எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

எந்தன் முதல் கவிதை.. காவிரி மைந்தனுக்காக..

காவிரி மைந்தன் கண்ணதாசனின் தாசர்.. அவர் என் சகோதரனுக்கும் நண்பர். கண்ணதாசனைப் பற்றிப் பக்கம் பக்கமாக சொற்சுவையோடும் பொருட்சுவையோடும் பொருத்தி சிலாகித்து எழுதவும் பேசவும் ஆர்வமுள்ளவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் முதல் கவிதையை அனுப்பினேன்.

என் முதல் கவிதை கிட்டத்தட்ட 12 வயதில் எழுதி இருப்பேன். அது என் அப்பாவின் பிறந்த நாளுக்கான ஒரு வாழ்த்துப்பா.. அது எங்கள் பெரிய வீட்டின் சாமி அறையில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கு. அதன் வார்த்தைகள் சரிவர ஞாபகமில்லாததால் இதை அனுப்பினேன்..


////கல்லூரிப் பருவத்துக்குப் பின் திருமணமானவுடன் நான் எழுதுவதை மறந்துவிட்டேன். என் பிள்ளைகளின் கல்லூரிப் பருவத்தின்போது எனக்குள் ஏற்பட்ட வெறுமை நீங்க வலைத்தளம் ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். திரும்பவும் ஒரு படைப்பாளியாக என்னைக் கண்டடைந்ததில் பெரு மகிழ்வும் உவகையும் ஏற்பட்டது.

யாருக்காக வாழ்ந்தோம் எதற்காக வாழ்ந்தோம் நாம் வாழ்ந்ததில் அர்த்தம் இருக்கிறதா, நம் வாழ்க்கை இப்படியே போய்விடுமா என எண்ணி ஏங்கிய நேரத்தில் ஒரு பதிவராக என்னை உணர்ந்த நேரம்.. வாழ்விலும் நாம் கேட்டது கிட்டியிருக்கிறது. நிறைபட நேர்படத்தான் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதையே என் கவிதையிலும் பதிவு செய்திருக்கிறேன்.

கண்ணதாசன் சொன்னது போல அனுபவம் என்பதே கடவுள் என்று தோன்றியது. நன்றி..:)

ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

சாம்பலாகி விட்டோமென்று நினைத்தேன்,
உயிர்த்தெழுந்த போது தெரிந்தது நான்
ஒரு பீனிக்ஸ் பறவையென்று....!!!

புலங்கள் பெயரும் பறவை என இருந்தேன்....
கண்டம் விட்டுக் கண்டம் சென்று
கணங்கள் தோறும் அனுபவங்கள் சேகரித்தேன்....!!!!

விழித்துக் கொண்ட போது தெரிந்தது,
நான் வாழ நினைத்ததை விட
அற்புதமாய் வாழ்ந்து இருக்கிறேனென்று....!!!!!////

நன்றி காவிரி மைந்தன் & என் அன்பு சகோதரன் மெய்யப்பன்.

4 கருத்துகள்:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் வசந்தகாலம் இதயத்தில் துளிர்த்த அழகைக் கவிதையில் அழகுறச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...