வெள்ளி, 31 ஜூலை, 2009

அபியும் நானும்

பிறந்தபோதும், அமர்ந்தபோதும்,
அனுப்பிய புகைப்படத்தில்,
அபிக்கான அறிமுகம் எனக்கு....

ரேஸ்கோர்ஸ் வீட்டில்தான்
அவள் என்னுடன் நெருக்கமானாள்,
ஒரு பூந்தோட்ட வண்ணத்துப்பூச்சி போல....

உரையாடல்களால் வாழ்ந்தோம்.
தொடர்பு கொள்ள மட்டுமல்ல,
உணர்வதற்காகவும் அது நிகழ்ந்தது,

பைனாப்பிள் ஜாம் என்றும்,
பீநட் பட்டர் என்றும்,
பாஸ்டா, நூடுல்ஸ்,சீஸ் என்றுமவள் சொன்னதில்
சிலது மட்டுமே கொடுக்க முடிந்தது. ....

சிப்பி போல இமையும்,
சொப்பு போல வாயும் கொண்டு,
அவள் பேசுவதே ஒரு இசையாயிருக்கும்.
காண்டீஸூம் பன் வோர்ல்டும் அவளுக்குப் பிடித்தவை.....

பயணத்தைக் கூடப் பதிவு செய்வதும்,
பஸ் பிரயாணத்தில் காபினில் அமர்பவர்களுக்கு
ஸேப்டி இல்லையே என அவள் வருத்தப்பட்டதும்,
எனக்கு உலக மகா ஆச்சர்யங்கள் !!!!!

கரப்பானுக்கான பயம் அவள் கண்ணில் நிழலாடும்.
குளித்தவுடன் பூசும் பாடி லோஷன்
அவள் குழந்தைத்தன்மையை அதிகப்படுத்தும்.....

கரிய கூந்தல் கொண்ட பார்பி டாலாய்
தன் கரிய கண்களால் அவள் பார்க்கும் போது,
சேர்த்தணைத்து முத்தமிட்டால்,
பெரிய மனுஷிபோல முகம் காட்டுவாள்........

பெண் இல்லையே என்ற குறை தீர
என்னுடன் வாழவந்த பேரரசி!!!!!!

வளர் சிதை மாற்றத்தால் , இட மாற்றத்தால்
அவள் எனை மறந்தாலும்,
அவளுக்கான ஒரு இடம் என் மனதில் என்றென்றும்......!!!!

9 கருத்துகள் :

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//பேரன்பைப் பகிர்ந்து கொள்ளாத
பிற குழந்தைகளும் சில சமயம்
பரவசமடைகிறார்கள் பெருமூச்சுடன்

//

எத்தனை உண்மை இந்தக் கவிதையில்!!!

thenammailakshmanan சொன்னது…

welcome Abdulla
thanks for ur comments
when i wrote those lines i feel it and wrote it
now u also felt the same thing

VV சொன்னது…

I would like to write my comments here also.

"Abiyum Naanum" title mattume sollum aayiram kavithaikaL. Padikka padikka thigattaatha varigaL. Meendum Meendum padikka thoondum varigaL. Migavum naNdri Anni. Intha kavithaiyai Abi enRendRum pokkishamaaga vaithiruppaaL.

ungaL ezhthuppaNi thodarattum. En VazhthukkaL.

Anbudan,
Ungal Thambi.

தினேஷ் பாபு.ஜெ சொன்னது…

"வளர் சிதை மாற்றத்தால் , இட மாற்றத்தால்
அவள் எனை மறந்தாலும்,
அவளுக்கான ஒரு இடம் என் மனதில் என்றென்றும்......!!!!"


ம்........ இது ஒவ்வொரு மனதின் வார்த்தைகள்

thenammailakshmanan சொன்னது…

ThanksDHINESH BABU for ur comments

cheena (சீனா) சொன்னது…

அருமை அருமை - பெண் இல்லையே என்ற குறை தீர வந்த பேரரசி - அவளைப்பற்றிய வர்ணனைகள் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தவை - வெறும் பேனா நுனியில் இருந்து வந்தவை அல்ல

நன்று நன்று நல்வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

welcome vv thanks for ur coments
its from ur heart

so i too feel happy vv

thenammailakshmanan சொன்னது…

சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...