மெழுகின் முணுமுணுப்பு..:-
**************************************
சட்டென்று மின்சாரம்
செல்லும் வேளைகளில்
ஒளியூட்டப்படுகிறது
ஒற்றை மெழுகுவர்த்தி..
அதன் நடனத்தைச் சுற்றி
அமரும் அனைவரும்
நகரும் போர்ட்ரெய்ட்டுக்களாய்..
தங்க நிற இசையில்
பொங்கி வழிகின்றன
பழங்கதைகளும் சிரிப்பும்..
இருளில் உயிர்பெறுகிறது
நிழல்களைப் போல
ஒளிந்திருந்த ஆசைகளும்
ஓங்கிக் குரலெடுத்து
அம்மா சொல்லும் ஸ்லோகங்களும்
பாடல்களும் உற்ற துணையாய் வருடி
கை விரல்களில் கொக்கும்
கிளியும் நாயும் சுவற்றில்
நிழல் பென்சில் ஓவியமாய்
வரைந்து பயிலும் போது
உயிர்பெற்ற மின்விசிறி
ஓங்காரமாய் வீசி
அணைக்கிறது மெழுகை..
ஒளியத்தவித்து
அங்குமிங்கும் ஓடி
இருளில் விழுகிறது மெழுகு
மினுக்கென்ற முணுமுணுப்போடு..
மீண்டும் பிரிந்து
தத்தமது வேலையில்
அனைவரும் புகுந்துகொள்ள
பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
துரத்தப்பட்ட கனவாய்
அதன் புகையைப் போல
மிதந்து வெளியேறுகிறது..
டிஸ்கி :- இந்தக் கவிதை 5.6.2011 கல்கியில் வெளிவந்துள்ளது. நன்றி கல்கி.:)
**************************************
சட்டென்று மின்சாரம்
செல்லும் வேளைகளில்
ஒளியூட்டப்படுகிறது
ஒற்றை மெழுகுவர்த்தி..
அதன் நடனத்தைச் சுற்றி
அமரும் அனைவரும்
நகரும் போர்ட்ரெய்ட்டுக்களாய்..
தங்க நிற இசையில்
பொங்கி வழிகின்றன
பழங்கதைகளும் சிரிப்பும்..
இருளில் உயிர்பெறுகிறது
நிழல்களைப் போல
ஒளிந்திருந்த ஆசைகளும்
ஓங்கிக் குரலெடுத்து
அம்மா சொல்லும் ஸ்லோகங்களும்
பாடல்களும் உற்ற துணையாய் வருடி
கை விரல்களில் கொக்கும்
கிளியும் நாயும் சுவற்றில்
நிழல் பென்சில் ஓவியமாய்
வரைந்து பயிலும் போது
உயிர்பெற்ற மின்விசிறி
ஓங்காரமாய் வீசி
அணைக்கிறது மெழுகை..
ஒளியத்தவித்து
அங்குமிங்கும் ஓடி
இருளில் விழுகிறது மெழுகு
மினுக்கென்ற முணுமுணுப்போடு..
மீண்டும் பிரிந்து
தத்தமது வேலையில்
அனைவரும் புகுந்துகொள்ள
பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
துரத்தப்பட்ட கனவாய்
அதன் புகையைப் போல
மிதந்து வெளியேறுகிறது..
டிஸ்கி :- இந்தக் கவிதை 5.6.2011 கல்கியில் வெளிவந்துள்ளது. நன்றி கல்கி.:)
மெழுகுவர்த்திக்கு நன்றி. உங்களுக்கு ஒரு கவிதைக்கான கரு தந்தமைக்கு. அருமையாக இருந்தது கவிதை. இனி இருட்டை மெழுகுவர்த்தியை காணும்போது, இந்த கவிதையும் ஞாபகத்திற்கு வரும்.
பதிலளிநீக்கு//பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
பதிலளிநீக்குதுரத்தப்பட்ட கனவாய்//
கலிகியில் இந்த வரிகளைப் படிக்கும் போதே, மெழுகாய் உருகிப்போனேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை தேனம்மை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//தங்க நிற இசையில்
பொங்கி வழிகின்றன
பழங்கதைகளும் சிரிப்பும்..//
அழகு.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇப்படியொரு நல்கவிதை தந்த மின்தடைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகை விரல்களில் கொக்கும்
பதிலளிநீக்குகிளியும் நாயும் சுவற்றில்
நிழல் பென்சில் ஓவியமாய்>>>>
அருமையான கற்பனை.
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
எந்த ஒரு விஷயத்தையும் கவிதையாக்கிவிடுகிறீர்கள் தேனக்கா.வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஎப்படி இப்படி பட் பட் என்று உங்களுள் இருந்து கவிதை பிறக்கின்றது தேனு?
பதிலளிநீக்கு//பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
பதிலளிநீக்குதுரத்தப்பட்ட கனவாய்//
கல்கியில் இந்த வரிகளைப் படிக்கும் போதே, மெழுகாய் உருகிப்போனேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
[பின்குறிப்பு:
நானும் முணுமுணுக்கிறேன் அந்த மெழுகு போலவே, என்னைப் ‘பெயரில்லா’ என்று போட்டுள்ளதால் - சும்மா - ஏதோ தவறு நேர்ந்துள்ளது என்பது புரிகிறது]
சூப்பர்..பெண் கவிகள் ஆணுக்கு நிகரே..
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குஅந்த விளக்கனைந்த சூழலை
அப்படியே மனத்தின் முன் நிறுத்திப்போகிறது
உங்கள் பதிவு
அப்படியே குறியீடாக நின்று
சில உயர்ந்த சிந்தனைகளையும்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமேஷ்
பதிலளிநீக்குநன்றி கோபால்சார்
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி சமுத்ரா
நன்றி கலாநேசன்
நன்றி ப்ரகாஷ்
நன்றி ஹேமா
நன்றி ஸாதிகா
நன்றி கோபால் சார் நிஜமா பெயரில்லா என்றுதான் அந்த கமெண்ட் வந்து இருக்கு சார்..:)
நன்றிகுணா
நன்றி ரமணி