எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 ஜூலை, 2009

அம்மாவின் அன்பு

நான்கும் ஒன்று என்று சொன்னாலும்
சில சமயம் தெரிந்துவிடுகிறது
அம்மாவின் தனிப்பட்ட அன்பு.

ஒரு தட்டில் மட்டும் வீழும்
அதிகப்படியான முருகலும் வறுவலும்.

எந்த ஒரு தனித் திறமையும் வெல்வதில்லை
அவளின் மனச் சூலின் தேனை அருந்த
அவளாக மனம் வைத்தால் உண்டு.

எந்தத் தவறு செய்தாலும்
அவளுக்கான குழந்தை மட்டும்
மன்னிக்கப் பட்டு விடுகிறான்

ஒரு கள்ளப் புதையல் போல
கண்களின் ஒளிர்வும்
கன்னங்கள் அடக்கிய சிரிப்பும்
உயர்ந்த தோள்களும்
பெருமிதத் தலை அசைவும்
அரவணைக்கும் உடல் மொழியும்
காட்டிக் கொடுத்துவிடுகிறது அவளுக்கான குழந்தையை.

பேரன்பைப் பகிர்ந்து கொள்ளாத
பிற குழந்தைகளும் சில சமயம்
பரவசமடைகிறார்கள் பெருமூச்சுடன்

4 கருத்துகள்:

  1. I guess all parents may have this. In our house, it may be me I think - the kadaikkutty.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பிள்ளை செல்லப் பிள்ளையாகத்தான் இருக்கும் - அது வெளிப்படையாகத் தெரியாது - அம்மாவின் அன்பினைப் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்

    நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. சீனா ஸார்
    உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...