புதன், 30 அக்டோபர், 2013

சங்கிலித்தொடர்..:-

 சங்கிலித்தொடர்..:-
*****************************
தாய் தந்தையுடன்
விடுமுறைக்கு உறவு வீடுகளுக்கு
வரும் குழந்தை அடம் பிடிக்கிறது.,
நினைத்ததைச் செய்ய.

அது சொல்பேச்சு கேக்க
கையைப்பிடித்தபடி
தாயோ, தந்தையோ,பின்புயத்தில் 
லேசாய் நிமிண்டுகிறார்கள்.


கண்ணீர் தளும்ப
மௌனமாகும் குழந்தை
யாரும் பார்க்காத நேரத்தில்
தனக்குக் கிடைத்த தண்டனையைத்
தன் தம்பியிடம் நிறைவேற்றுகிறது.

புன்னகை மாட்டி இருக்கும்
பெற்றோரின் செயல்கள்
பிள்ளைகளின் நடவடிக்கையால்
உடைந்து விடுகின்றன.

இன்னொரு புன்னகையை
அணியும் பெற்றோர்,
வேறொரு கண்மறைவு
வன்முறைக்குத் தயாராகிறார்கள்,
திருந்தும் நோக்கமற்று.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 15 - 31, 2013, அதீதத்தில் வெளிவந்தது

5 கருத்துகள் :

கீத மஞ்சரி சொன்னது…

குழந்தைகளிடம் வன்முறை எப்படி எவ்விதம் அதைப் பெற்றவர்களாலேயே விதைக்கப்படுகிறது என்பதை அழகாகச் சித்தரிக்கும் கவிதை. வினை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்ப்பது நம் தவறுதானே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை... நாம் திருந்த வேண்டும்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
நீங்கள் கவிதையில் சொன்ன வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மை கீத மஞ்சரி..

ஆம் தனபாலன்

நன்றி ரூபன். அனைவருக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...