எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 21 அக்டோபர், 2013
ஞாயிறு, 20 அக்டோபர், 2013
ஒளி காட்டும் வழி.
ஒளி காட்டும் வழி.
********************
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.
உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.
நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .
********************
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.
உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.
நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .
சனி, 19 அக்டோபர், 2013
சாட்டர்டே ஜாலி கார்னர். ராமலெக்ஷ்மி ராஜனின் காமிரா காதலும் பள்ளிக்கூட நட்பும்.

பெண் பதிவர்களில் முக்கியமானவர், புகைப்படப் பதிவுகளுக்காக சிறப்பாக அறியப்பட்டவர் என்னுடைய தோழி ராமலெக்ஷ்மி ராஜன். கவிதை, கதை, கட்டுரைகள்ல அசத்தினாலும் இவரோட புகைப்படங்கள் ஒவ்வொண்ணும் கல்லில் வடித்த சிற்பங்கள் மாதிரி. பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார். இவர்கிட்ட நம்ம குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் கேக்கமுடியாது . அதே சமயம் நம்ம டாபிக்கை தொடவும் வேணும். எனவே இப்பிடி ஒரு கேள்வி கேட்டு பதிலை வாங்கினேன். :)
காமிராவை எப்போலேருந்து காதலிக்க ஆரம்பிச்சீங்க.. இது நடக்கும்னு நினைச்சீங்களா..?
வீட்டில பெரியவங்க பலரும் படமெடுப்பதில் ஆர்வமுள்ளவங்களா இருந்ததால இயல்பாவே எனக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவங்கல்லாம் எடுத்த படங்களே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது. +1 படிக்கும் போது யாஷிகா-D-யில் படமெடுக்க ஆரம்பிச்சேன். 120 ரோல் ஃப்லிமில் 12 படமே எடுக்க முடியும். அதுல ஒவ்வொரு படமும் எடுத்து முடிச்சதும் அடுத்த படம் எடுக்க ரோலை திருப்பணும். ஆரம்பத்துல அதுல தப்பு விட்டே 12-ல 4 கதை கந்தலாயிடும்:)!
சனி, 12 அக்டோபர், 2013
சாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் சங்கவியின் காதலா காதலா.
”இதழில் எழுதிய கவிதைகள் ” அப்பிடின்னு தில்லா புத்தகம் போட்டவர் நம்ம வலை உலக சகோ சதீஷ் சங்கவி. ( மனைவி விமலா ரொம்ப ரொம்ப நல்லவங்க .. ) சங்கவிகிட்ட உங்க முதல் காதல் எதுன்னு கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போட்டுருக்கேன். என்ன அக்குறும்புன்னா புள்ளயோட அப்பிராணி மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கிற சங்கவி ஒரு புள்ளய சுத்திச் சுத்திக் காதலிச்சுருக்காரு. இப்ப இல்ல.. அட அது சின்ன வயசுலப்பா..
வெள்ளி, 11 அக்டோபர், 2013
நடுவீட்டுக் கோலமும் பூக்களும் எம்பிராய்டரியில்.
வாசலில் போடும் பொடிக் கோலங்களையும் மாக்கோலங்களையும் துணியில் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும். இதை என் மாமா மகள் வள்ளிக்கண்ணு செயல்படுத்தி இருக்கிறார். அவரது ஒவ்வொரு புடவையும் டிசைனர்வேர்தான். அவரே டிசைன் செய்தது.
அவர் அணிந்து வரும் புடவைகளையும் ரவிக்கைகளையும் பார்த்து வியந்ததுண்டு. விதம் விதமான எம்பிராய்டரிகளில் அசத்தி இருக்கிறார்.
அவர் அணிந்து வரும் புடவைகளையும் ரவிக்கைகளையும் பார்த்து வியந்ததுண்டு. விதம் விதமான எம்பிராய்டரிகளில் அசத்தி இருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

