எனது புது நாவல்.

வியாழன், 25 ஜனவரி, 2018

திருவாலங்காட்டு சபாபதி தேசிகரின் திருமண வாழ்த்து.

திருவாலங்காட்டில் உள்ள சிவன் கோவிலில் பாட்டையா காலத்தில் பசுமடம் அமைத்து கோவில் பூஜைக்குத் தேவையான பால் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் ஐயா காலத்திலிருந்து அப்பா அதற்காக வருடம் ஒரு தொகையைக் கோயில் தேசிகரிடம்  கொடுத்துவருகிறார்கள். நித்யக் கட்டளையாக பாலாபிஷேகம் நடந்து வருகிறது.  சபாபதி தேசிகர்  எங்கள் திருமணத்தின் போது எழுதி அனுப்பிய வாழ்த்து மடல்.

காரைக்காலம்மையும் காளியும் சபாரெத்தினத்தோடு உறையும் அத்திருவாலங்காட்டுக்கு வருடம் ஒரு முறை முன்பு சென்று வந்தோம்   இப்போது செல்ல இயலவில்லை. அதை நினைவுறுத்தவே இக்கடிதம் கிட்டியதோ என எண்ணுகிறேன். இந்த வருடம் எப்படியும் சென்று  ரத்ன சபையைத் தரிசித்து வரவேண்டும்.

( எங்கள் குடும்பத்தில் பலருக்கு சபாரெத்தினம் என்ற பெயர் இடப்படுவதற்கு   இத்திருத்தல ஈசனின் பெயரே காரணம் ) 

அப்போது எல்லாம் எப்படி நேரம் கிடைத்து இவ்வளவு அழகான மரபு/வாழ்த்துப் பாடல்கள் எழுதி அனுப்பி இருக்கிறார்கள்.இதய நோயாலும் கண் மங்கலானதாலும்  வர இயலாததால் கடிதத்தில் அவர் அனுப்பிய வாழ்த்தில் இன்றும் அவ்வளவு அன்பும்  உயிர்ப்பும் இருக்கிறது.இதை ஸ்கேன் செய்தபோது

காகத்திரண்டு கண்ணிற் கொருமணி
யாகவும், சொற்பாலமுதும் சுவையுமாய்

என்ற வார்த்தைகள் விட்டுப் போய்விட்டது. எனவே அவற்றின் சொல்லமுது கருதித் திரும்ப ஸ்கேன்  எடுத்தேன் :)
 எவ்வளவு அழகாய் அன்பாய் வாழ்த்தி இருக்கிறார். இவர் இப்போது இல்லை. எனினும் அவர் வாழ்த்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கூகுளின் கைங்கர்யத்தால் கூகுள் இருக்குமளவும் வாழும் :) 

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...