எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 பிப்ரவரி, 2012

ஈரோடு சங்கமத்தில் வலைப்பதிவர்களின் ஆஸ்காருக்கு நன்றி

சமூக கலை இலக்கிய இணையப் பங்களிப்புக்காக அவரவர் பெயர் பொறித்த ஸ்பெஷல் விருது.!
ஈரோடு .. என் வாழ்வில் மறக்க முடியாத ஊர்.. பதினைந்து வலைப்பதிவர்களை ஆஸ்கார் வாங்கியது போல மகிழச் செய்த மங்களகரமான ஊர். எவ்வளவோ வேலைகள் செய்கிறோம். அங்கீகாரம் கிடைக்கும் அல்லது பணம் கிடைக்கும். ஆனால் இலக்கியம் நமக்காகவே படைக்கிறோம். நம் சொந்த திருப்திக்கு. அதை மற்றவர்களும் பாராட்டும்போது தன்னம்பிக்கை பெருகுகிறது.

சங்கமத்துக்கு அழைத்து காலையில் மிக விமரிசையான விருந்துக்குப் பின் ஈரோடு வலைப்பதிவர்களை சந்தித்தோம். என்னுடையது ஒரு 2 மாச லேட் போஸ்ட். இன்னும் பலர் அது பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார்கள். நிறைய கமிட்மெண்ட்ஸ் மற்றும் என்னுடைய புத்தகம் தொடர்பாக அலைந்ததில் மனதை ஒன்றுபடுத்து எழுத இயலாமல் போயிற்று. தனியாகக் கலந்து கொள்ளச் சென்ற வலைப்பதிவர்களுக்கு ஒரு இடத்திலும், தம்பதிகளாக வந்தவர்களுக்கு சண்முகா லாட்ஜிலும் தங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை கணவர் கூடவே நாம் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறோம். ஆனால் முதல் முறையாக நம்மை , நம் எழுத்தை அங்கீகரித்து அவர்கள் அழைத்து தங்கச் சொன்னது மிகப் பெருமையாக இருந்தது. ஒற்றைப் பைசா சம்பாதிக்கிறோமோ இல்லையோ , இலக்கியம் நமக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்ற பெருமிதம். அந்தப் பெருமிதத்தை உணரச் செய்த திரு . தாமோதர் அண்ணனுக்கும் ஈரோடு வலைபதிவர் குழுமத்துக்கும் என்ன நன்றி சொன்னாலும் தகும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காரில் அழைத்து வந்து ஹோட்டலில் விட்டார்கள். இரட்டைப் படுக்கைகள், வெந்நீர், குளிர்சாதனம் , சுத்தமான பாத்ரூம்கள், உடை மாற்றுமிடங்கள் என்று நல்ல தங்குமிடம் அது. நன்கு உறங்கி ஓய்வெடுத்து மறுநாள் திரு சீனா சார் அவர்களின் குடும்பத்தோடு சங்கமம் நடக்கும் ஹாலுக்கு சென்றோம். நல்ல காலை உணவுக்குப் பின் ஆரம்பமாயிற்று சங்கமம் நிகழ்வுகள்.

திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். வலைப்பதிவர்களின் வலிமை குறித்து சொன்னார்கள். ஈரோடு புத்தகத்திருவிழாவில் நுழைவுத் தொகை வாங்காமல் எல்லாரையும் அனுமதிப்பதாக சொன்னார்கள். ஈரோடு புத்தக வாசிப்பாளர்கள் மிகுந்த ரசனையான நகரம். அங்கே மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவராக ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். அதே அவரின் பேச்சிலும் வெளிப்பட்டது. தாமோதர் சந்துரு அண்ணன் அவர்களும் சிறப்பாக பேசினார்கள்.

நன்றி உரை என்று கூற முற்பட்டபோது ஒரு எண்ணக் கோர்வையில்லாமல் பேசினேன். எங்கு ஆரம்பிப்பது எப்படி முடிப்பது எனத் தெரியாமல்.
வலைப்பதிவர்களின் ஆஸ்காரைக் கையில் வாங்கியதும் கொஞ்சம் கிறுகிறுத்தது உண்மை. பத்ரிக்கையாளராக என்னை ஆக்கியதே வலைப்பதிவர் என்ற முகம்தானே.. அந்த முகத்தை என்றும் இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கெடாமல் காக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

விருதும் விருந்தும் கொடுத்தும் களைக்காத மனதோடும், முகத்தோடும் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்த திரு தாமோதர் சந்துரு அண்ணாவுக்கும் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!


9 கருத்துகள்:

  1. விருது பார்க்கவே மிக அழகாக இருக்கிறது. அடுத்த முறை அவசியம் நாமும் கலந்து கொண்டு (வேடிக்கை பார்க்கத்தான்) மகிழ வேண்டுமென்று தோன்றியது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்க்கா...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர்களுக்கு ஒரு வல்லிய முன்னோடியாய்த் திகழும் தங்களுக்கு விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்துக்கள் தேனம்மை லக்ஷ்மனன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. நன்றி சரவணன்

    நன்றி கணேஷ்

    நன்றி குமரன்

    நன்றி சாந்தி

    நன்றி ஜிஜி

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி தமிழ்

    நன்றி அமரபாரதி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...