எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சாதனை அரசிகளுக்கு நட்புரை நல்கிய நல்உள்ளம் பாத்திமா பாபு..


பல வருடங்களாக ., குறிப்பாக தொலைக்காட்சி என்று நாம் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே செய்தி வாசிப்பில் என்னைக் கவர்ந்தவர் பாத்திமா பாபு அவர்கள். ஷோபனாவும், சந்தியாவும் வாசித்த போதும் சிலரைப் பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடுமல்லவா அந்த வகை இவர்.



நீள முடியில் இருந்து பாப் கட்டிங்க் செய்து வாசித்தது, பின் தொலைக்காட்சி, திரைப்படங்களில் காரெக்டர் ரோல்ஸ் செய்தது என ரசித்தது போக மல்கோவா மாமியாக சரளமான பேச்சிலும் கவர்ந்தவர்.

செலிபிரிட்டியாக இருப்பவரிடம் நாம் நட்பாவோம், ஒரு புக்குக்காக பேட்டி எடுப்போம். நாமே ஒரு புக் எழுதி அதற்கு முன்னுரை வாங்குவோம் என 2 ஆண்டுகள் முன்பு கூட நினைத்ததில்லை.

மிக இனிமையான மொழிக்குச் சொந்தக்காரர் ஃபாத்திமா. எழுத்தும் அப்படியே. சுபாவமும் அப்படியே. ஒரு முறைதான் ஃபோனில் பேட்டிக்கு அழைத்தேன். அந்த சமயமே பேட்டி கொடுத்தார். ஒரு அருவியைப் போன்ற பிரவாகமான பேச்சு. எல்லாக் கேள்விகளுக்கும் தேவையான பதிலை இதமான மொழியில். இன்னும் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்க மாட்டோமா என எண்ணும் அளவு...!

உடையில் மட்டுமல்ல . உணவுப் பழக்கத்திலும் பர்ஃபெக்ட் அவர். இயற்கை உணவு முறை பற்றியும் அதை தான் தன்னுடைய தொடர்ந்த வேலைகளுக்கிடையிலும் செயல்படுத்துவது பற்றிக் கூறினார். சமைத்த உணவுகளுக்கு அடிமையாகிவிட்ட நம்மால் அதை ஒரு வேளை கூட தொடரமுடியவில்லை.

ஒரு பிரபலமானவரைப் பற்றி நாம் ஞாபகம் வைத்திருப்பதும் புகழ்வதும் ஒன்றும் அதிசயமானதல்ல. ஆனால் அவர் நம்மை ஞாபகம் வைத்திருப்பதும், நம் நம்பரைப் பார்த்ததுமே , “ சொல்லுங்க தேனம்மை .. !!” என இனிமையாக விளிப்பதும் நான் யாரிடமும் காணாத ஒன்று. அட.. நம் எண்ணை மறக்காமல் ஸ்டோர் செய்து வைத்திருக்கிறாரே என என்னை ஜில்லாக்கிய சம்பவம் ஒவ்வொரு முறையும் நிகழும்.

முதன் முதல் நான் புத்தகம் போட யோசிக்கும்போது என் சாதனை அரசிகள் 17 பேருடன், பாத்திமா அவர்கள், கிரிஜாம்மா, உடன் 19 சாதனை அரசிகளை வைத்து வெளியிட வேண்டும் என எண்ணினேன். புத்தகம் கைக்குக் கிடைக்கும் நாள் தள்ளிப் போக எல்லாரின் தேதிகளும் , சர்வதேச திரைப்பட விழா மற்றும் புத்தகத்தில் இடம் பெற்ற பெண்களின் தனிப்பட்ட அலுவல்கள் காரணமாகக் கிடைக்கவில்லை.

