ராஜராஜன் காலத்துக்கும்
முற்பட்ட குரோதம் இது
தஞ்சையில் நாம் சிங்கள நாச்சியார்
திருக்கோயில் எழுப்பியுள்ளோம்
ஆனால் நம் சீதையைக் கூட
சிறை வைத்தவர்கள் அவர்கள்
வெலிக்கடைச் சிறையிலும்
முள்ளிவாய்க்காலிலும் மாளவும்
முள் வேலியில் பாழ் வெளியில்
வாழவுமா நாம் பிறந்தோம்?
புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லவேண்டியவர்கள்
யுத்தம் சரணம்,ரத்தம் சரணம்
என்றல்லவா சொல்கிறார்கள்
அதிகாரம் வேண்டாம்
ஆடைகள் தாருங்கள்
சுதந்திரம் வேண்டாம்
சோறாவது போடுங்கள்
அனைவருமே வந்தேறிகள் எனும்போது
தமிழர்க்கு மட்டும் ஏன் தலைக்குனிவு?
தந்தையும் தாயுமாய் மகன் மகளுடன்
வாழும் இன்பதைத் தாருங்கள்
சாதியால் இனத்தால் மட்டுமல்ல
மனித நேயத்தால் நாம் தமிழர்கள்
எண்ணங்களால் ஒன்று பட்டு
எம் தமிழர் மீண்டு வர நாம் கரம் கொடுப்போம்
முற்பட்ட குரோதம் இது
தஞ்சையில் நாம் சிங்கள நாச்சியார்
திருக்கோயில் எழுப்பியுள்ளோம்
ஆனால் நம் சீதையைக் கூட
சிறை வைத்தவர்கள் அவர்கள்
வெலிக்கடைச் சிறையிலும்
முள்ளிவாய்க்காலிலும் மாளவும்
முள் வேலியில் பாழ் வெளியில்
வாழவுமா நாம் பிறந்தோம்?
புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லவேண்டியவர்கள்
யுத்தம் சரணம்,ரத்தம் சரணம்
என்றல்லவா சொல்கிறார்கள்
அதிகாரம் வேண்டாம்
ஆடைகள் தாருங்கள்
சுதந்திரம் வேண்டாம்
சோறாவது போடுங்கள்
அனைவருமே வந்தேறிகள் எனும்போது
தமிழர்க்கு மட்டும் ஏன் தலைக்குனிவு?
தந்தையும் தாயுமாய் மகன் மகளுடன்
வாழும் இன்பதைத் தாருங்கள்
சாதியால் இனத்தால் மட்டுமல்ல
மனித நேயத்தால் நாம் தமிழர்கள்
எண்ணங்களால் ஒன்று பட்டு
எம் தமிழர் மீண்டு வர நாம் கரம் கொடுப்போம்
உண்மை நிலை - ஆதங்கம் வருத்தம் தொனிக்கும் கவிதை. அவர்கள் படும் பாடு என்று தான் தீருமோ
பதிலளிநீக்குநல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்
சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்கு”யுத்தம் சரணம்,ரத்தம் சரணம்” இந்த வரி “யுத்தம் சரணம், ரத்தம் மரணம்” என்றிருக்கலாமா?
பதிலளிநீக்குஅண்ணாமலையான் சொல்றது சரி
பதிலளிநீக்குஅண்ணாமலையான் சொன்னார் ஆனால் நான் படிக்கும்போது “யுத்தம் சரணம், ரத்தம் மரணம்” அப்படித்தான் படித்தேன் என்ன ஒரு ஒற்றுமை அண்ணாமலையான்.....
நன்றி அண்ணாமலையான் முதல் முதலா என் வலைத்தளத்துக்கு வர்றீங்க நன்றி
பதிலளிநீக்குஉங்க கருத்துக்களில் உண்மை இருக்கு
நன்றி சரவணன் நீங்களும் என் வலைத்தளத்துக்கு முதல்முதலாக வர்றீங்க நன்றி
பதிலளிநீக்குநாம் தமிழர்கள் சரவணன் அதனாலதான் எண்ணங்களால் ஒன்று பட்டு இருக்கோம்