எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஃபெட்னாவின் வெள்ளி விழா மலருக்கு படைப்புக்கள் அனுப்ப.. (FETNA )

அமெரிக்காவில் வசிக்கும் தோழி விஜி சத்யா அவர்களுக்கும், வலைப்பதிவர் பழமை பேசிக்கும் முதலில் நன்றிகள். முகநூல் நண்பர் நாகூர்கனி காதர்மொஹ்தீன் பாஷா அவர்களுக்கும் நன்றிகள். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை மார்ச்சுக்குள் அனுப்பி வையுங்கள். அதன் வெள்ளிவிழா மலரில் உங்கள் படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இடம் பெறும்.

/////தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா - படைப்புகள்

வணக்கம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி விழாவானது, முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக எதிர்வரும் சூலை 6. 7. 8 ஆகிய நாட்களில், பால்டிமோர் சமூக அரங்கில் எழுச்சியோடும் மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கொண்டாடப்படவிருக்கிறது. வெள்ளி விழா குறித்துக் கூடுதல் விபரங்களைப் பெற பேரவையின் வலைதளத்தினைப் பாவிப்பீர்களாக!
இணைப்பு

வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றின் இருபத்து ஐந்தாண்டு கால வரலாற்றுச் சின்னமாக மிளிரப் போகிற வெள்ளி விழா மலரில், தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்கள் குறித்தான படைப்புகள், அமெரிக்க மண்ணில் தமிழர் வாழ்வுக்குச் சிறப்புச் சேர்க்கும்படியான படைப்புகள் என மணியான ஆக்கங்கள் இடம் பெற இருக்கின்றன.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மலரில், உங்களது படைப்புகளும் இடம் பெற்றுச் சிறப்புச் சேர்க்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஆகவே, தாங்கள் தங்கள் படைப்புகளையும் பேரவை விழா மலர்க்குழுவினருக்கு அனுப்பி வைத்து, விழாவிற்குச் சிறப்புச் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.

படைப்பு விதிமுறைகள்

*கதை, கவிதை, கட்டுரை முதலான படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

*அளிக்கப்படும் படைப்புகள் தலைப்பையும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பையும் கொண்டிருத்தல் வேண்டும்.

*1250 சொற்களுக்கு மிகாமல் இருக்கும் முழுப்பக்க படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*வெள்ளி விழாவின் இயன்மொழியைக் (தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!) கொண்டு இருக்கும் படைப்புகள் முன்னுரிமை பெறும்.

*படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்துச் செறிவோடும் கல்வித் தரத்தோடும் இருத்தல் வேண்டும்.

*முன்னெப்போதும் வெளியாகாத, தனித்தன்மை வாய்ந்த, புத்துருவாக்கப் படைப்புகளை ஊக்குவிக்கிறோம்.

*பிறரது படைப்புகளின் பாவனை ஊக்குவிக்கப்பட மாட்டாது. அப்படி அவற்றைப் பாவிக்கும் தருணத்தில், மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடுதல் வேண்டும்.

*படைப்புகள் எவ்விதத்திலும் தவறான கருத்துகளையோ, மாந்தர்க்கு ஒவ்வாத கருத்துகளையோ கொண்டிருத்தல் ஆகாது.

*அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக 2012malar@googlegroups.com எனும் முகவரிக்கு Microsoft doc கோப்பாக அனுப்பப்படவேண்டும்.

*தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .jpg கோப்பாக இருத்தல் வேண்டும்.

*அனைத்துப் படைப்புகளும் மார்ச் 31, 2012, சனிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.

*காலவரையறை முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் வெளியிடப்பட மாட்டாது.

*மலரில் படைப்புகள் இடம் பெறுவதில், ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானதாகும்.

*இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக 2012malar@googlegroups.com எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

தமிழால் இணைவோம்!
செயலால் வெல்வோம்!!////


சரியாக கவனத்தில் கொள்ளுங்கள்..

1. தமிழால் இணைவோம்!
செயலால் வெல்வோம் !! என்ற இயன்மொழியைக் கொண்டிருந்தால் படைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுமாம்.

2. 1250 சொற்கள் மட்டுமே இருக்கவேண்டும். microsoft doc. கோப்பாக அனுப்பவேண்டும்.

3. கதை/ கவிதை/ கட்டுரை தமிழிலும், ஆங்கிலத்திலும் இருக்கலாம்.

4. போட்டி முடிவு தேதி. மார்ச் 31. 2012 சனிக்கிழமை.

5. உங்களுக்கு இந்த அறிவிப்பு குறித்து வேறு ஏதும் கேள்விகள் இருந்தால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 2012malar@googlegroups.com தொடர்பு கொள்ளவும்.


டிஸ்கி:- உங்கள் படைப்பு இடம்பெற வாழ்த்துக்கள்.


1 கருத்து:

  1. அனைவருக்கும் பயன்படும் அரிய தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். மிக்க நன்றிக்கா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...