங்கள் புகழ் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் !



கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் சிறுகதைத் தொகுப்பான இது மென்மையான உணர்வுகளால் பின்னப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிப்பது. மேலும் இவரது கதைகள் குண்டு வைத்தல், குழந்தைப்பேறின்மை, இணையத்திற்கு அடிமையாதல் போன்றவற்றை இன்றைய சூழலில் மனிதன் எப்படி எதிர்கொள்வது என்ற இன்றையப் ப்ரச்சனையைப் பேசுகின்றன.
ஆச்சர்யமாக இத்தொகுப்பின் நடுவில் ஒரு க்ரைம் & த்ரில் தொடரும் இடம்பெற்றுள்ளது. மிக சுவாரசியமாக தனக்கு க்ரைம்தொடர் எழுத வரும் என்பதையும் நிரூபித்துள்ளார் கார்த்திக்.
தவறு செய்தவன் தண்டனை கொள்வான் என்பது முதல் கதையான இரவு மெய்ப்பிக்கிறது. மணிக்கணக்குப் பிசகாமல் நகரும் கதை. சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்ட முடிவு மிகவும் பொருத்தம். வாழ்வில் நன்மையில் நம்பிக்கையும் தீமையை விட்டு விலகியும் இருக்கக் கற்பிக்க இம்மாதிரிக் கதைகள் இன்றைய தேவை.

நட்பா காதலா எனக் குழம்பும் இன்றைய இளையர்களின் மனநிலையைப் பிரதிபலித்திருந்த விதமும் முடிவும் அருமை. இன்னும் கூட ஒரு பஞ்ச் வைத்து முடித்திருக்கலாமோ என்றும் எண்ண வைத்தது.
இரு நாட்கள் ஒரு கடத்தல் கிட்டத்தட்ட  13 அத்யாயங்களில் மிக அருமையாகப் பின்னப்பட்ட கிரைம் குறுங்கதை. இதை இன்னும் டெவலப் செய்தால் தனி நாவலாகவே போட்டிருக்கலாம் என்று தோன்றிய வலுவான கதை. க்ரைம் தொடரில் மிகவும் ஆச்சர்யப்படுத்தினார் கார்த்திக். இதில் சுஜாதா, ராஜேஷ்குமார் போன்ற யாரின் பாணியும் இல்லாமல் தனக்கென தனி பாணியில் கதை படைத்துள்ளது பாராட்டத்தக்கது. வாசகனை சீட்டின் நுனியில் அமரவைக்கும் அளவுக்குக் கதை சொல்லியிருக்கும் கார்த்திக்குக்கு ஒரு பூங்கொத்து.
தெரிந்தவர் அறிந்தவருக்கெல்லாம் சிம் வாங்கித் தர இதைப் படித்தவர்கள் அஞ்சுவார்கள். நல்ல விழிப்புணர்வு கொடுத்த கதை. நூல் பிடித்தாற்போல இம்மியும் பிசகாமல் அடுத்த அடுத்த அத்யாயங்களை விறுவிறுப்பாகப் படைத்திருப்பது சிறப்பு.
தத்து மனம் கனக்கச் செய்த கதை. யதார்த்தத்தில் காண்பதுதான். கதையில் வார்த்தைப் பிரயோகங்களும் அத்துன்பத்தை சித்திரமிட்டுக் காண்பிக்கின்றன. “ துன்ப தசை, “ தடுத்தாட இயலாத பேட்ஸ்மேன் “ என்று. பேட்ஸ்மேன் பற்றிப் படித்ததும் அவரது கிரிக்கெட் ரசனை வெளிப்பட்டது. இறைவன் ஆடிய விளையாடல்களில் அவளது வாழ்வும் ஒன்று என்ற வார்த்தைகள் வலியேற்படுத்தின. முடிவில் தன் ஆசைப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுப்பது கூட முடியாது என்று அவள் உணரும் தருணம் நாம் கடக்கும் வாழ்வியலைச் சுட்டியது.
பந்தம். திருமண பந்தத்தில் அலட்சியப்படுத்தப்படும் கணவரால் மனைவி இணையத்திற்கு அடிமையாகி திரும்ப அவரை அலட்சியப்படுத்துகிறாரோ என்று எண்ண வைத்த கதை. ஆனால் இவ்வாறு இணையத்திற்கு அடிமையாதல் என்பது ஆண் பெண் குழந்தைகள் என்று அனைத்துத் தரப்பிலும் நிகழ்கிறது. மனோதத்துவ முறையில் அதற்குத் தீர்ப்புக் கூறியவிதம் அருமை.

பராமரிக்காத உறவு பாழ் என்பார்கள். அதை மெய்ப்பித்த கதையான இது இணையத்திற்கு அடிமையான ஒவ்வொருவரும் படித்துத் திருத்திக் கொள்ள வேண்டியது
ஐந்தே கதைகளில் இன்றைக்குத் தேவையான எல்லாக் கருக்களையும் உட்பொருளாகக் கொண்டு கதை படைத்திருக்கிறார் கார்த்திக். மிகச் சரளமான மொழி நடை. சராசரி வாசகர்க்கும் புரியும் வண்ணம் தெளிவுபடுத்தி இருப்பது. எளிமையான சொல்லாட்சி, எல்லாருக்கும் தேவையான சப்ஜெக்ட் பற்றி எழுதி இருப்பதாலேயே இத்தொகுப்பை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இன்னும் அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளியாக வாழ்த்துகள்.

இங்கேயும் படிக்கலாம். அமேஸானின் கிண்டில் தளம். 



https://www.amazon.in/dp/B07GTLY6DR


5 கருத்துகள்:

  1. முன்னுரை, படிக்கும் ஆர்வத்தனை உண்டாக்கியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கார்திக்கை முக நூலில் காண்கிறேன் வலைப்பதிவுகளில்காண்பதில்லையோ

    பதிலளிநீக்கு
  3. கார்த்திக் புத்தகம் வெளியிட்டிருக்காரா? வாழ்த்துகள், ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம் !

    நன்றி ஜம்பு சார்

    நன்றி பாலா சார் ( கேட்டு சொல்கிறேன் :)

    ஆம் கீதா மேம். நன்றி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...