காரைக்குடி அருகே குன்றக்குடி பிள்ளையார்பட்டி தாண்டி இருக்கும் நகர வைரவன்பட்டியில் ஸ்ரீ வைரவர் கோயில் உள்ளது. இங்கே பெரும்பகுதி மக்கள் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியன கொண்டாடுகிறார்கள்.
இக்கோயில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சங்கு ஊதிக் கருப்பர், ஏறு அழிஞ்சில் மரம், தன ஆகர்ஷண பைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மை, துலாபாரம், கோபுரங்களில் அறுமுகன், நான்முகன், ஏன் வீணை மீட்டும் பத்துத்தலை ராவணன் கூட இடம் பெற்றிருக்கிறார்கள். கோபுரம் கட்டாயம் காணவேண்டிய பேரழகு உடையது. அதே போல் மழை நீர் சேகரிப்பும் கண்மாய் நீர்ப் போக்குவத்தும் கொண்ட வைரவ தீர்த்தம் காணற்கரியது
அக்கோயிலில் இன்று எனது முகநூல் நண்பரும், மனிதநேயமிக்க மனிதருமான திரு தேனப்பன் செல்லம் ( செல்லம் மனைவி பெயர் அதையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள இனிமையான மனிதர் இவர் ), அவர்களின் சதாபிஷேக விழா நடந்தது.
அவ்விழாவுக்கு என்னையும் எனது தாய் தந்தையரையும் அழைத்திருந்தார். முகநூலில் மட்டுமே நண்பர்கள் என்றபோதும் அவ்வப்போது எனது எழுத்துக்களைப் படித்து ஊக்கமூட்டுவார்.
எனது முகவரியோ தொடர்பு எண்ணோ தெரியாதபோதும் எனது தந்தையார் உள்ளூர் பிரமுகர்கள் என்ற அளவில் அறிந்திருந்தமையால் எங்கள் தாய் தந்தையருக்கும் அவர்கள் மூலமே எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார்கள்.
என்னது தேனப்பன் சாருக்கு எண்பது வயதா என்று பிரமிக்கத் தோன்றியது.
ஏனெனில் மிக உற்சாகமாக செயல்படும் அவரைப் பார்த்தால் 80 வயது ஆனது போலவே தெரியாது. அவருக்கு மட்டுமல்ல அவரது மனைவிக்கும் வயதே தெரியவில்லை.
கூட்டம் என்றால் கூட்டம் எள் போட்டால் எண்ணெயாகிவிடும். அவ்வளவு கூட்டம். அம்மா அப்பா கும்பர் சொரிகிறார்கள்.
நான்கு நாட்கள் முன்பு வரை முகநூலில் ஸ்டேடஸ் பகிர்வுகள் போட்டு வந்ததாக அம்மா சொன்னார். ஏனெனில் விசேஷம் என்றால் முகநூல் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியாது. அவ்வளவு வேலைகள் இருக்கும் :)
அடுத்து திருப்பூட்டுதல். மனைவிக்குத் தங்க மங்கலை நாணை அணிவிப்பார். முன்பே மனைவி கழுத்திருவை அணிந்திருப்பார்கள்.
மற்றும் மாலை மாற்றும் மங்கல நிகழ்வு. மிகவும் அழகாக இருந்தது. அவரது உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பட்டுடுத்தி பக்கவாட்டில் நின்றனர். பிள்ளைகுட்டிகள் பேரன் பேத்திகள் உறவினருக்குப் பட்டுப்புடவை துணிமணிகள் எடுத்துக் கொடுத்தல் இங்கே மரபு.
திருமாங்கல்யதாரணம்
அடுத்து தாலியிலும் நெற்றியிலும் குங்குமம் வைத்தல்.
இதில் என்னை எப்போதும் கவரும் அம்சம் கணவன் மனைவியின் தலையைச் சுற்றி நெற்றியில் குங்குமம் வைத்தல்தான் . ஏனெனைல் அப்போது அக்காட்சி மிக அழகாக இருக்கும் பார்ப்பவருக்கும் :)
அடுத்து மாலை மாற்றுதல்.
அந்த நெருக்கடியிலும் நாமளும் ஆசீர்வாதம் அட்சதை குங்குமம் வாங்கிக்கிட்டாச்சு.
காலையில் கரெக்டாக பத்தரை மணிக்குச் சென்றோம் நானும் எனது பெற்றோரும். பார்த்தவுடன் புன்சிரிப்புடன் வரவேற்றார். முக்கியமா ஒன்று சொல்லணும். ( 2012 இல் நடந்த காரைக்குடி புத்தகத் திருவிழா தினமணி இணைந்து நடத்திய போட்டியில் எனக்குப் பரிசளித்த குழுவில் தேனப்பன் சாரும் இடம் பெற்றிருந்தார் ! அதை நான்கைந்து வருடங்களுக்குப் பின் முகநூல் நண்பர்களானதும் கண்டுபிடித்தோம் :)
கோயிலுக்குக் கிளம்புகிறார்கள். வளரொளிநாதர் வடிவுடையம்மை அருளைப்பெற.
