எனது புது நாவல்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

மதுமிதாவின் மலாய் பாடலும் வள்ளல் அழகப்பர் பற்றிய வில்லுப்பாட்டும்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் நவம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசியான் இந்திய கவிஞர்கள் சந்திப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 28 ஆம் தேதி  மாலையில் நடைபெற்றன.

இதில் ஹைலைட்டாக ( பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும்) தமிழகக் கவிஞர் மதுமிதா & மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரி பார்க்கியின் பாடல் பரிமாற்றத்தைச் சொல்லலாம்.

மதுமிதாவின் கவிதைஒன்று மலாயில் இசைக்கப்பட, மலாய்க் கவிதை ஒன்றை மதுமிதாவும் சாஸ்த்ரி பார்க்கியும் பாடியது அற்புதம். (மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரியின் பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் பாடினர். மதுமிதா எழுதிய தமிழ்ப்பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் இணைந்து பாடினர். )

பாரதியின் கூற்றுக்கேற்ப மிகச் சிறந்த கலாச்சாரப் பரிமாற்றமாக அது திகழ்ந்தது.
மாலையில் முதல் நிகழ்ச்சியாகப் பெண்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம், கரகம், ஆகிய நாட்டுப்புற நடனங்களின் அணிவகுப்பு. காரைக்குடியைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவ மாணாக்கியர் மிக ஆர்வமாகப் பங்கேற்றுக் களிப்பித்தனர்.

பரதநாட்டியம் சோலோ. மிக அருமையாக ஆடினார் இவர்.
மிக்ஸ்ட் பாடல்களுக்குப் பெண்கள் அபிநயம் பிடித்தார்கள். ஹிந்திப்பாடல்களும் இடம்பெற்றன.
சுடிதார்தான் இப்போது நம் தேசிய உடை :)
நமக்கெல்லாம் மிகவும் பழகிய பாட்டுத்தான். இந்தியநாடு என் வீடு. இந்தியன் என்பது என் பேரு. எப்போது பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்.

இவர்கள் வள்ளல் அழகப்பர் பற்றி வில்லுப்பாட்டு பாடினார்கள். மிக உன்னதமான தலைவரைப் பற்றிப் பாடுகிறோம் என்பதால் மிக எச்சரிக்கையாகப் பாடினார்கள்.  கொஞ்சம் ட்ரையாக என்று கூட சொல்லலாம். ஒரே தகவல் சுரங்கமாக இருந்தது இந்த நிகழ்வு.  இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம் என்பது எனது ஆதங்கம். வகுப்பில் ரமணா புள்ளிவிபரத்தைக் கவனித்தமாதிரி இருந்தது.  ஆனாலும் ரசிக்கத்தக்கது. வாழ்த்துக்கள் இவர்களுக்கு.
பெண்கள் ஆடிய நாட்டுப்புறக் கலை நடனங்கள் போல ஆண்களும் தங்கள் பங்குக்கு வெளுத்து வாங்கினார்கள். காவடி, கரகம், ஒயிலாட்டம் என்று.

இந்தக் குழு நடனங்களின் போது எல்லாம் நமது தோழியரும் சீட்டில் அமர்ந்தபடியே அபிநயித்து ஆடி பட்டையைக் கிளப்பிட்டாங்க. :)
இசை இப்பாடல்களில் மிகப்பெரும் வரப்பிரசாதம்.
களரி நடனம்.
சிவசக்தி தாண்டவம்.
பல்வேறு திரையிசைப் பாடல்களுக்கு ஆடிய இளைஞர். சோலோ நடனம்.
மலேஷிய இந்தோனேஷியக் கலைஞர்களின் பங்களிப்பு.
பாரம்பரிய உடையணிந்து  மிக அருமையான கிராமியப் பாடல்களை இசைத்தார்கள். வித்யாசமான இசை.
ராஜராஜன் பள்ளியை சேர்ந்த ஒரு பெண் பாடினார்.
அஹா இதோ வந்துவிட்டது பாரம்பரிய உடைகளில் தமிழகக் கவிஞரும், மலேஷியக் கவிஞரும் பாடல் பாடிய இனிய நிகழ்வு. இருவரும் முன்பே பழகி நட்பானமையால் இருவரும் ஒருவருக்கொருவர் ஒரே நிறத்தில் உடைகள் வாங்கி வந்திருந்தனர். இருவரும் தமிழிலும் மலாயிலும் மாறி  மாறிப் பாடினர். மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரியின் பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் பாடினர். மதுமிதா எழுதிய தமிழ்ப்பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் இணைந்து பாடினர்.   அற்புத அனுபவம்.

இதுதான் உண்மையான இலக்கியக் கலாச்சாரப் பரிமாற்றம். நன்றி இந்திய ஆசியா கவிஞர்கள் சந்திப்பு.
நன்றி மதுமிதா & சாஸ்த்ரி பார்க்கி. அன்பும் நன்றியும் முபீன் & நந்தன் சார், செந்தமிழ்ப்பாவை மேம்  & அழகப்பா பல்கலைக் கழகம், 

3 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹை அட!! இது கிட்டத்தட்ட கேரளப் பள்ளிகளின் கலைவிழா போல இருக்கிறதே! வருடா வருடம் ஆசியாவிலேயே மிகப் பெரிய விழாவாக நடத்தப்படுகிறது. அனைத்து பாரம்பரிய கலைகளும் போட்டியில் உண்டு.

அருமையா இருக்கிறது உங்கள் பதிவு. மிகமிகச் சிறப்பான கலைநிகழ்வாகத் தெரிகிறது. இது இப்படியே தமிழ்நாடு முழுவதும் நடத்தினால் நன்றாக இருக்கும் இல்லையா?

கீதா: அதே எங்கள் கருத்துடன்...இப்போது சென்னையில் தீவுத் திடலில் சுற்றுலா கண்காட்சி நடைபெறும் சமயம் இப்படிப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் இணைத்து நடத்தலாம் இல்லையா. நான் கேரளத்து கலைவிழாவை நேரில் கண்டுள்ளேன். பிரமிப்பாக இருக்கும்.

படங்களும் அழகா இருக்கு. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இப்படியான பாரம்பரியக் கலைகள் பரிமாறப்பட்டுத் தொடர வேண்டும் என்பதே நமது அவா!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீத்ஸ் & துளசி சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...