என்னுடைய புத்தகத்துக்காக நட்புரை அளிக்க முடியுமா என அணுகியபோது உடனே பி டி எஃப் அனுப்ப சொல்லி தன் ஐடியை அனுப்பி., இரண்டு மூன்று நாட்களில் ஒரு அழகான நட்புரை அனுப்பி அதை என்னிடம் தொலை பேசியில் வாசித்துக் காண்பித்தார். மிக ஆச்சர்யம் அளித்தது இதுதான் எனக்கு. அவருடைய கமிட்மெண்ட். தன்னிடம் கேட்டவர்களுக்கு உரிய சமயத்தில் அதை செய்யவேண்டும் என்ற உந்துதல். அதை செயல்படுத்தும் வேகம். தன்னுடைய பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் எந்த நட்பையும் தன் அன்பெனும் நீரூற்றி வளர்க்கும் அந்த நல்ல உள்ளத்தினை எப்போதும் வியக்கிறேன். புத்தக வெளியீட்டின் வேகத்தில் அந்த அன்பையும் சேர்த்து ருசிக்க என் புத்தகத்துக்கு கொடுத்து வைக்கவில்லை.

எல்லாரும் அனுப்பவே தாமதப்படுத்துவார்கள். இவர் அனுப்பி வாசித்து வேறு காட்டினார். இது எந்தப் பிரபலத்திடமும் காண முடியாத ஒன்று.

////”முகநூல் மூலம் எனக்கு அறிமுகமான தோழி தான் தேனம்மை. நம்மைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், சிலர் மட்டும் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள். அப்படி என் கவனத்தை கவர்ந்து பின் என்னை தன் உண்மையான் நட்பால் ஈர்த்தவர் தேனம்மை. இவரது அயராத உழைப்பும், உற்சாகமும், மனிதர்களை ஆத்மார்த்தமாக நேசிக்கும் தன்மையும் இவரிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்..”

இந்தக் கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பெண்ணுமே நம் அனைவருக்கும் பெரும் ஊக்கத்தையும், வாழ்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் தைரியத்தையும் நமக்கு அளிப்பதை மறுப்பதற்கில்லை, இந்த பதினேழு பெண்களும் கடந்து வந்த பாதையில், எங்கேயோ நம் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது... அந்த வீரியத்தோடு
இல்லாவிடினும் இந்த வலிகளைத் தாண்டாத பெண்கள் யாருமே இருக்க முடியாது என உறுதியாகச் சொல்லமுடியும்.


இதுவும் கடந்து போகும் எனும் சித்தாந்தத்தில் மீண்டும் நம்பிக்கை கொள்ள வைக்கும் இப்பெண்களின் வலிகள் இனி வரும் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்///

நிச்சயமாக இதுவும் கடந்து போகும் என நம்புகிறேன். எதையும் கடக்கலாம் உங்கள் தூய அன்பின் முன் ஃபாத்திமா. மிக்க நன்றியும் என் மனம் நிறைந்த அன்பும் உங்களுக்கு.

11 கருத்துகள்:

  1. மேடம் நான் discovery book palace சென்று தங்களின் சாதனை அரசிகள் புத்தகம் வாங்கி விட்டேன் படித்து கொண்டிருக்கிறேன்
    சிறப்பாக வந்திருக்கிறது தங்களின் இந்த பதிப்பு

    பதிலளிநீக்கு
  2. பாத்திமா செய்தி வாசிக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். தனிப்பட்ட அவரது குணவிசேஷங்களை உங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி + வியப்பு. நன்றிக்கா...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு, உங்கள் கருத்துக்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. தன்னுடைய பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் எந்த நட்பையும் தன் அன்பெனும் நீரூற்றி வளர்க்கும் அந்த நல்ல உள்ளத்தினை எப்போதும் வியக்கிறேன்//

    நட்பால் நிரம்பிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அமைதியான அழகான முகம் என்று மட்டுமே இவரை அறிந்திருந்தேன். உங்கள் புத்தகத்தை வாங்கிப் படித்தால்
    மேலும் அறிய வரும்.
    மிகவும் நன்றி தேன்.

    பதிலளிநீக்கு
  6. பள்ளிநாட்களில் நானும் பாத்திமா அவர்களின் செய்தி வாசிப்பை ரசித்ததுண்டு.அவர்களின் நட்புரை அருமை.

    பதிலளிநீக்கு
  7. நன்றி சரவணன்

    நன்றி கணேஷ்

    நன்றி சாரல்

    நன்றி மோகன்

    நன்றி வியபதி

    நன்றி ராஜி

    நன்றி வல்லி சிம்ஹன்

    நன்றி ஜிஜி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...