தேனப்பன் சாரின் மனைவியின் சிரிப்பு கொள்ளை கொள்ளும் நெஞ்சை அள்ளும் அழகுச் சிரிப்பு. இவரின் புன்னகை முகத்தைப் பார்த்திருந்தாலே போதுமே சாரின் பசியடங்கிவிடுமே :)
கோயிலுக்குப் போகும் அவசரமான நேரத்திலும் நமக்குத் தாம்பூலப் பையை வழங்கும்படி உறவினரிடம் கூறுகிறார் :)
ஆங். விருந்தைப் பற்றிச் சொல்ல மறந்துட்டேனே.
மிக விமரிசையான விருந்து.
பதினோரு மணிக்கு பாதாம் & ப்ராகோலி சூப். வித்யாசமா ப்ரம்மாதமா இருந்துச்சு. !!!
அடுத்து கூல்டிங்க்ஸ், ரொட்டி, மிட்டாய் .
காலை சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேன். இது ஃப்ரூட் ஸ்டால். இங்கே விதம் விதமான பழங்களை கட் செய்து வைத்திருக்காங்க. நமக்கு ஒரு சதுர ப்ளேட்டில் எல்லாப் பழத்திலும் இரு துண்டுகள் வைச்சாங்க. கண்ணுக்கு அழகு, வயிற்றுக்கு இதம்.
மதியம் ஸ்வீட் மால்புவா, பலாக்காயா இல்ல பனிரா தெரியல பிரியாணி அட்டகாசம், தயிர்ப்பச்சடி, சாதம், அப்பளம், சிப்ஸ், ஊறுகாய், சௌசௌ பால் கூட்டு, பனீர் பட்டாணி பொரியல், இங்கிலீஷ் காய்கறி காளான் மசாசா, மலையாள அவியல், கொண்டக்கடலை குடைமிளகாய்ப் பச்சடி, அப்புறம் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு சிக்கன் லாலிபாப் மாதிரி காலிஃப்ளவர் அண்ட் சாப்ஸ் ஸ்டிக் ஃப்ரை.
பருப்பு நெய், வாழைப்பூ (பஜ்ஜிமாதிரி எண்ணெயில் பொரித்து மீன் போல ) கெட்டிக் குழம்பு, காரட் முருங்கை கத்திரி சாம்பார், ஆப்பிள் மோர்க்குழம்பு, பைனாப்பிள் ரசம், தயிர் அப்புறம் மிக மிக ருசியான அடைப்பிரதமன்.
அடடா இந்த ஐஸ்க்ரீமை சொல்ல விட்டுட்டேனா.
இந்தட்ரேயில் முந்திரியை லேசா கொத்தி அதில் எல்லா சாஸும் விட்டு பரத்தி சுருட்டி எடுத்துக் கொடுத்தார்.
முக்கியமா ஸ்ட்ராபெர்ரி & சாக்லெட் சூப்பரோ சூப்பர்.
இது போக நட்ஸ் க்ரன்சி ஐஸ்க்ரீமும் இருந்தது. அடுத்து பீடா ஸ்டால்.
பாருங்க லேயர் லேயரா சுருட்டிக் கொடுக்குரார்.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் ஐஸ்க்ரீம்.
சரி சரி படிக்கிறவுங்க பழத்தையும் ஐஸ்க்ரீமையும் பார்த்துட்டு கூல் ஆவுங்க. அடுத்த ஃபங்க்ஷனுக்கு காரைக்குடிக்கு அழைச்சிட்டுப் போறேன். :)
கடவுள் தரிசனத்தோடு உங்கள் ஆசியையும் அளித்தமைக்கு மிக்க நன்றி தேனப்பன் சார். நீங்க கொடுத்திருக்கும் ஸ்வர்ண ஆகர்ஷணபைரவர் திருமூர்த்தியின் படமும் 80 ஆம் ஆண்டு நிறைவு சதாபிஷேகவிழா மலரும் அற்புதம். இன்னும் நீங்கள் கனகாபிஷேகமும் கண்டு எங்களை ஆசீர்வதிக்க ப்ரார்த்தனைகளும் அன்பும். :)
இக்கோயில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சங்கு ஊதிக் கருப்பர், ஏறு அழிஞ்சில் மரம், தன ஆகர்ஷண பைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மை, துலாபாரம், கோபுரங்களில் அறுமுகன், நான்முகன், ஏன் வீணை மீட்டும் பத்துத்தலை ராவணன் கூட இடம் பெற்றிருக்கிறார்கள். கோபுரம் கட்டாயம் காணவேண்டிய பேரழகு உடையது. அதே போல் மழை நீர் சேகரிப்பும் கண்மாய் நீர்ப் போக்குவத்தும் கொண்ட வைரவ தீர்த்தம் காணற்கரியது
வளரொளி நாதர் , வடிவுடையம்மை. |
பிள்ளைகள் கும்பர் சொரிய ரத்தினக் கம்பளத்தில் வெள்ளிக் குடங்கள் |
எனது முகவரியோ தொடர்பு எண்ணோ தெரியாதபோதும் எனது தந்தையார் உள்ளூர் பிரமுகர்கள் என்ற அளவில் அறிந்திருந்தமையால் எங்கள் தாய் தந்தையருக்கும் அவர்கள் மூலமே எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார்கள்.
