மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..:-
=====================================
எல்லோரும் வைத்திருந்தோம்.,
வசனங்களும்., வாசகங்களும்.,
வேதமொழிகளும் நிரம்பிய
தடித்தடியான புத்தகங்களை..
பின்பற்றினோமோ இல்லையோ..
அவரவர் தோதுக்கு
சொல்லிக் கொண்டோம்.,
இது சிறப்பு அது சிறப்பென்று..
வரிந்து கட்டி எழுதி.,
சேற்றை வாரி வீசி.,
நினைத்ததெல்லாம் இடித்து
சண்டையிட்டுக் கொண்டோம்.
வார்த்தைச் சாணைகளில்
வெட்டுண்டு வீழ்ந்தன
அணைத்து வளர்ந்திருந்த
அன்பின் தளைகள்...
ரத்தம் தோய
பரிதாபமாய்
சிதறிக்கிடந்தன..
முந்தய முகங்கள்..
எஞ்சிய முகங்களில்
கரி அப்பி இருந்தபோ்து
கெக்கிலி கொட்டின..
கையூட்டுக்கள் பல..
தூண்டியவர்கள்
கணப்புக்காய்
இன்னும் விசிறினார்கள்..
எரிச்சல் பத்தாமல்..
பற்றியெரிந்த பொழுதில்
குருத்துக்களாய்
கரம் பற்றினார்கள்..
எங்கள் பிள்ளைகள்..
ஒரு விசித்திர நொடியில்
குளிர்ந்தது அனைத்தும்...
சீர் படுத்திக் கொண்டோம்..
சிதைந்த ஓவியங்களாய்..
பைசாசங்கள் ஒழிந்தன..
விட்டெறிந்த புத்தகங்களோடு..
புதுப்பித்துக் கொண்டோம்
புன்னகையயும் ., சுவாசத்தையும்..
மாசுகள் தொலைந்து
மழலைகளானோம்..
மறுபடி கைகோர்த்து
மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..
டிஸ்கி :- இந்தக் கவிதை ஒரு விசித்திர நொடியில் குளிர்ந்தது அனைத்தும் என்ற தலைப்பில் 10.2.2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது. நன்றி கீற்று.:))
=====================================
எல்லோரும் வைத்திருந்தோம்.,
வசனங்களும்., வாசகங்களும்.,
வேதமொழிகளும் நிரம்பிய
தடித்தடியான புத்தகங்களை..
பின்பற்றினோமோ இல்லையோ..
அவரவர் தோதுக்கு
சொல்லிக் கொண்டோம்.,
இது சிறப்பு அது சிறப்பென்று..
வரிந்து கட்டி எழுதி.,
சேற்றை வாரி வீசி.,
நினைத்ததெல்லாம் இடித்து
சண்டையிட்டுக் கொண்டோம்.
வார்த்தைச் சாணைகளில்
வெட்டுண்டு வீழ்ந்தன
அணைத்து வளர்ந்திருந்த
அன்பின் தளைகள்...
ரத்தம் தோய
பரிதாபமாய்
சிதறிக்கிடந்தன..
முந்தய முகங்கள்..
எஞ்சிய முகங்களில்
கரி அப்பி இருந்தபோ்து
கெக்கிலி கொட்டின..
கையூட்டுக்கள் பல..
தூண்டியவர்கள்
கணப்புக்காய்
இன்னும் விசிறினார்கள்..
எரிச்சல் பத்தாமல்..
பற்றியெரிந்த பொழுதில்
குருத்துக்களாய்
கரம் பற்றினார்கள்..
எங்கள் பிள்ளைகள்..
ஒரு விசித்திர நொடியில்
குளிர்ந்தது அனைத்தும்...
சீர் படுத்திக் கொண்டோம்..
சிதைந்த ஓவியங்களாய்..
பைசாசங்கள் ஒழிந்தன..
விட்டெறிந்த புத்தகங்களோடு..
புதுப்பித்துக் கொண்டோம்
புன்னகையயும் ., சுவாசத்தையும்..
மாசுகள் தொலைந்து
மழலைகளானோம்..
மறுபடி கைகோர்த்து
மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..
டிஸ்கி :- இந்தக் கவிதை ஒரு விசித்திர நொடியில் குளிர்ந்தது அனைத்தும் என்ற தலைப்பில் 10.2.2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது. நன்றி கீற்று.:))
கவிதையின் முன் பாதி நிஜம்... பின் பாதி கற்பனை... கற்பனை நிறைவேற பிராதிப்போம். நல்ல கவிதை.
பதிலளிநீக்கு//மாசுகள் தொலைந்து
பதிலளிநீக்குமழலைகளானோம்..
மறுபடி கைகோர்த்து
மனிதராய்த்
தொடங்கினோம் வாழ்வை..//
அழகான முடிவுடன் கூடிய கவிதை. பாராட்டுக்கள்.
மிக அருமை
பதிலளிநீக்குஅசத்தலான கவிதை தேனக்கா.
பதிலளிநீக்குமிக அருமை. ‘ஒரு விசித்திர நொடியில் குளிர்ந்தது அனைத்தும்’ இந்தத் தலைப்பு இன்னும் பிடித்தது.
பதிலளிநீக்குஎப்பவும்போல கருத்துச் சொல்லுது கவிதை !
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குவழக்கம் போல் அருமையான கவிதை.
பதிலளிநீக்குந்ன்றி ரமேஷ்
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
நன்றி சசி
நன்றி சாரல்
நன்றி ஹேமா
நன்றீ ரத்னவேல் சார்
நன்றீ ராமலெக்ஷ்மி
நன்றி ஸாதிகா.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!