திங்கள், 27 ஜூலை, 2009

தன்னை அறிதல்

அவரவர்க்கான தேடலில் அவரவர்.
பால் சுயம்போ கல்கியோ ரோஸோ
இருப்பை வெளிப்படுத்தவேணும்
உரக்கச்சொல்ல வேண்டும்

இவர்கள் திருநங்கைகள்
உணர்வால் மங்கைகள்
உலகின் இறை சக்திகள்சங்கர நாராயணர்,
ஹரிஹரன்,அர்த்த நாரீஸ்வரர்என
ஒரு உடலில் இரு உணர்வும்
தன்னை அறிந்த ஞானமும்

பெண்களை விடப் பெண்மை மிகுந்தவர்கள்
இவர்களது பிறப்பு இறைப் பிறழ்வு அல்ல
அதை ஏற்றுக் கொள்ளாத நம் மனப்பிறழ்வு

எல்லா உயிரும் ஒன்று
அவரவருக்கான தேடலில் அவரவர்
அனைவரும் கண்டு அடையட்டும்

3 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

திருநங்கையர் பற்றிய அருமையான சிந்தனை - இறைப்பிறழ்வு அல்ல - மனப்பிறழ்வே

நல்வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

சீனா ஸார்
உங்க வாழ்த்துக்கு நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...