பிறந்தபோதும், அமர்ந்தபோதும்,
அனுப்பிய புகைப்படத்தில்,
அபிக்கான அறிமுகம் எனக்கு....
ரேஸ்கோர்ஸ் வீட்டில்தான்
அவள் என்னுடன் நெருக்கமானாள்,
ஒரு பூந்தோட்ட வண்ணத்துப்பூச்சி போல....
உரையாடல்களால் வாழ்ந்தோம்.
தொடர்பு கொள்ள மட்டுமல்ல,
உணர்வதற்காகவும் அது நிகழ்ந்தது,
பைனாப்பிள் ஜாம் என்றும்,
பீநட் பட்டர் என்றும்,
பாஸ்டா, நூடுல்ஸ்,சீஸ் என்றுமவள் சொன்னதில்
சிலது மட்டுமே கொடுக்க முடிந்தது. ....
சிப்பி போல இமையும்,
சொப்பு போல வாயும் கொண்டு,
அவள் பேசுவதே ஒரு இசையாயிருக்கும்.
காண்டீஸூம் பன் வோர்ல்டும் அவளுக்குப் பிடித்தவை.....
பயணத்தைக் கூடப் பதிவு செய்வதும்,
பஸ் பிரயாணத்தில் காபினில் அமர்பவர்களுக்கு
ஸேப்டி இல்லையே என அவள் வருத்தப்பட்டதும்,
எனக்கு உலக மகா ஆச்சர்யங்கள் !!!!!
கரப்பானுக்கான பயம் அவள் கண்ணில் நிழலாடும்.
குளித்தவுடன் பூசும் பாடி லோஷன்
அவள் குழந்தைத்தன்மையை அதிகப்படுத்தும்.....
கரிய கூந்தல் கொண்ட பார்பி டாலாய்
தன் கரிய கண்களால் அவள் பார்க்கும் போது,
சேர்த்தணைத்து முத்தமிட்டால்,
பெரிய மனுஷிபோல முகம் காட்டுவாள்........
பெண் இல்லையே என்ற குறை தீர
என்னுடன் வாழவந்த பேரரசி!!!!!!
வளர் சிதை மாற்றத்தால் , இட மாற்றத்தால்
அவள் எனை மறந்தாலும்,
அவளுக்கான ஒரு இடம் என் மனதில் என்றென்றும்......!!!!
அனுப்பிய புகைப்படத்தில்,
அபிக்கான அறிமுகம் எனக்கு....
ரேஸ்கோர்ஸ் வீட்டில்தான்
அவள் என்னுடன் நெருக்கமானாள்,
ஒரு பூந்தோட்ட வண்ணத்துப்பூச்சி போல....
உரையாடல்களால் வாழ்ந்தோம்.
தொடர்பு கொள்ள மட்டுமல்ல,
உணர்வதற்காகவும் அது நிகழ்ந்தது,
பைனாப்பிள் ஜாம் என்றும்,
பீநட் பட்டர் என்றும்,
பாஸ்டா, நூடுல்ஸ்,சீஸ் என்றுமவள் சொன்னதில்
சிலது மட்டுமே கொடுக்க முடிந்தது. ....
சிப்பி போல இமையும்,
சொப்பு போல வாயும் கொண்டு,
அவள் பேசுவதே ஒரு இசையாயிருக்கும்.
காண்டீஸூம் பன் வோர்ல்டும் அவளுக்குப் பிடித்தவை.....
பயணத்தைக் கூடப் பதிவு செய்வதும்,
பஸ் பிரயாணத்தில் காபினில் அமர்பவர்களுக்கு
ஸேப்டி இல்லையே என அவள் வருத்தப்பட்டதும்,
எனக்கு உலக மகா ஆச்சர்யங்கள் !!!!!
கரப்பானுக்கான பயம் அவள் கண்ணில் நிழலாடும்.
குளித்தவுடன் பூசும் பாடி லோஷன்
அவள் குழந்தைத்தன்மையை அதிகப்படுத்தும்.....
கரிய கூந்தல் கொண்ட பார்பி டாலாய்
தன் கரிய கண்களால் அவள் பார்க்கும் போது,
சேர்த்தணைத்து முத்தமிட்டால்,
பெரிய மனுஷிபோல முகம் காட்டுவாள்........
பெண் இல்லையே என்ற குறை தீர
என்னுடன் வாழவந்த பேரரசி!!!!!!
வளர் சிதை மாற்றத்தால் , இட மாற்றத்தால்
அவள் எனை மறந்தாலும்,
அவளுக்கான ஒரு இடம் என் மனதில் என்றென்றும்......!!!!