எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஆர்க்கிட்

என் முதல்
விமான பயணத்தில்
ஜிலீரென்று குளிர்வித்த
ஆர்க்கிட் நீ...

அநேக இதழ்களால்
நீ சிந்திய
அழகுப்புன்னகையில்
வசமிழந்தேன்...

என் ஒவ்வொரு
ப்ளைட் பயணத்திலும்
வெவ்வேறு உருவில் நீ ...

பின் தொடர்வதும்
எனக்குப் பணிவிடை
செய்வதும் ...

இலங்கைப் பயணத்தில்
சிகப்பு ஸ்கர்ட்டிலும்
மும்பை செல்லும் போது
புடவையிலும்...

எமிரேட்டில்
தலைக்குல்லாயில் இருந்து
சல்லாத்துணியில்
அரைமுகம்மறைத்து
அரபிக் கதையின்
லைலாவாகவும்...

என் வழித்துணையாகவும்
ஒவ்வொரு முறையும்
அன்றலர்ந்தது போல்...

என் ருசியறிந்து
பானம் கொடுத்து
வரவேற்று வழியனுப்பி...

உன்னைப் பிரிய
மனமில்லாமலே
பிரிகின்றேன்...

உன்னைப் பரிசளிக்கவே
பிறந்த ஆர்க்கிட்
பூ நீ ...

பிரிவோம்
[அடுத்த பயணத்தில்]
சந்திப்போம்...

11 கருத்துகள்:

  1. பறந்ததோ வானில்!

    மூழ்கியதோ உன் நினைவுகளில்..


    நல்லா இருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு
  2. // பிரிவோம்
    [அடுத்த பயணத்தில்]
    சந்திப்போம்... //

    பிரிவோம்... சந்திப்போம்....

    ஆர்கிட் அழகாகப் பூத்துள்ளது..

    பதிலளிநீக்கு
  3. "ஜிலீரென்று குளிர்வித்த" நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  4. அருமை ஆர்கிட் பூக்களின் வாசம்
    சில பெயர்கள் மட்டும் நினைவில் இருந்தும், சில முகங்கள் கனவுகளில் இருந்தும் விலகுவதில்லை அடுத்த பயணங்களில் முகங்களை தேடுவதும் உண்டு
    மிக நுண்ணிய உணர்வு மய்யத்தை சுற்றி வரும் சொற்களை கொண்ட கவிதைகள்

    பதிலளிநீக்கு
  5. இரும்புப் பறவைக்குள்
    சிறகில்லாப் பறவைகள்.
    அவர்களுக்கும் ஓர் ஆ(ஓ)ர்க்கிட்.

    தேனு பூ..பூ..பூக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மூன்றாம் பிறையும் அருமை
    நன்றி சந்தான சங்கர்

    பதிலளிநீக்கு
  7. //அருமையான நடை ராகவன்.எல்லோரையும் நீங்கள் அன்பு செய்கிறீர்களா,எல்லோரும் உங்களை கொண்டாடுகிறார்களா என பிரித்து பார்க்க முடியவில்லை.நேசனும் உங்களை சிலாகித்தார்-தொலை பேசியில்.சந்தோசமான மனிதரை பார்த்த சந்தோசம் இன்று!

    September 28, 2009 10:39 PM//

    congrats Raagavan...
    u r nearing to centum !!!!
    PA Raajaram said it correctly..
    I too join with him to praising u

    பதிலளிநீக்கு
  8. விமானப் பணிப்பெண்கள் பற்றி அடிக்கடி பயணம் செய்யும் நீங்கள் குறிப்பிட்டது உண்மை நேசமித்திரன்

    //அருமை ஆர்கிட் பூக்களின் வாசம்
    சில பெயர்கள் மட்டும் நினைவில் இருந்தும், சில முகங்கள் கனவுகளில் இருந்தும் விலகுவதில்லை அடுத்த பயணங்களில் முகங்களை தேடுவதும் உண்டு
    மிக நுண்ணிய உணர்வு மய்யத்தை சுற்றி வரும் சொற்களை கொண்ட கவிதைகள்//

    thanks for ur comments

    பதிலளிநீக்கு
  9. ஹேமா நானும் பயணத்தில்
    உங்கள் விமர்சனம் காணும் ஆவலில் வீடு அடைந்ததும்
    மடிக்கணினியைத்திறந்து பார்த்து மகிழ்வடைந்தேன்

    //இரும்புப் பறவைக்குள்
    சிறகில்லாப் பறவைகள்.
    அவர்களுக்கும் ஓர் ஆ(ஓ)ர்க்கிட் //



    எவ்வளவு சரியான புரிந்துணர்வு
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...