குவாலியர் சூரியனார் கோவிலில் கோவிலே சூரியனின் ரதம் போல் அமைந்திருக்கும் அதிசயத்தோடு பல ஏக்கர் தூரத்துக்கு தோட்டமாய்க் காட்சி அளிக்கிறது. அங்கே யோகாப்யாசம், நடைப்பயிற்சி, தியானம் செய்பவர்களை அதிகாலையில் அதிகம் காணலாம்.
குவாலியர் நகரில் மொரார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். அதன் முன்புறம் இது. உள்ளே நீள் நடையில் சென்றால் பக்கவாட்டில் கோவில் இருக்கிறது. சுற்றிச் சென்று மேலேறினால் சூர்யப் ப்ரகாசத்தில் செந்நிறமாய் ஜொலிக்கிறது கோவில்.
எதிரே பசுமையாய் தோட்டம். லேசாய் வெம்மையோடு இருக்க மயில்களும் புறாக்களும் அகவுகின்றன, ஊடுகின்றன.
கல் பாவிய நீண்ட நடை. நடைப்பயிற்சி செய்வோருக்கு உறுதுணையாகிறது.
இந்த ப்ளாகர் மாறியதில் இருந்து ஃபோட்டோஸ் போட்டால் தலைகீழாக அப்லோட் ஆகிறது. எனவே எனக்காக கீழே இருந்து மேலே ஒருமுறை போஸ்டைப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நாம் கடைசியாக அப்லோட் செய்வது மேலேயும் முதலில் செய்வது கீழேயும் வருது. இதுக்கு தீர்வு யாராகிலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
எங்கே சூரிய காந்தியைக் காணோம்னு நீங்க கேப்பீங்கன்னு தெரியும்.இதோ வருது :)
சரி நீங்களும் ஒரு ரவுண்ட் காலாற நடந்து போய் அணில், மயில்,புறா எல்லாம் பார்த்துட்டு சூரியனையும் வணங்கிட்டு வாங்க :)
டிஸ்கி :-
இதையும் பாருங்க.
ஒரு விதத்தில் திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆசிரமத்தை நினைவூட்டியது.
பதிலளிநீக்குநானும் இங்கே சென்றிருக்கிறேன். நல்ல/அழகான இடம். படங்கள் மொத்தமாக பதிவேற்றினால் இப்படி பிரச்சனை வருகிறது. ஒவ்வொன்றாக பதிவேற்றும்போது பிரச்சனை வருவதில்லை.
பதிலளிநீக்குஇருக்கலாம் ஜம்பு சார். நாங்கள் ஒருமுறை கிரிவலம் சென்றபோது ஆசிரமத்தைப் பார்த்தோம். உள்ளே சென்று பார்க்கவில்லை.
பதிலளிநீக்குஐடியாவுக்கு நன்றி வெங்கட் சகோ. முயற்சிக்கிறேன்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!