எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கலைக்கண் !

 கண்கள் என்று தலைப்பிட்டு நான் எடுத்த முக்கியப் படங்களைத் ( !) தொகுத்திருந்தேன். கொரோனா காலத்தில் அவற்றை எல்லாம் ப்லாகில் போட்டுவிட்டு லாப்டாப்பை கனம் நீக்கும் முயற்சியா இங்கே பகிர்ந்துள்ளேன். 100 ஜிபி சேர்ந்தா திரும்ப இந்த லேப்டாப்பும் கோவிந்தாவாகிவிடுமே :) 

அம்மா வீட்டில் இருந்த பானை ஒன்று என் கலைக்கண் பட்டு உங்கள்முன் காட்சிப் பொருளாகிறது. இதைப் பார்த்தவுடன் பூங்காவில் குடத்தில் நீர் ஊற்றும் பெண் சிலை ஞாபகம் வருகிறதல்லவா. 


சூரிய அஸ்தமனம். 

இந்த முறையும் ஃபோட்டோக்கள் தலைகீழாகவே அப்லோட் ஆகின்றன. ஏன் என்று தெரிந்தவர் கமெண்டில் தெரிவிக்க வேண்டுகிறேன். 

கேரளத் தோழி ஒருவர் வீட்டில் கிறிஸ்மஸை வரவேற்க தொங்கவிட்டிருந்த கிறிஸ்மஸ் தாத்தா.

கொச்சுவெளி பீச்சில் விற்பனைக்குத் தொங்க வைக்கப்பட்டிருந்த டொனால்ட் டக்குகள் :) 


திருக்கடையூர் அபிராமி அம்பாள் சந்நிதி எதிரே உள்ள புல்வெளிப் பாதை. அதன் பக்கவாட்டில் நந்தவனம். 


அதே திருக்கடையூரில் கோவிலுக்காக கொண்டு வரப்பட்டிருந்த தோரணம் ( கூந்தல் ) . வெகு அழகாகப் பின்னி இருக்கிறாங்க இல்லியா :) 


வைத்தீஸ்வரன்கோவிலில் ஹோட்டல் சதாபிஷேகத்தில் ஒரு தோட்டம் உள்ளது. கார் பார்க்கிங் செய்யுமிடம். அங்கே உள்ள மேடையும் அங்கே விழுந்து கிடந்த வாதுமைக் கொட்டைகளும். சிறுபிள்ளையில் இவற்றை உடைத்துத் தின்றது ஞாபகம் வந்தது. 

பூம்புகார் கடற்கரை. உணர்வுகள் மோதுமிடம். அலை அடிக்கும் வேகத்தில் ஆவி பறக்கிறது. 


கோவிந்தபுரம் கோசாலையின் ( மாட்டுக்கொட்டகையின்) கவின் மிகு கைவேலைப்பாட்டுத் தட்டிகள்.


கார்த்திகைப் பூசைக்கு வந்த புதுமலர் 

கார்த்திகைப் பூசையில் சோறு முகக்கும் அன்னக்  கரண்டி. 

சூரிய உதயம் கும்பகோணம் பக்கம். 


ரயிலில் ஒரு நீயா நானா :) குட்டிச் சுட்டிகள். 

திருச்சி ஜங்ஷனின் ஒரு ரயில் விளையாட்டு. 

ரயிலுக்குள் விளையாடும் ஒரு குட்டிப் பெண். 

பழங்கள் உடலுக்கு நல்லதாமே. 


கைச்சங்கிலியும் கைப்பையும். கைச்சங்கிலின்னா ப்ரேஸ்லெட்டுங்க. இது மோதிகேரில் வாங்கியது. 

வெய்யிலுக்கு இதமாய் கொஞ்சம் நுங்கு சாப்பிடுங்க. பிடி நுங்கு இன்னும் ருசி. 

சிங்கை ரிச்சி ரிச் ரிசர்வாயரில் நான் பிடித்த இரண்டு மந்திகள். ஒரே மாதிரி அமர்ந்திருந்ததால் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. :) 


இது கேக்குத்தான்னு சொன்னா நம்பணும். சீஸ் கேக். கொஞ்சம் ஜாமாயிடுச்சு. 


இந்தியா டு சிங்கை அல்லது சிங்கை டு மலேஷியா ட்ரிப்பில் எடுத்தது. எடுத்த வருடம் 2010. ஹிஹி இவ்ளோ தாமதமா போஸ்ட் பண்றீங்கன்னு திட்டப்பிடாது. வேலைக்கு நடுவில இதெல்லாம் எழுத முடிந்ததே பெரிதுதான் :) 

இப்பிடி நம்மளை நாமளே பாராட்டிக்கிட்டு ஃபோட்டோகிராஃபர் கணக்கா மிடுக்கா போஸ்ட் பண்ணிட்டு ஓடிடணும். அப்புறம் பார்க்கிறவங்க பாடு. ப்லாக் பாடு. :) ஹேப்பி ஃபோட்டோகிராஃபர்ஸ் டே மக்காஸ். இது ஃபோட்டோகிராஃபர்ஸ் டே அன்னிக்கு எழுதினது. ஆனால் இப்பத்தான் வெளியாகுது. :) என் கண் கலைக்கண்தானே. அதை நீங்க ஒப்புக்குவீங்கன்னும் நம்புறேன். :)  

3 கருத்துகள்:

  1. படங்கள் அருமை...

    100 GB...!

    வலைப்பூ இருக்கும் போது கவலை ஏன்...?

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ. அதானே :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...