எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 பிப்ரவரி, 2012

இலையாய் மிதந்தபடி..

மோதிரக்கையால்
மெல்லமாக செல்லக்
குட்டுப்பட்டாலும்
அனுபவிப்பவரின்
எண்ணங்களில்
ஒளிந்திருக்கிறது
வலிக்கான இலக்கணம்..
தொட்டுப்பார்க்கும்தோறும்
புடைப்பற்ற இன்பமாய்..


ஒவ்வொரு
ஒத்திப் போடுதலிலும்
ஒளிந்திருக்கிறது
சந்தோஷத்தை
நீட்டிப்பதற்கான மந்திரம்..

எண்ண ஊஞ்சலில்
முன்னும் பின்னும்
ஆடுவதோடு
முடிந்துவிடுகிறது
என் ஆசைப் பயணம்..

எதிர்பார்ப்புகளிலும்
அதற்கான முஸ்தீபுகளிலும்
ஏறி இறங்குவதான
டோரா டோரா கனவுகள்
தினம் தினம்
என்னைத் தின்றபடி
உயிர்க்கின்றன..

தின்னப்படும் நானே
தினம் கனவை
தின்னுபவளாகவும்
அசைபோடுபவளாகவும்
அனுபவித்தவளாகவும்
ஆராதிப்பவளாகவும்
ஆனந்த் அலைகளில்
இலையாய் மிதந்தபடி..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 17.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

6 கருத்துகள்:

  1. //எதிர்பார்ப்புகளிலும்
    அதற்கான முஸ்தீபுகளிலும்
    ஏறி இறங்குவதான
    டோரா டோரா கனவுகள்
    தினம் தினம்
    என்னைத் தின்றபடி
    உயிர்க்கின்றன..//

    கனவுகள் நிறைவேறும்வரை இந்த சுகமான அவஸ்தைதானோ :-)

    பதிலளிநீக்கு
  2. எதிர்பார்ப்புகளிலும்
    அதற்கான முஸ்தீபுகளிலும்
    ஏறி இறங்குவதான
    டோரா டோரா கனவுகள்
    தினம் தினம்
    என்னைத் தின்றபடி
    உயிர்க்கின்றன..

    இலையாய் மிதந்தபடி மனதி லேசாக்கும் கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. தின்னப்படும் நானே | தினம் கனவை
    தின்னுபவளாகவும் | அசைபோடுபவளாகவும் | அனுபவித்தவளாகவும் |ஆராதிப்பவளாகவும் | ஆனந்த் அலைகளில் | இலையாய் மிதந்தபடி..

    ரசனையான வரிகள்! எல்லோருக்குமான அனுபவம் இது. எல்லோராலும் இப்படிச் சொல்லி விடவும் இயலாதது except only Thenu akka.

    பதிலளிநீக்கு
  4. நன்றி சாந்தி

    நன்றி ராஜி

    நன்றி கணேஷ்

    நன்றி விஜி

    நன்றி சமுத்ரபாண்டியன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...