எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

துபாய் - புர்ஜ் கலீஃபா.

துபாய் - புர்ஜ் கலீஃபா



 
















































 


துபாய் - புர்ஜ் கலீஃபா


புர்ஜ் கலீஃபா டவர்ஸ் துபாயில் நாங்கள் பார்த்த மறக்கமுடியாத டவர். உலகிலேயே மிக உயரமான டவர். அதைப் பற்றி முன்னொரு இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஸ்கந்தர் சஷ்டிக்காகப் போய்விட்டு வந்தபோது ( இந்தியன் பப்ளிக் ஸ்கூல், துபாயில் நடந்தது ). இந்தப் படங்களை எடுத்தேன்

அங்கே வில்லா எனப்படும் வீடுகள் மிக அழகான அமைக்கப்பட்டிருந்தன

அவை மட்டுமல்ல அங்கே இருந்த தோட்டங்களும் கவினுற கட்டமைக்கப்பட்டிருந்தன. பாலையிலும் பூக்கள். !!!

ஸ்கைக்ராப்பர்ஸ் எனப்படும் கட்டிடங்கள் துபாயில் அநேகம். ஒன்றை ஒன்று மிஞ்சும் உயரம். இவற்றில் புர்ஜ் கலீஃபா மிகவும் உயரம்வில்லாக்கள் எனப்படும் தனி வீடுகளின் முன் பக்கமும் கார் பார்க்கிங்கும்

கந்தர்சஷ்டி விழா நடந்த பள்ளியில் பிள்ளைகளின் கைவண்ணம்கந்தர் சஷ்டி பற்றியும் முன்னேயே சில இடுகைள் எழுதி உள்ளேன்

இது கல்ஃப் நியூஸ் அலுவலகம்மிக அழகான கருடன்/வல்லூறு/ராஜாளி/பருந்தை இதன் ஐகானாக வைத்துள்ளார்கள்இந்த அலுவலகத்தின் எதிரில் இன்னும் இரண்டு ஸ்கை ஸ்க்ராப்பர் கட்டிடங்கள்கல்ஃப் நியூஸ். :) இதுவும் அதே அலுவலகமே

இது வழியில் இருந்த ஒரு மசூதி. நம்மூர் போல ஒரு மினார் மட்டும் இருக்கு. ஆனால் தொழுகைச் சத்தம் எல்லாம் கேட்பதில்லை. அமைதியாக இருக்கும்

இது புர்ஜ் கலீஃபா பில்டிங்கின் தரைத்தளம். வித்யாசமாக இருந்தது என எடுத்தேன்இங்கேயே ஐஸ் ஸ்கீயிங், ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி விளையாட அமைக்கப்பட்ட ஐஸ் ரிங்க் தளம்சிறுவயதுப் பையன்கள் ப்ராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்கள்

இதோ இரவில் ஜொலிக்கும் ஒருகட்டிடம். புர்ஜ் கலீஃபாவின் அருகே அநேக கட்டிடங்கள்இரவின் மின்னும் வெளிச்சத்தில் நாற்கரச் சாலைகள் ஒளிவிடுகின்றன.

மேலேயிருந்து பார்க்கும்போது அற்புதக் காட்சிதான். 124 ஆவது மாடி!!!  கட்டிடமே கொஞ்சம் ஜெர்க் ஆவது போலிருக்கிறதுஎவ்வளவு தூரம் பரந்து விரிந்த நகரம்.!. பாலையில் பூத்த கட்டிடங்கள்அநேகமும் ஷாப்பிங் மால்கள்தான்

ஒரு மாடியில் வெளியே வர வாய்ப்புக் கிட்டியதும். நாம் ஏறிய புர்ஜ்கலிஃபாவின் மேற்புறத்தை இன்னும் எட்டியவரை க்ளிக்கினேன். :)

இது பற்றிய விவரங்கள் இங்கே. 200 மாடிக் கட்டிடம்.  12,000 ஆட்கள் வேலை செய்து கட்டியது.இன்னும் விபரங்களை மேலே குறிப்பிட்ட இணைப்பில் பாருங்கள்

அதன் மினியேச்சர் ஒன்று கீழே வைக்கப்பட்டிருக்கு. அதன் பக்கமிருந்து நானும் அம்மாவும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதைத் தனியாக ஒன்று எடுத்தேன்

மனிதர் கட்டிய கட்டிடங்களில்/ டவர்களில் துபாயில் இருக்கும் இந்த டவர்  உலக அதிசயங்களில் ஒன்றுதான். நிச்சயம் எல்லாருமே பார்க்கவேண்டிய அற்புதம்

5 கருத்துகள்:

  1. அழகான படங்கள். பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆர்வத்தை தூண்டும் பயணப் பதிவு

    பதிலளிநீக்கு
  3. அழகச்ன படங்களுடன் பதிவு.. இரண்டு தடவை துபாய்க்குச் சென்றும் இந்த அதிசயத்துக்குச் செல்லும் சூழல் அமைய வில்லை...
    மறுமுறை வாய்ப்பு கிட்டுமா - தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    நன்றி கஸ்தூரி ரங்கன் சார்

    நன்றி டிடி சகோ

    நன்றி துரை செல்வராஜு சார். நிச்சயம் கிட்டும். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...