எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜூன், 2011

நிஜம்..

நிஜம்..
*************
பதின்மத்திலேயே
நின்றுவிட்டது என் வயது
அதன் பிறகு
நான் வளரவேயில்லை
வளர விரும்பவும் இல்லை


வளரும் போதெல்லாம்
வலிக்கிறது
வளர்சி்தை மாற்றத்தால்..

சிதைக்காமலே
சிதைகிறது
சின்னக் குழந்தைத்தனம்..

கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும் கண்கள் ...
மெல்ல எழும்பிய தனங்களோடு..

சுமக்க ஆரம்பித்தபின்
சுமையாய் கிடக்கிறது
பெண்ணாய் நீண்ட நிஜம்..





டிஸ்கி:- இந்தக் கவிதை பழைய திண்ணையில் 23.01.2011 இல் வெளிவந்துள்ளது.



16 கருத்துகள்:

  1. //சுமக்க ஆரம்பித்தபின்
    சுமையாய் கிடக்கிறது
    பெண்ணாய் நீண்ட நிஜம்..//

    கருத்தாழமிக்க வரிகள்.
    பாராட்டுக்கள்.

    திண்ணையில் அமர்ந்ததற்கு
    ’நிஜம்’ ஆன வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கையில் மாறத நிஜங்கள் இன்னும் பல.

    பதிலளிநீக்கு
  3. நிஜமான நிதர்சனமான கவிதை அக்கா.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. குழந்த்தைத்தனம் மறைய ஒரு பெண்ணாய் வலி சொல்கிறது வரிகள் !

    பதிலளிநீக்கு
  5. நிஜமான நெஞ்சை தொடருகிற வரிகள் தேனு.

    பதிலளிநீக்கு
  6. அழகான ஆழம் நிறைந்த வரிகள் அக்கா...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நல்லாருக்கு கவிதை.. ஆனா இந்த கவிதைகளை எல்லாம் 10 வருஷம் முன்பே ஸ்டார்ட் பண்ணி இருந்தீங்கன்னா தாமரை ரேஞ்சுக்கு இப்போ வந்திருக்கலாம்.. ம் ம்

    பதிலளிநீக்கு
  8. "சுமையாய் கிடக்கிறது
    பெண்ணாய் நீண்ட நிஜம்....." பலர்வாழ்வில்....

    பதிலளிநீக்கு
  9. நன்றி கோபால் சார்

    நன்றி ராஜா

    நன்றி குணா

    நன்றி கீதா

    நன்றி கருன்

    நன்றி துஷ்யந்தன்

    நன்றி ஹேமா

    நன்றி விஜி

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கீதா

    நன்றி ரமேஷ்

    நன்றி ஜிஜி

    நன்றி செந்தில்குமார்

    நன்றி மாதேவி

    நன்றி சிபி.. ஹாஹாஹா கேக்கவே சந்தோஷமா இருக்கு. ரிப்பீட்டு சிபி..:)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...