எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2009

நாம் தமிழர்

ராஜராஜன் காலத்துக்கும்
முற்பட்ட குரோதம் இது

தஞ்சையில் நாம் சிங்கள நாச்சியார்
திருக்கோயில் எழுப்பியுள்ளோம்
ஆனால் நம் சீதையைக் கூட
சிறை வைத்தவர்கள் அவர்கள்

வெலிக்கடைச் சிறையிலும்
முள்ளிவாய்க்காலிலும் மாளவும்
முள் வேலியில் பாழ் வெளியில்
வாழவுமா நாம் பிறந்தோம்?

புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லவேண்டியவர்கள்
யுத்தம் சரணம்,ரத்தம் சரணம்
என்றல்லவா சொல்கிறார்கள்

அதிகாரம் வேண்டாம்
ஆடைகள் தாருங்கள்
சுதந்திரம் வேண்டாம்
சோறாவது போடுங்கள்

அனைவருமே வந்தேறிகள் எனும்போது
தமிழர்க்கு மட்டும் ஏன் தலைக்குனிவு?
தந்தையும் தாயுமாய் மகன் மகளுடன்
வாழும் இன்பதைத் தாருங்கள்

சாதியால் இனத்தால் மட்டுமல்ல
மனித நேயத்தால் நாம் தமிழர்கள்
எண்ணங்களால் ஒன்று பட்டு
எம் தமிழர் மீண்டு வர நாம் கரம் கொடுப்போம்

6 கருத்துகள்:

  1. உண்மை நிலை - ஆதங்கம் வருத்தம் தொனிக்கும் கவிதை. அவர்கள் படும் பாடு என்று தான் தீருமோ

    நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. சீனா ஸார் உங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. ”யுத்தம் சரணம்,ரத்தம் சரணம்” இந்த வரி “யுத்தம் சரணம், ரத்தம் மரணம்” என்றிருக்கலாமா?

    பதிலளிநீக்கு
  4. அண்ணாமலையான் சொல்றது சரி
    அண்ணாமலையான் சொன்னார் ஆனால் நான் படிக்கும்போது “யுத்தம் சரணம், ரத்தம் மரணம்” அப்படித்தான் படித்தேன் என்ன ஒரு ஒற்றுமை அண்ணாமலையான்.....

    பதிலளிநீக்கு
  5. நன்றி அண்ணாமலையான் முதல் முதலா என் வலைத்தளத்துக்கு வர்றீங்க நன்றி

    உங்க கருத்துக்களில் உண்மை இருக்கு

    பதிலளிநீக்கு
  6. நன்றி சரவணன் நீங்களும் என் வலைத்தளத்துக்கு முதல்முதலாக வர்றீங்க நன்றி
    நாம் தமிழர்கள் சரவணன் அதனாலதான் எண்ணங்களால் ஒன்று பட்டு இருக்கோம்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...