நிகழ்வில் நாகஸ்வரக் கலைஞர்களின் இன்னிசை. |
என்னது தேனப்பன் சாருக்கு எண்பது வயதா என்று பிரமிக்கத் தோன்றியது.
ஏனெனில் மிக உற்சாகமாக செயல்படும் அவரைப் பார்த்தால் 80 வயது ஆனது போலவே தெரியாது. அவருக்கு மட்டுமல்ல அவரது மனைவிக்கும் வயதே தெரியவில்லை.
கூட்டம் என்றால் கூட்டம் எள் போட்டால் எண்ணெயாகிவிடும். அவ்வளவு கூட்டம். அம்மா அப்பா கும்பர் சொரிகிறார்கள்.
நான்கு நாட்கள் முன்பு வரை முகநூலில் ஸ்டேடஸ் பகிர்வுகள் போட்டு வந்ததாக அம்மா சொன்னார். ஏனெனில் விசேஷம் என்றால் முகநூல் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியாது. அவ்வளவு வேலைகள் இருக்கும் :)
அடுத்து திருப்பூட்டுதல். மனைவிக்குத் தங்க மங்கலை நாணை அணிவிப்பார். முன்பே மனைவி கழுத்திருவை அணிந்திருப்பார்கள்.
மற்றும் மாலை மாற்றும் மங்கல நிகழ்வு. மிகவும் அழகாக இருந்தது. அவரது உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பட்டுடுத்தி பக்கவாட்டில் நின்றனர். பிள்ளைகுட்டிகள் பேரன் பேத்திகள் உறவினருக்குப் பட்டுப்புடவை துணிமணிகள் எடுத்துக் கொடுத்தல் இங்கே மரபு.
திருமாங்கல்யதாரணம்
அடுத்து தாலியிலும் நெற்றியிலும் குங்குமம் வைத்தல்.
இதில் என்னை எப்போதும் கவரும் அம்சம் கணவன் மனைவியின் தலையைச் சுற்றி நெற்றியில் குங்குமம் வைத்தல்தான் . ஏனெனைல் அப்போது அக்காட்சி மிக அழகாக இருக்கும் பார்ப்பவருக்கும் :)
அடுத்து மாலை மாற்றுதல்.
அந்த நெருக்கடியிலும் நாமளும் ஆசீர்வாதம் அட்சதை குங்குமம் வாங்கிக்கிட்டாச்சு.
காலையில் கரெக்டாக பத்தரை மணிக்குச் சென்றோம் நானும் எனது பெற்றோரும். பார்த்தவுடன் புன்சிரிப்புடன் வரவேற்றார். முக்கியமா ஒன்று சொல்லணும். ( 2012 இல் நடந்த காரைக்குடி புத்தகத் திருவிழா தினமணி இணைந்து நடத்திய போட்டியில் எனக்குப் பரிசளித்த குழுவில் தேனப்பன் சாரும் இடம் பெற்றிருந்தார் ! அதை நான்கைந்து வருடங்களுக்குப் பின் முகநூல் நண்பர்களானதும் கண்டுபிடித்தோம் :)
கோயிலுக்குக் கிளம்புகிறார்கள். வளரொளிநாதர் வடிவுடையம்மை அருளைப்பெற.
தேனப்பன் சாரின் மனைவியின் சிரிப்பு கொள்ளை கொள்ளும் நெஞ்சை அள்ளும் அழகுச் சிரிப்பு. இவரின் புன்னகை முகத்தைப் பார்த்திருந்தாலே போதுமே சாரின் பசியடங்கிவிடுமே :)
கோயிலுக்குப் போகும் அவசரமான நேரத்திலும் நமக்குத் தாம்பூலப் பையை வழங்கும்படி உறவினரிடம் கூறுகிறார் :)
ஆங். விருந்தைப் பற்றிச் சொல்ல மறந்துட்டேனே.
மிக விமரிசையான விருந்து.
பதினோரு மணிக்கு பாதாம் & ப்ராகோலி சூப். வித்யாசமா ப்ரம்மாதமா இருந்துச்சு. !!!
