எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 நவம்பர், 2009

சப்பாத்திக் கள்ளிப்பூ

எனக்குப் பகையில்லை
எந்த மாநிலத்தோடும்
எந்த நதியோடும்....

யாவரும் கேளீர்...
தண்ணீரின்மையிலும்
தளிர்த்துக் கிடப்பேன்...

வேலியோரம்...
காய்ந்த வாய்க்காலோரம்...
தோட்டத்து எல்லைகளில்...
இயற்கை அரணாய்...

வேலிக்காத்தான்., முள்முருங்கை,
கருவேலம்., பிரண்டை,
சோற்றுக்கற்றாழையுடன்
காக்டஸாய் நானும்....

விரல் நக அளவில்
வெங்காயக் கலரில்
வாடாமல் நான்
பூத்துக் கிடப்பேன்...

மழையோ, வெய்யிலோ,
சூறாவளியோ
சூறாடுவதில்லை
என்னை எதுவும்...

உப்பளத்தில்
விளைந்த வெப்பிளம்
பிஞ்சு நான்...

நான்கு திணைகளிலும்
பூக்கும் பாலைத்
திணை நான்...

அத்தினி சித்தினி
பத்மினி தரங்கிணியில்
ஐந்தாவதாக
அம்பை நான்...

எனக்கான இடத்தில்
ஏகப்பட்ட முட்காவலர்களுடன்
நான் ...

யாரும் ரசிக்காமல்
குறையவில்லை
என் அழகும்
கம்பீரமும்...

பூத்தலும் சிரித்தலுமான
அரிய பிறப்பில்
நெகிழ்ந்து நான்

17 கருத்துகள்:

  1. உப்பளத்தில்
    விளைந்த வெப்பிளம்
    பிஞ்சு நான்...

    அய்யோ நான் நிறையா யோசிக்கணும் போல

    கவிதை முழுதும் சூப்பர்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு கவிதைக்கும் நீங்கள் பாடுபொருளாக வைக்கும் பூக்கள் அழகு
    :)

    ஆமாம் ஏன் உங்கள் வலைப்பூ பின் தொடரும் வசதியின்றி இருக்கின்றது???

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜய்
    உங்க தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  4. நன்றி எம் .எம். அப்துல்லா

    சீக்கிரம் செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. உப்பளத்தில்
    விளைந்த வெப்பிளம்
    பிஞ்சு நான்...

    அருமை!! வேறெப்படி உணர்த்த முடியும் ஒரு பூவின் அடர்ந்த மௌனத்தை... வெயில் குடித்து வளரும் பிறப்பை.....

    பதிலளிநீக்கு
  6. பெயர் காரைக்குடியை நினைவு படுத்துகிறது. சரியா? ரசித்து உள்வாங்கிய வரிகள். நன்றி. இராகவன் நைஜீரியா.

    தேவியர் இல்லம். திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  7. வவ்வால்கள் ஓசை மூலம் பறப்பதும்
    கண்டத்தட்டு நகர்வதும் உங்கள் வார்த்தைகளில் அருமை நேசன்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜோதிஜி

    துளசி தளம் அருமை ஜோதிஜி

    பதிலளிநீக்கு
  9. தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன் வாருங்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. யாரும் ரசிக்காமல்
    குறையவில்லை
    என் அழகும்
    கம்பீரமும்-உண்மையான வரிகள் மற்றவர்கள் ரசித்தால் தான் படைப்பா.ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு உன்னதம் .வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  11. விஜய்

    ராகவன் ஸார் அழைத்து உள்ளார் மணிகண்டனுக்கு அடுத்து..

    எனவே அவர் கொடுத்த பணியை முடித்த பின் உங்கள் தொடர் பதிவைத் தொடர்கிறேன் விஜய்

    உங்கள் அன்பிற்கும் அழைத்தமைக்கும் தொடர்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி சகோதரா

    பதிலளிநீக்கு
  12. வாங்க புலவர் புலிகேசி...

    நன்றி உங்க பின்னூட்டத்துக்கு..

    உங்கள் கவிதைகளும் அருமை புலவரே...

    பதிலளிநீக்கு
  13. வாங்க பாலா

    நன்றி உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும்...

    குருவி, அழைப்பு மணி ,உழை ,உடை என எல்லாமே அருமை பாலா

    பதிலளிநீக்கு
  14. தேனு எந்தப்பூவாக இருந்தாலும் உள்நுழைந்து அதன் தேன் எடுத்து எங்களுக்கும் தருகிறீர்கள்.
    நிறையப் பூக்கள் நான் அறியாத பூக்கள்.அதோடு அதை புரியாதவர்களுக்கும் விவரிக்கும் விதம் அழகு.அந்தப் பூவே கண்முன்னால் விரிகிறது.

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...