எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஜூன், 2011

சாயம்...

சாயம்..
***************
கட்சியின் பெயராலோ
சாதி., இனம்., மொழி
மதத்தின் பெயராலோ

கறுப்போ., சிவப்போ.,
காவியோ., பச்சையோ
பூசப்படும் உங்கள் மீது..

குன்றிப்போய் விடாமல்
ஹோலியாய்க் கொண்டாடுங்கள்..
வர்ணங்கள் நிறைந்தது வாழ்வு..


பிறப்பு., வளர்ப்பு., வாழ்வு., வளர்ச்சி.,
விருப்பு சார்ந்துதான்
சாயங்கள் நம்மேல்
சவாரி செய்ய அனுமதிக்கிறோம்..

நம் சொந்த நிறமென்னும்
இயற்கைச் சாயம் தவிர
அனைத்தும் அழிந்துவிடும்..

சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
தேய்மானம் பொறுத்தோ.,
யாருக்கும் தெளிவு படுத்தும்
அவசியம் இல்லாமல்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30. 1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:))

16 கருத்துகள்:

  1. என்ன செய்ய சாயங்கள் இல்லாமல் இங்கு வாழ்க்கை இல்லை...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கவிதைகளுக்கு ரசிகனாகிவிட்டேன்..

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கனும் தமிழமணம் வேலை செய்ய வில்லை...

    பதிலளிநீக்கு
  4. பல வித சாயங்களே மனிதனின் நிறங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
    தேய் மானம் பொறுத்தோ.,
    யாருக்கும் தெளிவு படுத்தும்
    அவசியம் இல்லாமல்..
    தொலைந்து விட்டன.

    மிக்க நல்ல கருத்துள்ள கவிதை அம்மா

    பதிலளிநீக்கு
  6. சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
    தேய் மானம் பொறுத்தோ.,
    யாருக்கும் தெளிவு படுத்தும்
    அவசியம் இல்லாமல்..
    தொலைந்து விட்டன.

    மிக்க நல்ல கருத்துள்ள கவிதை அம்மா

    பதிலளிநீக்கு
  7. //நம் சொந்த நிறமென்னும்
    இயற்கைச் சாயம் தவிர
    அனைத்தும் அழிந்துவிடும்..//

    உள்ளதை உள்ளபடி சாயம் ஏதும் ஏற்றாமல் இயற்கையாய் சொல்லியுள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    Voted.

    பதிலளிநீக்கு
  8. எப்பவும் போல கவிதை அழகு அக்கா

    பதிலளிநீக்கு
  9. கவிதை அர்த்தமுள்ள‌தாக இருக்கிறது! உண்மையான நிறம் பெரும்பாலான மனிதர்களிடம் வெளிப்படுவதே இல்லை! பொய்மை நிறம்தான் பச்சோந்தி மாதிரி கடைசி வரை பல வண்ணங்களில் இருக்கின்ற‌ன!

    பதிலளிநீக்கு
  10. ///
    கட்சியின் பெயராலோ
    சாதி., இனம்., மொழி
    மதத்தின் பெயராலோ

    கறுப்போ., சிவப்போ.,
    காவியோ., பச்சையோ
    பூசப்படும் உங்கள் மீது..
    ///

    ரொம்ப சரி

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி சௌந்தர்.

    நன்றி ரமேஷ்

    நன்றி அகிலா

    நன்றி கோபால் சார்

    நன்றி சசி

    நன்றி மனோ

    நன்றி ராஜா

    நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  13. விழுதுகளாய் விழும் விருட்சம்
    என் தாய் மரக்கிளைகள்
    வாழ்த்த முடியாத பருவங்களுடன்
    பரீட்சைக்கு வரும் மாணவனாக படிக்கின்றேன்.
    எது எப்படியோ நான் படிக்கும்
    திண்ணையும் சும்மாவும்
    அம்மாவின் வரிகளில் உண்மையாக
    வாசகன்.

    இப்படிக்கு..
    யாழகிலன்.

    பதிலளிநீக்கு
  14. விழுதுகளாய் விழும் விருட்சம்
    என் தாய் மரக்கிளைகள்
    வாழ்த்த முடியாத பருவங்களுடன்
    பரீட்சைக்கு வரும் மாணவனாக படிக்கின்றேன்.
    எது எப்படியோ நான் படிக்கும்
    திண்ணையும் சும்மாவும்
    அம்மாவின் வரிகளில் உண்மையாக
    வாசகன்.

    இப்படிக்கு..
    யாழகிலன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...