எனது பதினொன்றாவது நூல்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஒளி காட்டும் வழி.

ஒளி காட்டும் வழி.
********************
 கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.

உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.

நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .


அன்பைக் கொடுப்பது மட்டுமல்ல
சரி விகிதத்தில் எடுத்துக் கொள்வதும்
சரிசமம் அனைவருமென எண்ணுவதுமே
சமதர்மத்தின் ஒளி காட்டும் வழி.

ஓரிரு உயிர்களுக்கு மட்டுமல்ல
உலகம் முழுதுமுள்ள உயிர்களையும்
தன்னுயிராய்க் கருதுவதே
தாய்மையெனும் ஒளிகாட்டும் வழி..

டிஸ்கி:- ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்காக எழுதியது. 

9 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஒளிகாட்டும் வழியறிந்து எழுதிய கவிதை
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

தங்களின் கவிதை கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்....

போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய கவிதை...
வெற்றி பெற வாழ்த்துக்கள்

Sekar சொன்னது…

அருமை. வெற்றி கிடைத்ததா?

Sekar சொன்னது…

அருமை. வெற்றி கிடைத்ததா?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி ரமணி

நன்றி ரூபன்

நன்றி சௌந்தர்

சேகர் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Unknown சொன்னது…

யாதும் ஊரே யாவரும் கேளீர்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...