அடுத்து கூல்டிங்க்ஸ், ரொட்டி, மிட்டாய் .
காலை சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேன். இது ஃப்ரூட் ஸ்டால். இங்கே விதம் விதமான பழங்களை கட் செய்து வைத்திருக்காங்க. நமக்கு ஒரு சதுர ப்ளேட்டில் எல்லாப் பழத்திலும் இரு துண்டுகள் வைச்சாங்க. கண்ணுக்கு அழகு, வயிற்றுக்கு இதம்.
மதியம் ஸ்வீட் மால்புவா, பலாக்காயா இல்ல பனிரா தெரியல பிரியாணி அட்டகாசம், தயிர்ப்பச்சடி, சாதம், அப்பளம், சிப்ஸ், ஊறுகாய், சௌசௌ பால் கூட்டு, பனீர் பட்டாணி பொரியல், இங்கிலீஷ் காய்கறி காளான் மசாசா, மலையாள அவியல், கொண்டக்கடலை குடைமிளகாய்ப் பச்சடி, அப்புறம் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு சிக்கன் லாலிபாப் மாதிரி காலிஃப்ளவர் அண்ட் சாப்ஸ் ஸ்டிக் ஃப்ரை.
பருப்பு நெய், வாழைப்பூ (பஜ்ஜிமாதிரி எண்ணெயில் பொரித்து மீன் போல ) கெட்டிக் குழம்பு, காரட் முருங்கை கத்திரி சாம்பார், ஆப்பிள் மோர்க்குழம்பு, பைனாப்பிள் ரசம், தயிர் அப்புறம் மிக மிக ருசியான அடைப்பிரதமன்.
அடடா இந்த ஐஸ்க்ரீமை சொல்ல விட்டுட்டேனா.
இந்தட்ரேயில் முந்திரியை லேசா கொத்தி அதில் எல்லா சாஸும் விட்டு பரத்தி சுருட்டி எடுத்துக் கொடுத்தார்.
முக்கியமா ஸ்ட்ராபெர்ரி & சாக்லெட் சூப்பரோ சூப்பர்.
இது போக நட்ஸ் க்ரன்சி ஐஸ்க்ரீமும் இருந்தது. அடுத்து பீடா ஸ்டால்.
பாருங்க லேயர் லேயரா சுருட்டிக் கொடுக்குரார்.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் ஐஸ்க்ரீம்.
சரி சரி படிக்கிறவுங்க பழத்தையும் ஐஸ்க்ரீமையும் பார்த்துட்டு கூல் ஆவுங்க. அடுத்த ஃபங்க்ஷனுக்கு காரைக்குடிக்கு அழைச்சிட்டுப் போறேன். :)
கடவுள் தரிசனத்தோடு உங்கள் ஆசியையும் அளித்தமைக்கு மிக்க நன்றி தேனப்பன் சார். நீங்க கொடுத்திருக்கும் ஸ்வர்ண ஆகர்ஷணபைரவர் திருமூர்த்தியின் படமும் 80 ஆம் ஆண்டு நிறைவு சதாபிஷேகவிழா மலரும் அற்புதம். இன்னும் நீங்கள் கனகாபிஷேகமும் கண்டு எங்களை ஆசீர்வதிக்க ப்ரார்த்தனைகளும் அன்பும். :)
ஆஹா அனுபவம்! உணவு வகைகள் பார்க்கவே ரம்மியமாக!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
உணவை ரசித்து சாப்பிடுபவர்களை எனக்குப் பிடிக்கும்
பதிலளிநீக்குவைரவன்பட்டி வைரவர் செட்டிநாட்டில் தொன்றுதொட்டு நடைபெறும் பைரவர் வழிபாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுவது பற்றி கூறியதுமட்டுமின்றி ஒரு சதாபிஷேக விழாவையும் கண்முன்னே நிறுத்தியுள்ளீர்கள். நிறைவான பதிவு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி பாலா சார்
நன்றி முத்துசாமி சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
ஆஹா!! நிகழ்வு அருமைனா சாப்பாடு ஹும் இப்படியா படம் போட்டு நாவில் நீர் ஊற வைப்பது....ஹா ஹா ஹா...செம...அதுவும் அந்த ஐஸ்க்ரீம் சுருட்டல் வாவ் எப்படி எல்லாம் ஐஸ்க்ரீம்..
பதிலளிநீக்குகீதா: கொஞ்சமா சாப்பிட்டாலும் நான் ரொம்ப ரசித்துச் சாப்பிடுவேன்....கேரளா தமிழ் நாடு என்றுகலந்து கட்டி விருந்து போலத் தெரியுதே...
ஆமாம் கீதா மிக அருமையான விருந்து.
பதிலளிநீக்கு